சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை பணிப்பெண்ணான ரிசானா நபீக்கின் ஜனாசா அந்த நாட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ரிசானாவின் ஜனாசாவை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரிக்கை விடுத்தது.
எனினும் சவுதி சட்டத்திற்கு அமைய சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென சவுதி அரசு அறிவித்துவிட்டது.
எனினும் சவுதி சட்டத்திற்கு அமைய சடலத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க முடியாதென சவுதி அரசு அறிவித்துவிட்டது.
இதனால் ரிசானாவின் ஜனாசா சவுதியிலேயே அடக்கம் செய்யப்பட்டதாக அங்குள்ள இலங்கை தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
4 வயது குழந்தையை கொலை செய்ததாக குற்றம் சுமத்தி மரண தண்டனை விதிக்கப்பட்ட ரிசானா நபீக் நேற்று கழுத்து வெட்டி கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.இலங்கை பணிப்பெண்னான ரிசானா நஃபீக் 2005 ஆம் ஆண்டில் தனது பராமரிப்பில் இருந்த குழந்தையை கொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், சவுதி அரேபிய அரசாங்கத்தினால் அவருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
4 மாத குழந்தையை கொலை செய்ததாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை ரிசானா நஃபீக் மறுத்திருந்தார்.
ரிசானா அந்தக் கொலையைச் செய்ததாகக் கூறப்படும் தருணத்தில் அவருக்கு 17 வயதுதான் என்றுபரவலாக நம்பப்படும் நிலையில், அந்தக் கொலை நடந்தபோது அவர் சட்டப்படி ஒரு சிறுமி மாத்திரமே
இந்த நிலையில், ரிசானாவை சிரச்சேதம் செய்ததற்காக, சவுதி அரசாங்கம் சர்வதேச சட்டங்களை மீறியதாக குற்றஞ்சாட்டப்பட முடியும் என்று சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் கூறுகின்றன.
நியாயமற்ற விசாரணை
8 வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்தச் சம்பவத்தில் அந்த 4 மாதக் குழந்தையைக் கொன்ற குற்றச்சாட்டை ரிசானா மறுத்திருந்தார். ஆரம்பகட்டத்தில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலம்கூட அழுத்தங்களின் கீழ், மொழி பெயர்ப்பு உதவியும் இல்லாமல் பெறப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
ஆனால், தற்போது 8 வருடங்களின் பின்னர் தனது விதி என்ன என்று எதுவும் தெரியாமல் இருந்த நிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
இலங்கையில் ரிசானாவின் குடும்பத்தினர் அந்தக் கொலை நடந்ததாகக் கூறப்படும் நேரத்தில் ரிசானாவுக்கு 17 வயது மத்திரமே என்றும், அவர் சட்டப்படி சிறுமி என்றும் அவரது ஆதரவாளர்களும், உறவினர்களும் கூறுகிறார்கள்.
இலங்கையின் கிழக்கே மூதூரில் உள்ள அவரது வீட்டுக்கு 2010 ஆம் ஆண்டில் பிபிசி நிருபர்கள் சென்ற போது, அவர் அந்தச் சம்பவம் நடந்தபோது சிறுமிதான் என்பதை நிரூபிக்கும் பள்ளிக்கூடப் பதிவு ஒன்றையும் நிருபர்களால் பார்க்க முடிந்தது.
அந்த பதிவுகளும், பிறப்புச் சான்றிதழும் உண்மையானால், அந்த கொலை நடந்ததாகக் கூறப்படும் சமயத்தில் அவருக்கு 17 வயது மாத்திரமே.
ஆகவே அவரை மரண தண்டனைக்கு உள்ளாக்கியதன் மூலம், சிறார்களின் சர்வதேச உரிமைகளை சவுதி அரசாங்கம் மீறியுள்ளது என்ற குற்றச்சாட்டு எழும்.
அவரது வயதை வேலைவாய்ப்பு முகவர் பொய்யாக மாற்றிக் கூறி அவருக்கு வேலை வாங்கிக் கொடுத்திருப்பதாகத் தெரிகிறது.
இலங்கை ஜனாதிபதியாலும், ஏனைய அதிகாரிகளாலும் மற்றும் சர்வதேச மனித உரிமைக் குழுக்களாலும் அவருக்கு மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுவந்தது.
ஆனால், மேற்கத்தைய அரசாங்கங்களின் அனுசரணையுடனான சவுதி அரசாங்கத்தின் முடிவில், இந்தக் கோரிக்கைகள் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்படவில்லை என்று தெரிகிறது. ஏனென்றால் சவுதி மன்னர்தான் இந்த மரண தண்டனை நிறைவேற்றத்துக்கான உத்தரவில் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
முன்னதாக, மரண தண்டனை விதிக்கப்பட்டாலும், இறந்த குழந்தையின் பெற்றோர் மன்னிப்பளித்தால் ரிசானா மரண தண்டனையில் இருந்து தப்பிக்கலாம் என்ற நிலை இருந்தது. ஆனால் அவர்கள் மன்னிப்பளிக்க மறுத்து விட்டதாக ரிசானாவின் சார்பில் செயற்பட்டவர்கள் முன்னர் பிபிசிக்கு கூறியிருந்தனர்.
சவுதி அரசாங்கத்தின் மீடு குற்றச்சாட்டு
சவுதி அரேபியா என்றும் அமெரிக்கர்களையோ அல்லது ஐரோப்பியர்களையோ கொல்வதில்லை என்றும் அது ஆசியர்களையும், ஆப்பிரிக்கர்களையுந்தான் கொலை செய்வதாகவும் கூறியுள்ள வெளிநாட்டுப் பணியாளர்களின் நலனுக்காகக் குரல்கொடுக்கும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரான ரஞ்ஜன் ராமநாயக்க, சவுதி அரசாங்கம் ஒரு சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.
சவுதி அரசினால் நிறைவேற்றப்பட்ட இந்த மரண தண்டனை, இலங்கையில் உள்ளூரில் மரண தண்டனையை மீண்டும் நிறைவேற்ற ஆரம்பிக்கக் கூடாது என்ற சிவில் சமூக கோரிக்கையை வலுப்படுத்தச் செய்யும்.
அத்துடன் மத்திய கிழக்கில் பணியாற்றும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்தும், ரிசானா போன்று பல இலங்கையர்களை வெளிநாடுகளுக்கு பணியாளர்களாகத் துரத்தும் இலங்கையில் உள்ள வறுமை குறித்தும் வாதப் பிரதி வாதங்களை இது மீண்டும் அதிகரிக்கச் செய்யும்.ஜனாதிபதி கண்டனம்
சவூதி அரேபியாவில், இலங்கை பணிப்பெண் ரிசானா நபீக் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ரிசானாவின் விடுதலைக்காகா பல எதிர்ப்புகளை மேற்கொண்டோம். கோரிக்கைகளையும் முன்வைத்தோம். எனினும் ரிசானாவுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரிய செயலாகும். இதேவேளை ரிசானாவின் குடும்பத்தினர்களுக்கு ஜனாதிபதி ராஜபக்ஷவும் அரசாங்கமும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
அந்தக்குழந்தை எப்படி இறந்தது என்பதற்கான எந்தவிதமான விளக்கமுமில்லாமல் இறந்த குழந்தையின் பெற்றோரின் தகவல்களுடன் றஷினா கொலைகாரியாக்கப் பட்டார்.
றஷினாவின் பிறந்த திகதி 4.2.1988. அப்படியானால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டபோது அவரின் வயது பதினேழு. சுவதி அரேபியச் சட்டத்தின்படி வயது குறைந்தவர்களுக்கு மரண தண்டனையில்லை. ஆனால். றஷினாவில் பாஸ்போர்ட்டில் அவரின் பிறந்த திகதி 02.02.1982ம் ஆண்டு என்று போட்டிருந்ததால், றஷினாவின் தலைவிதி இன்று நடந்த கொடுமைச் சம்பவத்தில்; முடிந்திருக்கிறது.
றஷினாவின் நிலையைக் கேள்விப்பட்ட பல்லாயிரக்கணக்கான நல்ல மனிதர்கள் அவரின் விடுதலைக்காகக் கடந்த பல்லாண்டுகளாகப் போராடினோம். இலங்கையரசும் பல தடவைகளில் பற்பல முயற்சிகளையும் செய்தார்கள். ஆனாலும் இன்று நடந்த விடயம் தாங்கவொண்ணாத் துயரைத் தருகிறது. எப்படியும் றஷினா விடுதலை செய்யப்படுவார் என்று நான் மனதார நம்பினேன்.
இலங்கையிற் பிறந்த ஏழைப்பெண்கள் கிட்டத்தட்ட 500.000 பல நாடுகளிலும் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனுப்பும் பலகோடி டாலர்ஸ்கள் இலங்கையின் திறைசேரியை நிரப்புகிறது. எப்படியும் வெளிநாடு சென்று தங்கள் ஏழ்மைக் குடுப்பத்துக்கு உதவ நினைக்கும் பல பெண்கள் சொல்லமுடியாத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
றஷினாவின் பரிதாப சரித்திரத்துக்கு, அவரின் பிறப்புச்சானிறிதழை மோசடி செய்த கொழும்பிலுள்ள ட்ரவல் ஏஜென்சிக்காரர்கள், சரியான விசாரணை செய்யாமல் (இறந்த குழந்தையின் போஸ்ட்மோர்டடம் நடக்கவில்லை என்பது வதந்தியாகவிருந்தது) கொலைக்குற்றம் சாட்டிய சட்ட முறைகள், அத்துடன் தொடர்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சவுதிஅரேபியாவின் இரக்கமற்ற முடிவும் ஒரு ஏழைப்பெண்ணைப் பலி கொண்டு விட்டது.
2005ம் ஆண்டிலிருந்து இதுவரை எத்தனையோ எத்தனங்கள் பற்பல விதத்தில் அவரின் விடுதலைக்காக எடுக்கப்பட்டன. உலகம் பரந்த விதத்தில் பல மனித உரிமை ஸ்தாபனங்கள் றிஷானாவின் விடுதலைக்குப் போராடின.
சாதாரண மக்களாகிய பல்லாயிரக்கணக்கானவர்கள் றஷினாவின் விடுதலைக்கு உலகப் பரந்த விதத்தில் பிரசாரம் செய்தோம். இறந்த குழந்தையின் பெற்றோரிடம் பாவமன்னிப்புக்கேட்டுக் கெஞ்சினோம். அத்தனையும் இரக்கமற்ற சவுதி அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் றஷினா இவ்வுலகிலிருந்து இன்று மதிய நேரம் (09.01.13) பிரிக்கப்பட்டுவிட்டாள்.
இது நாகிரீக உலகில் நடக்கும் மன்னிக்க முடியாத தண்டனைகள்.
றஷினாவை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். றஷினாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேணடுவோம்.
இராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம்.
2005ம் ஆண்டு வைகாசி மாதம், மூதுரைச் சொந்தவிடமாகக் கொண்ட பதினேழு வயதான றஷினா நவிக் என்ற ஏழைப் பெண் சவுதி அNபியாவிலுள்ள ஒரு குடும்பத்துக்குப் பணிப் பெண்ணாகச் சென்றார். வேலைக்குச் சென்ற ஒரு மாதத்திலிலேயே, அவரின் பராமரிப்பிலிருந்த நான்கு மாதக்குழந்தையைக் கொலை செய்ததாக்குற்றம் சாட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார். குழந்தைக்குப்பால் கொடுக்கும்போது குழந்தையின் தொண்டையில் பால் அடைத்துக்கொண்டதால் மூச்சுத்திணறி குழந்தை இறந்ததாகவும் அதற்குக்காரணம் றஷினா என்றும் குற்றம் சாட்டப்பட்டார்.அந்தக்குழந்தை எப்படி இறந்தது என்பதற்கான எந்தவிதமான விளக்கமுமில்லாமல் இறந்த குழந்தையின் பெற்றோரின் தகவல்களுடன் றஷினா கொலைகாரியாக்கப் பட்டார்.
றஷினாவின் பிறந்த திகதி 4.2.1988. அப்படியானால் கொலைக்குற்றம் சாட்டப்பட்டபோது அவரின் வயது பதினேழு. சுவதி அரேபியச் சட்டத்தின்படி வயது குறைந்தவர்களுக்கு மரண தண்டனையில்லை. ஆனால். றஷினாவில் பாஸ்போர்ட்டில் அவரின் பிறந்த திகதி 02.02.1982ம் ஆண்டு என்று போட்டிருந்ததால், றஷினாவின் தலைவிதி இன்று நடந்த கொடுமைச் சம்பவத்தில்; முடிந்திருக்கிறது.
றஷினாவின் நிலையைக் கேள்விப்பட்ட பல்லாயிரக்கணக்கான நல்ல மனிதர்கள் அவரின் விடுதலைக்காகக் கடந்த பல்லாண்டுகளாகப் போராடினோம். இலங்கையரசும் பல தடவைகளில் பற்பல முயற்சிகளையும் செய்தார்கள். ஆனாலும் இன்று நடந்த விடயம் தாங்கவொண்ணாத் துயரைத் தருகிறது. எப்படியும் றஷினா விடுதலை செய்யப்படுவார் என்று நான் மனதார நம்பினேன்.
இலங்கையிற் பிறந்த ஏழைப்பெண்கள் கிட்டத்தட்ட 500.000 பல நாடுகளிலும் வேலை செய்கிறார்கள் இவர்கள் அனுப்பும் பலகோடி டாலர்ஸ்கள் இலங்கையின் திறைசேரியை நிரப்புகிறது. எப்படியும் வெளிநாடு சென்று தங்கள் ஏழ்மைக் குடுப்பத்துக்கு உதவ நினைக்கும் பல பெண்கள் சொல்லமுடியாத் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்.
றஷினாவின் பரிதாப சரித்திரத்துக்கு, அவரின் பிறப்புச்சானிறிதழை மோசடி செய்த கொழும்பிலுள்ள ட்ரவல் ஏஜென்சிக்காரர்கள், சரியான விசாரணை செய்யாமல் (இறந்த குழந்தையின் போஸ்ட்மோர்டடம் நடக்கவில்லை என்பது வதந்தியாகவிருந்தது) கொலைக்குற்றம் சாட்டிய சட்ட முறைகள், அத்துடன் தொடர்ந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளும், சவுதிஅரேபியாவின் இரக்கமற்ற முடிவும் ஒரு ஏழைப்பெண்ணைப் பலி கொண்டு விட்டது.
2005ம் ஆண்டிலிருந்து இதுவரை எத்தனையோ எத்தனங்கள் பற்பல விதத்தில் அவரின் விடுதலைக்காக எடுக்கப்பட்டன. உலகம் பரந்த விதத்தில் பல மனித உரிமை ஸ்தாபனங்கள் றிஷானாவின் விடுதலைக்குப் போராடின.
சாதாரண மக்களாகிய பல்லாயிரக்கணக்கானவர்கள் றஷினாவின் விடுதலைக்கு உலகப் பரந்த விதத்தில் பிரசாரம் செய்தோம். இறந்த குழந்தையின் பெற்றோரிடம் பாவமன்னிப்புக்கேட்டுக் கெஞ்சினோம். அத்தனையும் இரக்கமற்ற சவுதி அரசால் ஏற்றுக்கொள்ளப்படாமல் றஷினா இவ்வுலகிலிருந்து இன்று மதிய நேரம் (09.01.13) பிரிக்கப்பட்டுவிட்டாள்.
இது நாகிரீக உலகில் நடக்கும் மன்னிக்க முடியாத தண்டனைகள்.
றஷினாவை இழந்து தவிக்கும் அவரின் பெற்றோருக்கும் குடும்பத்தினருக்கும் எனது மனமார்ந்த அனுதாபங்கள் உரித்தாகட்டும். றஷினாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேணடுவோம்.
Aucun commentaire:
Enregistrer un commentaire