போர்நிறுத்த ஒப்பந்தத்தினை பாகிஸ்தான் மீறவில்லை. இதனால் , இந்தியா-பாக். இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில் பாதிப்பு ஏற்படாது என வெளியுறவுத்துறை அமைச்சர் ரப்பானி கூறினார். இந்திய எல்லைக்குள், 100 மீட்டர் தூரம் வரை, பாகிஸ்தான் ராணுவத்தினர் ஊடுருவி, இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், ஹேம்ராஜ், சுதாகர் சிங் என்ற, இரண்டு இந்திய வீரர்கள் பரிதாபமாக பலியாகினர்.இதில், ஒருவரின் தலையை, பாகிஸ்தான் ராணுவத்தினர் துண்டித்தனர். பாக்.கி்ன் இந்த கொடூர செயலுக்காக பாக். தூதரை நேரில் அழைத்து இந்தியா கண்டனம் தெரிவித்தது.
போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படவில்லை
இந்நிலையில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கவுர் (39) நேற்று, இஸ்லாமாபாத் நகரில் வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: எல்லைகட்டுப்பாட்டு கோட்டில் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை பாகிஸ்தான் மீறவில்லை. பாகிஸ்தான் அரசும், மக்களும் இந்தியாவுடனான உறவினை மேம்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இந்தியாவுடன் நம்பிக்கையை உருவாக்கும் முயற்சியில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது. தவிர கடந்த 4ஆண்டுகளாக இந்தியாவுடனான வர்த்த உறவை மேம்படுத்துதல், விசா நடைமுறை தளரர்த்துதல் போன்ற நம்பிக்கையூட்டும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டது.
அப்படியிருக்கையில், பாகிஸ்தான் ஒரு போதும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை.அதற்காக இந்தியா-பாக். இடையேயான நட்புறவிலும், அமைதி பேச்சுவார்த்தையிலும் எந்த பாதிப்போ, ஏற்படாது என நம்புகிறேன். இது தொடர்பாக ஐ.நா. விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவிற்கு கோரிக்கை விடுத்துள்ளோம். இவ்வாறு ரப்பானி கூறினார்.இதற்கிடையே பாகிஸ்தான் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது.

நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்: பா.ஜ.
பா.ஜ. செய்தி தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன் கூறியதாவது: எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அட்டூழியத்தால் இரு இந்திய ஜவான்கள் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். இந்திய ஜவான்கள் ஒரு துளி ரத்தம் சிந்துவதை ஏற்றுக்கொள்ளமாட்டோம். பாக்.கின் இந்த செயலை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் பா.ஜ. சார்பில் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஹசாரே ஆவேசம்:
சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கூறியதாவது: இந்திய வீரர்களை கொல்ல பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு என்ன துணிச்சல், இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும். கடந்த 1965ம்- ஆண்டு இந்தியா-பாக்.போரின் போது லாகூர் மீது இந்தியா குண்டுவீசி தாக்கியது. அப்போது பாகிஸ்தான் இந்தியாவிடம் மன்றாடியது. அது போன்று பதிலடி கொடுத்து பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். இவ்வாறு ஹசாரே கூறினார்.

பாக். மூத்த குடியினருக்கு விசா வழங்குவதில் இந்தியா தாராளம்
இதற்கிடையே பாகிஸ்தானைச் சேர்ந்த மூத்த குடிமக்களுக்கு தாராள விசா வழங்கிட இந்தியா முடிவு செய்துள்ளது. 65 வயதினை கடந்த பாகிஸ்தானியர்கள் இந்திய-பாக். எல்லைப்பகுதியில் உரிய கட்டணங்களை செலுத்தி விசா பெற்று இந்தியாவிற்குள் தாரளமாக வரலாம். எனினும் அவர்கள் பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்குள் தங்க அனுமதியில்லை
Aucun commentaire:
Enregistrer un commentaire