dimanche 13 janvier 2013

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அலுவலகத்தில் வெடிமருந்துகள், ஆபாச வீடியோ சீ.டி, ஆணுறைகள் மீட்பு


கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனின் அலுவலகத்திலிருந்து நேற்று சீ-4 ரக வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரசாந்த் ஜயகொடி தெரிவித்தார். இச்சம்பவத்தினையடுத்து சிறிதரன் எம்.பி.யின் பிரத்தியேக செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரது அலுவலகத்திலிருந்த மேலும் இருவரை தீவிர விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் கிளிநொச்சியிலுள்ள குறித்த அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது 350 கிறாம் நிறையுடைய சீ-4 ரக வெடிமருந்துகளும், பல்வேறு ஆவணங்கள் சேமித்து வைக்கப்பட்ட இரு மடி கணனிகளும், ஆபாச வீடியோ ஒளிப்பதிவு செய்யப்பட்ட சீ.டி.க்களும், ஆணுறைகளும் மற்றும் யுவதிகளின் புகைப்படங்களும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றன.

Aucun commentaire:

Enregistrer un commentaire