ஷிராணி பண்டாரநாயக்கவின் பிரதம நீதியரசர் பதவி விலகல் கடிதம் கிடைக்கப் பெற்ற போதும் அவர் பதவியிலிருந்து விலகுவதற்குத் தயார் இல்லை என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி ஷிராணி பண்டாரநாயக்க பிரதம நீதியரசர் தற்போதும் என்ற வகையில் அவர் தனக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு சட்டரீதியாக பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தன் மீதான குற்றப் பிரேரணை மற்றும் பதவி நீக்கம் செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என சர்வதேச ரீதியாக கட்டணங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் பதவி விலகலை ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் வாரத்தில் ஷிராணி பண்டாரநாயக்க நீதியரசர் குழுத் தலைவராக வழக்கு விசாரணைகளின் போது சமூகமளிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்படி எதிர்வரும் 15 மற்றும் 17ஆம் திகதிகளில் இடம்பெறும் வழக்கு விசாரணைகளில் சமூகமளிக்கவுள்ளதாக பதியப்பட்டுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire