உலகில் முதன் முதலாக அமைக்கப்பட்ட சுரங்க பாதை நேற்று 150 வது ஆண்டு நிறைவை கொண்டாடியது.உலகிலேயே முதன் முறையாக லண்டனில் சுரங்க ரயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 1863 ம் ஆண்டு ஜனவரி மாதம் 10ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட ரயில் பாதைக்கு நேற்று 150 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாடப்பட்டது.
ஆரம்பத்தில் மிக குறைந்த தூரத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரயில் பாதை தற்போது 402 கிலோமீற்றர் நீளத்திற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.லண்டன் டியூப் என்றழைக்கப்படும் இந்த சுரங்கப் பாதையின் வழியாக ஆண்டொன்றுக்கு லட்சம் கோடி பேர் பயணிக்கின்றனர்.இந்த பாதையின் 150 வது ஆண்டை நினைவூட்டும் விதமாக தொடக்க காலத்தில் இயக்கப்பட்ட நீராவி என்ஜினுடன் கூடிய ரயில்களை வரும் 13ம் திகதி இயக்க லண்டன் நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது
Aucun commentaire:
Enregistrer un commentaire