samedi 12 janvier 2013

வீ.ஆனந்த சங்கரி கண்டனம் ரிசானாவிற்கு மரண தண்டனை வழங்கப்பட்டமைக்கு

சவுதி அரேபியாவில் ரிசானா நபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

   ரிசானாவிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட தகவல் அதிருச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு வறுமையில் உழலும் பல பெண்கள் துன்பியல் அனுபவங்களை எதிர்நோக்கி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

   மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான ஓர் நிலைமையில் அரசாங்கம் தேவையற்ற செலவுகளை செய்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். 

Aucun commentaire:

Enregistrer un commentaire