jeudi 3 janvier 2013

எல்லாளன் படை” விடுத்த இணைய அறிக்கையைக் கண்டிக்கும் புலிகளின் மற்றொரு அணியான “வெளிநாட்டு நெடியவன்”அணி.



விடுதலை புலிகள் நெடியவன் அணியின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும், விடுதலைப்புலிகளின் மற்றொரு பிரிவான “எல்லாளன் படை” ‘இறுதி எச்சரிக்கை’ விடுத்திருப்பது தொடர்பாக அறிக்கை விடுத்துள்ள விடுதலைபுலிகள் நெடியவன் அணியின் (தமிழர் மனித உரிமைகள் பேரவை) கிளை அமைப்பு, “தேசியத் தலைவர் பிரபாகரனுக்கு, எல்லாளன் படையின் பின்னணியில் உள்ள தளபதி உயிருடன் உள்ள விஷயம் தெரியுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.
ஐரோப்பாவில் இருந்து இயங்கும் விடுதலை புலிகள் நெடியவன் அணியின் கிளை அமைப்புகளில் ஒன்றான தமிழர் மனித உரிமைகள் பேரவை விடுத்துள்ள அறிக்கையில், “சமீபத்தில் எல்லாளன் படை, விடுதலைப் புலிகளின் 5 தளபதிகளுக்கும், அரசியல் ஆலோசகருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது. இந்த எல்லாளன் படையின் பின்னணியில், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்த ஒரு தளபதி இருப்பதாக தெரிய வருகிறது.
அந்த தளபதி, இறுதி யுத்தத்தின் போது எப்படி தப்பி வெளியேறினார் என்று சொல்ல முடியுமா? அவர் உயிருடன் உள்ள விஷயம் தேசியத் தலைவருக்கு தெரியுமா? தேசியத் தலைவருக்கு தெரியாமல், அவரது அனுமதி பெறாமல் இந்த தளபதி தனது இஷ்டத்துக்கு எச்சரிக்கை விடுவது ஏன்? அந்த முன்னாள் தளபதி துரோகிகள் பட்டியலில் இணைந்து விட்டாரா?
இந்த இறுதி எச்சரிக்கை அறிவிப்பு தேசியத் தலைவரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு விட்டது. அதன் விளைவுகள் ஓரிரு நாட்களில் தெரியவரும்” என்று கூறப்பட்டுள்ளது.!!!
இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள்? இவர்கள் துரோகி பட்டியலில் இணைக்க முயலும் அந்த ‘முன்னாள்’ தளபதி யார்?…

Aucun commentaire:

Enregistrer un commentaire