samedi 31 mars 2012
விசாகப்பட்டினத்தில் 75 நக்சலைட்கள் சரண் அடைந்தனர்.
ஆந்திராவில் சில மாவட்டங்களில் நக்சலைட் ஆதிக்கம் உள்ளது. அவர்களை சரணடைய செய்ய மாநில அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துள்ளது. இதையடுத்து, விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்த 75 நக்சலைட்கள், டிஐஜி சவுமியா மிஸ்ரா முன்னிலையில் நேற்று ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இது பற்றி சவுமியா அளித்த பேட்டியில், ‘‘சரணடைந்த நக்சலைட்களில் 8 பேர் முக்கியமானவர்கள். லம்பாசிங்கில் கடந்தாண்டு நவம்பர் 11ம் பிஎஸ்என்எல் கோபுரத்தை வெடிவைத்து தகர்த்தது, செர்லபள்ளியில் கடந்தாண்டு டிசம்பரில் ஆந்திர வனத்துறை மேம்பாட்டுக் கழக குடியிருப்பை எரித்தது, ராலகெடாவில் இந்தாண்டு பிப்ரவரியில் போலீசார் மீது தாக்குதல் நடத்தியது ஆகிய சம்பவங்களில் இவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். சரணடைந்த நக்சலைட்கள் வன்முறையை பாதையை கைவிட்டுள்ளனர். ஒழுக்கமாக வாழும் வரையில், இவர்கள் மீதான எந்த வழக்கின் மீதும் போலீசார் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். இவர்களின் மறுவாழ்வுக்கு தேவையான அனைத்து உதவிகளும் அளிக்கப்படும்’’ என்றார்.
சரணடைந்த நக்சலைட்களில் பிரேம் சிங், கங்கராஜு ஆகியோர் கூறுகையில், ‘‘கட்டாயத்தின் பேரில் வன்முறை செயல்களில் ஈடுபட்டோம்’’ என்று கவலை தெரிவித்தனர்.
தமிழர்களின் நிலையை ஆய்வு செய்வதற்கென அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு அடுத்த மாதம் இலங்கை
இலங்கையில் தமிழர் நிலையைக் கண்டறிய எம்.பிக்கள் குழு ஒன்றை அனுப்பும் யோசனையை கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பா.ஜ.க. மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதனை ஏற்று மத்திய அரசு, கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி அனைத்துக்கட்சிக் குழுவை இலங்கை அனுப்புவதாக இருந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த பயணம், அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இக்குழு அடுத்த மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இலங்கையில் தமிழர் வாழும் இடங்களில் ஆய்வு செய்கிறது.
போருக்குப் பின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களின் வாழ்க்கை நிலை, மறு குடியேற்றப் பணிகள் ஆகியவை குறித்து தமிழர்களிடம் எம்பிக்கள் குழு நேரில் கேட்டறியும் எனவும் இந்திய அரசின் நிதியுதவியுடன் அங்கு நடைபெறும் வீடு கட்டும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளையும் எம் பிக்கள் குழு ஆய்வு செய்யவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
அகிம்சை வாதிக்கு ஆயுதவாதிகளும் மரியாதை
மூத்த அறிஞர் தந்தை செல்வநாயகத்தின் 114 ஆவது ஜனன தின நிகழ்வு தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் தலைமையில் இன்று சனிக்கிழமை யாழ்ப்பாணம் நாவலர் வீதியிலுள்ள நாவலர் கலாசார மண்டபத்தில் பிற்பகல் 3 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இதில், எம்.பி.க்களான மாவை சோ.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரும் க.சிற்றம்பலம் எம்.பிக்களான சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம் மற்றும் சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, றெமீடியஸ் (யாழ் மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர்), இரா.சங்கையா (நிர்வாகச் செயலாளர்) த.வி. கூட்டணி ஆகியோர் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏனைய கல்லூரிகளின் முதல்வர்கள் மாணவர்கள், அரச ஊழியர்கள் வர்த்தக பிரமுகர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் வண்ணம் தமிழர் விடுதலை கூட்டணி அன்புடன் அழைக்கின்றது என்று ஏற்பாட்டுக் குழு விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
jeudi 29 mars 2012
பகிஷ்கரிப்போமானால் முதலில் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டிவரும் -
இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்போமானால் முதலில் இங்குள்ள புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டிவரும். ஏனெனில், புத்த தர்மம் எமக்கு இந்தியாவிலிருந்தே வந்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கையை கையாள்வதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. எமக்கெதிராக நிபுணர்குழு அமைக்காது. அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவராது என வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உறுதிமொழிகளை வழங்கினார்.
ஆனால், இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்டது. அரசாங்கத்திற்கு இராஜதந்திர ரீதியான எதிர்காலத் திட்டம் கிடையாது. இதுவே இன்றைய நிலைமைக்கு காரணமாகும். இது நாட்டுக்கு எதிரான பிரச்சினையல்ல. அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் அரசுக்கு எதிராகவே இப்பிரச்சினை எழுந்துள்ளது.
எனவே, அரசாங்கமே இதற்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் இராஜதந்திரம் கிடையாது. சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்துள்ளோம். அந்நாட்டின் உதவி எமக்கு அவசியம் தேவையாகும். ஆனால் இன்றைய அரசாங்கத்தால் இந்தியாவின் நட்புறவை பெற முடியவில்லை. இது எமது வெளிவிவகாரக் கொள்கையின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறானதோர் தருணத்தில் அமெரிக்கா, இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறும் இந்நாடுகளுக்கு எதிரான மன நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறும் சில அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு நாம் இந்தியப் பொருட்களை பகிஷ்கக்கும் பட்சத்தில் முதலில் புத்தர் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டி வரும். ஏனென்றால் புத்த தர்மம் இந்தியாவிலிருந்தே எமக்கு கிடைத்தது. எனவே அரசாங்கத்தின் இருப்புக்காக மக்களை ஏமாற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும். ஆட்சியதிகாரத்தை பற்றி நினைக்காது நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
mercredi 28 mars 2012
இலங்கை விடயத்தில் புதுடில்லியின் அடுத்த நகர்வு இதுதான் .
வடக்கு மாகாண சபைக்கான தேர்தலை விரைந்து நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் வலியுறுத்தவுள்ளது. இதற்கான இராஜதந்திர நகர்வுகளில் இந்திய அரச தலைமை ஈடுபட்டுள்ளதாக நம்பகர மாகத் தெரிய வருகிறது.
ஜெனிவாவில் இலங்கை மீது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் நெருக்கடி நிலையில் இருந்து இலங்கை அரசு மீள்வதற்குப் பல காத்திரமான உறுதியான நடவடிக்கைகளை நாட்டில் மேற் கொள்ள வேண்டி உள்ளன என்று புதுடில்லி கருதுகிறது. அதனையே இலங்கையிடம் சர்வதேச சமூகம் எதிர்பார்க்கிறது. எனவே இந்தவேளையில் வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தி அங்கு மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகம் நடைபெறுவதற்கான வழியை ஏற்படுத்துவதன் மூலம் சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை ஓரளவேனும் விடுபட முடியும் என இந்தியா இலங்கைக்கு ஆலோசனை வழங்கி உள்ளதாகத் தெரிய வருகிறது.
வடக்கில் இராணுவ நெருக்குவாரங்கள் தொடர்கின்றமையால் அங்குள்ள மக்களும் சினம் அடைந்துள்ளனர். எனவே வடக்கில் தேர்தலை நடத்தி மாகாண சபை நிர்வாகத்தை மக்கள் பிரதிநிதிகளிடம் கையளிப்பதன் மூலம் மக்கள் தற்காலிகமாகவேனும் இராணுவ நெருக்குவாரங்களில் இருந்து மீளமுடியும் என இந்தியா இலங்கையிடம் சுட்டிக் காட்டவுள்ளதாகவும் ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தெரிய வருகிறது.
இப்போது வடக்கு மாகாண சபைத் தேர்தலை நடத்தப் பொருத்தமான சூழல் உள்ளதால் அதனை விரைவில் நடத்துமாறு புதுடில்லி கொழும்பிடம் பகிரங்கமான கோரிக்கை ஒன்றை முன்வைக்க ஆயத்தமாகி வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக இந்திய அரசின் பிரதிநிதிகள் இலங்கை அரச தலைமையை நேரில் சந்தித்து இது தொடர்பில் வலியுறுத்துவர் என ராஜதந்திர வட்டாரங்கள் மேலும் கூறின
மாண்புமிகு மகிந்த ராஜபக்ஷ அவர்களே! பிரச்சனையை மேலும் மோசமடைய விடாதீர்கள்
இலங்கை ஒரு மேசமான நிலையை எதிர்நோக்கி நிற்கும் இவ்வேளையில் எமது நாட்டையும் அதில் வாழும் மக்களையும் மிகவும் நேசிப்பவன் என்ற முறையில் நாட்டின் பெரும் நன்மையை கருதி எனது கருத்துக்களை வெளியிட விரும்புகின்றேன். இந்நாடு எதிர்நோக்கி வந்த எந்தப் பிரச்சனையையும் என்னால் அது நாட்டுப் பிரச்சினை என்றே கருதப்பட்டு வந்தது. தற்போதைய அவலநிலை நாம் பயப்படும் அளவிற்கு பெரிதாக விரிவடைந்துள்ளதென்றால் மிக முக்கியஸ்தர்கள் அழைக்கப்படாமல் அப்பிரச்சினைகளில் முன்சிந்தனையின்றி ஈடுபட்டு உங்களுக்கு எரிச்சலையும் சங்கடத்தையும் உண்டு பண்ணியுள்ளனர். இவர்கள் அப்பாவி மக்களை, மகிழ்ச்சி; தராத விடயங்களில் ஈடுபடுமாறு தூண்டி விட்டு பிரச்சினைகளை மிக மோசமடையச் செய்தனர்.
அனர்ததங்களை ஒரு நாடு எதிர்நோக்கும் வேளையில் சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்ட நாட்டுக்கு நிவாரணப் பொருட்களோடு விரைவது சகஜம். இயற்கை அனர்த்தமாகிய சுனாமி நமது நாட்டில் ஏற்பட்டவேளை இந்தியா எவ்வளவு விரைவாக செயற்பட்டது என்பதையும் ஏனைய நாடுகள் சிறிதோ, பெரிதோ இந்தியாவை பின்பற்றி செயற்பட்டதை நாம் அறிவோம். ஒரு நாட்டில் உள்ளுர் கிளர்ச்சி ஏற்படும்போது இதேபோன்றே பிற நாடுகள் செயற்பட்டன. ஒரு நாடு கஷ்டத்தில் இருக்கின்றபோது எனைய நாடுகள் கைகட்டி நின்று வேடிக்கை பார்க்க மாட்டா. தம்பி பிரபாகரனுக்கு இலங்கைக்கு உதவ வருகின்ற நாடுகள் அத்தனையுடனும் எதிர்த்துப் போராட வேண்டிவருமேயொழிய தனித்து இலங்கை இராணுவத்துடன் மாத்திரமல்ல என நினைவூட்டி, ஆயுதங்களை கைவிட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லுமாறு பல தடவை கேட்டிருந்தேன். இறுதியில் நான் எச்சரித்தவாறே நடந்தேறியது. அதிக விளம்பரமில்லாமல் அநேக நாடுகள் இலங்கைக்கு உதவ வந்து இறுதியில் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கவும் உதவியன. அநேகமான ஐரோப்பிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு உதவின எனக் கூறுவது தவறானதாகும். அதற்கு மாறாக சில இலங்கையர் சில நாடுகளை மிக மோசமாக அவமதித்து இருந்தாலும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த நாடும் விடுதலைப் புலிகளுக்கு உதவவில்லை. தனிப்பட்ட ஒருவர் ஒரு நாட்டில் இருந்து கொண்டு விடுதலைப் புலிகளை ஆதரி;த்திருந்தாலும் கூட அந்த நாட்டை குறைகூற முடியாது. அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் போன்ற நாடுகள் தத்தம் மண்ணில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளுக்கு தடை விதித்திருந்தமையை நாம் மறக்க முடியாது. நவீன ஆயுதங்கள் கொடுத்து பல நாடுகள் இலங்கைக்கு உதவியளிக்காது விட்டிருந்தால் இலங்கை இராணுவத்தினரால் தனித்து இப்போரை வென்றிருக்க முடியாது. இந்தியாவிடமிருந்தும் இந்தியாவின் ஒரு மாநிலமாகிய தமிழ்நாடு பொலிசின் “கியூ” பிரிவினர் மிகத் திறமையாக செயற்பட்டு பல தடவைகள் இலங்கைக்கு அனுப்பி வைக்க இருந்த பல தொன் எடையுள்ள வெடி மருந்தை தேடி பிடித்து கைப்பற்றியமையை நீங்கள் சுலபமாக இந்த உதவிகளை மறந்திருக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.இந்திய கடற்படையின் கரையோர காவல் பிரிவினர் ஆற்றிய பெரும் தொண்டால் யுத்தம் வெல்லக் கூடியதாக இருந்தது. இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகள் எமக்கு முதுகை காட்டிக் கொண்டிருந்தால் இந்த நாடு சிதைந்திருக்கும், யுத்தத்திலும் தோற்றிருக்கும். இந்த விடயங்களை இலங்கை என்றும் மறக்கக் கூடாது.
எதற்காக அல்லது இன்று இக்கட்டான நிலையில் என்ன தேவை ஏற்பட்டமையால் இலங்கை அரசு சீன வெளியுறவுதுறை அமைச்சரை சந்தித்து அமெரிக்க தீர்மானத்தை, சீனா எதிர்ப்பதாக பல தடவைகள் உறுதியளித்திருந்தும் எதிர்க்க வேண்டுமென சீன அரசின் உதவியை நாடியது. 1956ம் ஆண்டு இலங்கையில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவிய வேளை சீன அரசு பெருந்தன்மையாக எமது இறப்பருக்கு பதிலாக அரிசியை கொடுத்து தனது பெருந்தன்மையயை வெளிக்காட்டியது. அன்று தொடக்கம் இன்றுவரை இவ்விரு நாடுகளுக்கிடையில் இருந்த உறவில் பங்கம் எற்படாது இருக்கும் போது இச்சந்தர்ப்பத்தில் நல்லெண்ணத்தை வளர்க்க வேண்டிய அவசியமில்லை. இந்த முயற்சியில் ஏதோவொரு நோக்கம் மறைந்திருக்கிறது. அநேகருக்கு இது இந்தியாவுக்கு எதிரான மறைமுக மிரட்டலா என தோன்றுகிறது. பல வகையாலும் இத் தீர்மானத்தை ஆதரிக்கும்படி இந்தியாவுக்கு அழுத்தம் வந்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இம் முயற்சி நல்ல ராஜதந்திரமாக தெரியவில்லை. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சியும் எதிhகட்சியும் ஏனைய அரசியல் கட்சிகளும் இத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமென அழுத்தம் கொடுக்கின்றன. இலங்கை இந்தியாவை பல காரணங்களுக்காக ஆத்திரமூட்டக் கூடாது. முக்கிய காரணம் என்னவெனில் ஒரு சமயம் இனப்பிரச்சினை தீர்வு சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு ஒரு வாய்ப்பு ஏற்படும் சந்தர்ப்பத்தில் இந்தியாவால் மட்டுமே முன்னின்று இலங்கை அரசுக்கும் சிறுபான்மை தமிழ் கட்சிகளுக்குமிடையில் மத்தியஸ்த்தம் செய்யக்கூடிய வாய்ப்பு உண்டு. இந்தியாவுடனும் சீனாவுடனும் நல்லுறவை பேணுவது சிறந்த முயற்சியாக இருந்தாலும் இரு நாடுகளில் ஒரு நாட்டு மக்களின் உணர்வை புண்படுத்தி அல்ல.
சீனா இலங்கை அரசுக்கு பல்வேறு இராணுவ முகாம்கள் அமைத்து அவற்றிற்கு வேண்டிய ஆயுத தளபாடங்களை தந்துதவுவதாக கூறி வருகிறது. இச் செய்தி வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் விரும்பாத, பெரும் கவலை தரும் செய்தியாகும். சீனாவின் அன்பளிப்பை மிக்க நன்றியுடன் நிராகரிப்பதாக சீன அரசுக்கு இலங்கை கூற வேண்டும். 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதியுடன் துப்பாக்கிச் சூட்டுச் சத்தமும், செல் வெடிப்பதும் நின்று மீண்டும் ஒரு போராட்டம் துவங்குவதற்கு சிறு வாய்ப்புக்கூட இல்லாத நிலையில் இலங்கைக்கு யுத்த தளபாடங்கள் தேவைப்பட மாட்டாது. ஏதாவது யுத்தத் தளபாடங்கள் வழங்கப்படுமாயின் 30 ஆண்டுகளுக்கு மேல் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து தற்போது ஒரு விளையாட்டுத் துப்பாக்கியைக்கூட காண விரும்பாத மக்களை அடிமைப்படுத்தவே இது உதவும். சீனப் பெருங்குடி மக்கள் ஒரு புரட்சியின் மூலம் தமது உரிமைகளை வென்றெடுத்தமையால் இலங்கை வாழ் தமிழ்மக்களும் இன்னொரு புரட்சி ஏற்படுவதை விரும்ப மாட்டார்கள். இலங்கை மக்களின் பரிதாப நிலையை உணர்ந்து நிலைமையை மீள பரிசீலித்து யுத்த தளபாடங்களுக்குப் பதிலாக தமிழ் மக்களுக்கு உதவக்கூடிய விவசாய உபகரணங்களால் அப்பகுதியை நிறைக்க வேண்டும். அப்பாவி தமிழ் மக்களை மேலும் ஒரு பயங்கர கனவு உலகத்துக்கு அனுப்பி வைக்காது பாதுகாக்க வேண்டும். ஏனெனில் கடந்தகால பயங்கர நினைவுகள் அவர்களை தொடர்ந்தும் அச்சுறுத்துகின்றன. தங்களுக்கு ஆலோசனை வழங்குகின்றவர்களை அவ்விடயத்தில் விசேட அக்கறை இல்லாதவர்களாக பார்த்து தெரிவு செய்யவும், நாட்டின் தலைவர் என்ற முறையில் அனைவரையும் சொந்த பிள்ளைகளாக கருதவும். வடக்கு கிழக்கு மக்கள் இராணுவ, கடற்படை, விமானப்படை ஆகிய முகாம்கள் இருக்கும் பகுதிகளில் பல கஷ்டங்களை எற்கனவே அனுபவித்துள்ளமையால் வட கிழக்கில் இந்த முகாம்களை விரும்பவில்லை.
ஜனாதிபதி அவர்களே! நாட்டின் பிரச்சினைக்கான தீர்வு தங்கள் கைகளிலேயே உண்டு. ஐக்கிய, அமைதி நிறைந்த இலங்கையை கட்டியெழுப்பக்கூடிய வாய்ப்புக்கள் பலவற்றை நீங்கள் தவற விட்டுவிட்டீர்கள். ஒரு நாட்டின் ஒருபகுதி மக்கள் மனத் திருப்தியோடு வாழாவிடின் ஐக்கிய அமைதியான நாட்டை கட்டியெழுப்ப முடியாது. நான் உங்களுக்கு பல தடவைகள் கூறியிருக்கின்றேன், இந்த நாட்டில் சிறுபான்மையினர் இல்லையென்று கூற வேண்டியவர்கள் நீங்கள் அல்ல, அவ்வாறு கூற வேண்டியது திருப்தியுடன் வாழும் மக்களே. எங்களைப் பொறுத்தவரையில் ஒரு நீதியான, நியாயமான ஆட்சியை வழங்கி சிறுபான்மை மக்களை அவ்வாறு கூற வைக்க வேண்டும் என்பதே. உங்கள் நிர்வாகத்தில் பாகுபாடு காட்டும் தன்மை இருப்பதை நீங்கள் அறிவீர்களோ நான் அறியேன். சில உதாரணங்களை கூறின் இலங்கை நிர்வாக சேவைக்கு இறுதியாக நடைபெற்ற இரு தேர்வுகளில் முதலாவதில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் ஒருவரும் தெரிவாகவில்லை. இரண்டாவது தேர்வில் ஏழு பேர் மாத்திரமே சிறுபான்மையினர். தமிழ் பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கு பதிலாக தமிழரும், சிங்கள பிரதேசங்களில் சிங்கள அதிகாரிகளை நியமிப்பதற்கும் கிடைத்துள்ள நல்ல வாய்ப்பல்லவா? பல சபைகளும், கூட்டுத்தாபனங்களும் உங்கள் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன. பனை அபிவிருத்தி சபையைத் தவிர வேறு எவற்றிலும் சிறுபான்மையினர் எவரும் தலைமை பதவியையோ, அங்கத்தவர் பதவியையோ வகிக்கவில்லை. ராஜதந்திர சேவையில் ஒரோயொரு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர் மட்டும் தூதுவராக செயற்படுகின்றார். அவரின் எதிர்காலம்கூட அமெரிக்கத் தீர்மானத்தின் கதியில் தங்கியுள்ளது. சிற்றூழியர்களாக மட்டும் சிலர் தூதுவராலயங்களில் கடமையாற்றுகின்றனர். பல்வேறு அமைச்சுக்களில் நியமிக்கப்பட்டுள்ள செயலாளர்கள் 52 பேரில் ஒரேயொரு தமிழரும் ஒரு இஸ்லாமியரும் சிறுபான்மையினராக இருக்கின்றனர். இன்று நீங்கள் எதிர்நோக்கும் சங்கடங்கள் மத்தியிலும் கூட நீங்கள் நியமித்துள்ள 22 பிரதிபொலிஸ் மா அதிபர்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரேனும் நியமிக்கப்படவில்லை. இது போன்று பல சம்பவங்களை இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அவற்றில் அநேகமானவை தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்படாமல் இருக்கலாம். தங்களை சுற்றியுள்ளவர்களே மகிந்த சிந்தனைக்கு அவமானம் தேடுகின்றனர். சிலர் தங்கள் அறிவுறுத்தல்களுக்கமைய நடப்பதாக கூறினாலும் பலர் தங்கள் சிந்தனைக்கு களங்கம் சேர்ப்பதாக உள்ளனர். சிறுபான்மை இன மக்களின் உள்ளத்தை புண்படுத்தும் பல நியமனங்களும், பதவி உயர்வுகளும் நடைபெறுகின்றன. விளையாட்டுத் துறைக்கு பெரும் ஊக்கமளிக்கும் உங்கள் அரசால் கிரிக்கெட் துறையில் முரளிக்கு பதிலாக ஒரு தமிழரை சேர்த்துக் கொள்ள முடியவில்லை.
ஜனாதிபதி அவர்களே! இவ்வாறு எழுதுவதற்கு நான் பெரிதும் கவலையடைகின்றேன். ஏனெனில் நான் எப்பிரச்சினையையும் வகுப்புவாத கோணத்திலிருந்து பார்ப்பவன் அல்ல. இந்தச் சந்தர்ப்பத்தில் நான் இவ்வாறு செய்வத தூரதிஸ்டமே. இது தங்களுக்கு மன வேதனையை கொடுத்தால் என்னை மன்னிக்கவும். இந்த விடயங்களை உங்களுக்கருகில் உள்ளவர்கள் உங்களின் கவனத்திற்கு கொண்டு வந்திருக்க வேண்டும். நான் மீண்டும் கூறுகின்றேன் இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கள் கைகளிலேயே உள்ளது. இன்றைய பதட்ட நிலையை தணிக்க உங்களிடமுள்ள அதிகாரத்தையும் பிரச்சினை சம்பந்தமான தங்களுக்குள்ள அறிவையும் கொண்டு சிறுபான்மையினர் ஏற்கக்கூடிய ஒரு தீர்வை முன் வைத்து பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தவும். என்னால் முன்வைக்கப்பட்ட இந்திய முறையிலான ஒரு தீர்வை அரச சார்பிலும், எதிர்கட்சி சார்பிலும், புலம்பெயர் மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பு இருந்தது. மகாநாயக்கர்களுடைய ஆசீர்வாதமும் இருந்தது என நம்புகின்றேன். இதற்கு நீங்கள் எதிர்ப்பு இல்லை என்று என்னையும் நம்ப வைத்திருக்கிறீர்கள். ஒரு அரசியல் சாசனமும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டதென எவரும் தம்பட்டம் அடிக்க முடியாது. இந்திய அரசியல் சாசனமோ அன்றி தற்போதைய அரசியல் சாசனமோ பல விடயங்களில் பிரித்தானிய சாசனத்தை ஒத்தது என்பதை அறிந்திருப்பீர்கள். நீங்கள் இந்திய முறையிலான தீர்வை ஏற்கும் பட்சத்தில் அதற்கு எந்த எதிர்ப்பும் இருக்காது என நம்புகின்றேன். சமத்துவம், சமநீதியை கொண்டு உருவாகிய எந்தத் தீர்வுக்கும் நியாயப்படுத்தக்கூடிய எந்த எதிர்ப்பும் இருக்க முடியாது.
நான் வட பகுதி முழுவதையும் கிழக்கு மாகாணத்தின் ஒரு பகுதியையும் சுற்றி வந்துள்ளேன். எனது கணிப்பின்படி அநேக மக்கள,; பெருமளவில் வன்னி மாவட்ட மக்கள் அரை பட்டினியில் வாழ்கின்றனர். மக்களுக்கு எதுவித அபிவிருத்தியிலும் நாட்டமில்லை. இன்னும் அநேக மக்கள் கூரையில்லாத வீடுகளிலும் பல அடிப்படை வசதிகளின்றியும் வாழ்கின்றனர். அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கள் கூட கிடைக்கவில்லை. வயதுக்கு வந்த பெண் பிள்ளைகளுடன் வாழும் விதவைகளும், அநாதைகளும் மிகவும் கஷ்டப்படுகின்றனர். இடம்பெயர்ந்த மக்கள் தங்கள் அத்தனை உடைமைகளையும் இழந்தே மீளக்குடியேறி வாழ்கின்றனர் என்பதை அநேகா அறியமாட்டார்கள். தயவு செய்து நிலைமை சீரடையும் வரை மிக நொந்து போயுள்ள மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் முன்பு இருந்தது போல் கூப்பன் புத்தகத்தை அறிமுகப்படுத்தவும். இம் முறையானது மிக நொந்துபோயுள்ள மக்கள் மத்தியில் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள வறுமையை ஓரளவுக்கு குறைக்கும் என கருதுகிறேன். அனைவரும் தத்தம் உரிமைகளை ஏனையவர்களுடன் சமமாக அனுபவித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் போல் ஒரு நியாயமான சமூகத்தில் வாழ வேண்டும். சரித்திர ரீதியாக சிங்கள மக்களும், தமிழ் மக்களும் ஒரே கொடியில்; உருவானவர்களே.
எமது வீட்டை ஒழுங்காக வைத்திருக்காமல் 47 நாட்டுப் பிரதிநிதிகளிடம் சென்று அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்க்கும்படி கேட்பதில் அர்த்தமில்லை. அமெரிக்கத் தீர்மானத்தை எதிர்த்து நாடளாவிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துக் கொண்டிக்கும் போது இலங்கை கடற்படையினர் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பூநகரி பிரிவிற்குள் உள்ள நாச்சிக்குடா கிராமத்தில் கடற்படை தளம் அமைப்பது கடற்படையினரின் புத்தியற்ற செயல் அல்லவா? நாச்சிக்குடாவில் தளம் அமைப்பதற்குரிய காரணம் வினோதமான கற்பனையாகும். 1970ம் ஆண்டு தொடக்கம் 1983ம் ஆண்டு பதவியை ராஜினாமா செய்யும்வரை கிளிநொச்சி தொகுதியை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தி இருந்தேன். இக் கிராமத்தில் இந்துக்கள், முஸ்லீம்கள், கத்தோலிக்கர்கள்; எவ்வித பிரச்சினையுமி;ன்றி பல ஆண்டுகள் வாழ்ந்தனர். யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் இக் கிராமத்துக்கு அண்மையில் ஒரு பொலிஸ் நிலையம் திறக்கப்படும் வரை அங்கு பொலிஸ் சேவை இருக்கவில்லை. அரை பட்டினியுடன் வாழும் அக் கிராம மக்களுக்கு நாச்சிக்குடாவில் தளம் அமைப்பதற்காக செலவிடப்படும் பணம் நியாயப்படுத்த முடியாத வீண் செலவாகும். கடற்படையினா கூறுவது போல் அங்குள்ள பொது மக்களுக்கு எதுவித பாதுகாப்பும் தேவையில்லை. அவர்கள் அதை கேட்கவும் இல்லை. அவர்கள் அதை பெரும் இடைஞ்சலாகவே கருதுகிறார்கள். போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்த எனக் கூறும் காரணமும் அர்த்தமற்றதாகும். முப்படைகள் முகாம்களையும் மூட வேண்டுமென்று மக்கள் கிளர்ச்சி செய்யும் போது புதிய முகாம்கள் அமைப்பது நாட்டுக்கும், மக்களுக்கும் இருண்ட எதிhகாலத்தையே சுட்டிகாட்டுக்கிறது. ஆகவே தயவு செய்து புதிய முகாம்கள் திறப்பதை நிறுத்தி இராணுவ பிரசன்னத்தை இல்லாமல் செய்ய நடவடிக்கை மேற்கொண்டு 30 ஆண்டுகள் பயத்துடனும், பீதியுடனும் வாழ்ந்த மக்கள் உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்க வழி வகுக்க வேண்டும்.
நன்றி
தங்கள் உண்மையுள்ள
வீ. ஆனந்தசங்கரி
செயலாளர் நாயகம்- த.வி.கூ
பீரிஸ் – ஹிலாரி சந்திப்பு: மே 18ம் நாள் நடக்கும்
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனை சந்திப்பதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுக்கு மே 18ம் நாள் நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் விக்ரோரியா நுலன்ட் தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிசுடன் கலந்துரையாடுவதற்கு இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் எதிர்பார்த்துள்ளார்.“ என்றும் அவர் கூறியுள்ளார்.
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுப்படுத்தாது என்று சிறிலங்கா அரசாங்கம் நேற்று அறிவித்துள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த விக்ரோரியா நுலன்ட்,
“பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்குத் தேவையான உறுதியான நடவடிக்கையை சிறிலங்கா எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை.
சிறிலங்காவை இந்தத் தீர்மானத்தின் மூலம் முன்னோக்கி நகர்த்த முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
உங்களுக்கும் தெரியும். நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைத் தீர்மானம் சிறிலங்காவைக் கேட்டுக் கொண்டுள்ளது.
சிறிலங்காவை முன்னோக்கி நகர்த்த முடியும் என்று நாம் நம்புகிறோம்.
உங்களுக்குத் தெரியும், இன்றைய நாள் வரை அவர்கள் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்குத் தேவையான எந்தவொரு உறுதியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறோம்.“ என்று குறிப்பிட்டுள்ளார்.
கைது!த.தே.கூட்டமைப்பின் வவு.செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்
வவுனியா செட்டிக்குளம் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் தியாகலிங்கம் உதயலிங்கம் நேற்று காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமான முறையில் மரங்களை வெட்டி கடத்தியபோது, குறித்த நபரின் வாகனமும் உதவியாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தியாகலிங்கம் உதயலிங்கம் தப்பியோடி தலைமறைவாக வாழ்ந்து வந்தவேளை நேற்றிரவு அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்ட்ட சந்தேக நபரான தியாகலிங்கம் உதயலிங்கம் இன்று வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
lundi 26 mars 2012
தொண்டமான் இராஜினாமா?
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சருமான தொண்டமான் தனது அமைச்சு பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேசிய கால்நடைகள் அபிவிருத்திச் சபையின் பணிப்பாளரை நியமிப்பது தொடர்பில் எழுந்த முரண்பாடே இதற்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ___
dimanche 25 mars 2012
இந்திய அரசும் மக்களும் இலங்கையின் பக்கம் உறுதியுடன் நின்றதாக மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
இலங்கைக்கு எதிராக ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தில், சம நிலையைக் கொண்டுவர இந்தியா முயற்சி எடுத்து, அதில் வெற்றியும் பெற்றதாக, இலங்கை ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார்.
மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் அமெரிக்காவுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா, இப்போது முதல் முறையாக தனது நிலைப்பாட்டுக்கான காரணம் குறித்து, இலங்கை அரசுக்கு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்திருக்கிறது.
கடந்த 19-ம் தேதி இலங்கை ஜனாதிபதி எழுதிய கடித்தத்துக்குப் பதிலளிக்கும் வகையில் மன்மோகன் சிங் இந்தக் கடித்தத்தை எழுதியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தைப் பொறுத்தவரை, ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புக்களுக்கு ஏதுவாக, மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தின்போது, இலங்கை அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்குமாறு தனது அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்ததாக மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் உள்ள வாசகங்களில், சமநிலையை ஏற்படுத்த வேண்டும் என்று இந்தியா முயற்சி எடுத்ததையும், அதில் வெற்றி பெற்றதையும் நீங்கள் அறிவீர்கள் என்று தனது கடித்தில் இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
தீவிரவாதத்துக்கு எதிரான இலங்கையின் போராட்டத்தில், இந்திய அரசும் மக்களும் இலங்கையின் பக்கம் உறுதியுடன் நின்றதாக மன்மோகன் சிங் தெரிவித்திருக்கிறார். இலங்கையிலும், இந்தியாவிலும் பல்வேறு அப்பாவி உயிர்களைப் பலிகொண்ட நீண்ட மோதல்கள் கடந்த 2009 மே மாதம் முடிவுக்கு வந்தது, நியாயமான தேசிய நல்லிணக்கத்துக்கும், இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களின் மேம்பாட்டுக்கும் வழிவகுத்துக் கொடுத்ததாகக் கூறியுள்ள மன்மோகன் சிங், அதில் கணிசமான முன்னேற்றமும் கண்டுள்ளதாக இலங்கையைப் பாராட்டியுள்ளார். குறிப்பாக, இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த முனைந்துள்ள ஜனாதிபதியின் நோக்கத்தையும் பாராட்டுவதாக மன்மோமன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் 13-வது அரசியல் சட்டத் திருத்தங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதன் மூலம் நிரந்தரமான அரசியல் தீர்வு கிடைக்கும் என்றும் இலங்கை ஜனாதிபதியை இந்தியப பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார்.
samedi 24 mars 2012
நீதிக்காக உயிர் துறப்பது மேல்
தீர்மானம் நிறைவேற்றினாலும் நாட்டின் இறையாண்மையில் எவரும் தலையிட அனுமதியோம் நீதிக்காக உயிர் துறப்பது மேல் - ஜனாதிபதி ஆவேச உரை
இலங்கைக்கு எதிரான ஐ.நாவின் ஜெனிவாத் தீர்மானம் நிறைவேறியிருந்தாலும் எமது நாட்டின் இறை யாண்மை மற்றும் ஒருமைப்பாடு மீது எந்த வொரு அச்சுறுத்தல்களுக்கும் இடமளிக்கப்படமாட்டாது. இவ்வாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் நேற்று முன்தினம் நிறைவேறியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தினம் களுத்துறை பண்டாரகமவில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்று கையில்; அதர்மத்துக்கு தலைசாய்ப்பதை விட நீதிக்காக உயிர் துறப்பது எவ்வளவோ மேலானது. சந்தர்ப்பவாதிகளின் சதிக்கு இரையாகாமல் எமது பிரச்சினை கள் உள்நாட்டிலேயே தீர்க்கப்பட வேண்டும். இதற்காக நாட்டு மக்கள் அனைவரும் ஒன்று திரளவேண்டும். மேலும், ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவில் உள்ள47 நாடுகளில் எமக்கு ஆதரவாக 15 நாடுகள் வாக்களித்துள்ளன. 8 நாடுகள் வாக்களிக்கவில்லை.
ஏனைய 24 நாடுகளே அமெரிக்கத் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. இவ்வாறு இலங்கைக்கு எதிராக வாக்களித்த நாடுகள் எதிர்காலத்தில் தோன்றும் பயங்கரவாதம் குறித்து அக்கறையுடனும் அவதானத்துடனும் இருக்கவேண்டும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ எச்சரிக்கை விடுத்தார்.
தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் கருணாநிதி அச்சம்
மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஆதரவாக, இந்தியா வாக்களித்ததற்கு பிரதமருக்கும் சோனியாவுக்கும் கருணாநிதி நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர்கள் இருவருக்கும் தி.மு.க. தலைவர் கருணாநிதி அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழர்களுக்கு எதிராக, மகிந்த ராஜபக்ஷ அரசால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட, ஐ.நா. தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததற்கு, மிகுந்த மகிழ்ச்சியும், நன்றியும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த விஷயத்தில், உலகத் தமிழர்களும் இந்தியாவுக்கு நன்றியுடன் இருப்பர். தீர்மானம் நிறைவேறிவிட்டதன் எதிரொலியாக, இலங்கைத் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்படாலமென, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் அத்தகைய விரும்பத்தகாத நடவடிக்கைகள் நடந்துவிடாமல், தவிர்க்கும்படி கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
என்றாவது ஒருநாள் நாட்டைக் காப்பாற்றுவேன் என்கிறார் பொன்சேகா
குண்டர்களாலும் செயற்திறனற்றவர்களாலும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
ஏழாயிரத்து 500 ரூபா பணத்தை கொண்டு மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒரு மாதம் வாழ்க்கை நடத்த முடியும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் பஸ் கட்டண அதிகரிப்பினால் பிரச்சினை இல்லை என மற்றுமொரு அமைச்சர் கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுபவர்களாலும் குண்டர்களாலும் நாட்டை முன்னேற்ற முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
என்றாவது ஒருநாள் நாட்டைக் காப்பாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்:
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் தனது நிலைப்பாட்டிற்கு இணங்கியே இலங்கை;கு எதிராக இந்தியா வாக்களித்தது எனவும் இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக கரிசனைகள் வெளிப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமென விரும்பியதாகவும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
இலங்கையின் இறைமையை இந்தியா மீற விரும்பவில்லை எனவும் புதுடில்லியில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது ஏன் என செய்தியாளர்கள் வினவியமைக்கு பதிலளிக்கும் போதே இந்திய பிரதமர் இவ்வாறு கூறினார்.
“சாதக பாதகங்களை சீர்தூர்க்கி பார்க்க வேண்டும். நாம் செய்தது இலங்கை தொடர்பான எமது நிலைப்பாட்டிற்கிணங்கியதே. இலங்கையின் இறைமையை மீற நாம் விரும்பவில்லை. ஆனால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட வேண்டும். அதனால் தமிழ் மக்கள் நீதியையும் கௌரவமான வாழ்க்கையையும் அடைய முடியும்” என அவர் தெரிவித்தார்
சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது : தி.மு.க தலைவர் கருணாநிதி!
தமிழீழம்’ என்பது தனது நனவாகாத கனவு எனவும் தமிழீழம் உருவாகும்வரை அதற்கான தனது போராட்டமும் இருக்கும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் வியாழக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே இவ்வாறு கூறினார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவை தீர்மானம் குறித்து அவர் கூறுகையில், இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை எதிர்த்து கம்யூனிஸ்ட் நாடுகள் வாக்களித்திருக்கின்றன. இது தொடர்பான கருத்தை மனிதாபிமானத்தில் நம்பிக்கை உள்ளவர்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் ‘போர்க்குற்றங்கள்’ என்ற வார்த்தைகள் இருந்ததாகவும் பின்னர் அது எடுக்கப்பட்டுவிட்டதாகவும் யாரும் இதுவரை சொல்லவில்லை. அது உண்மையாக இருந்தால் அது தொடர்பான திருத்தங்கள் வருவதற்கும் முயற்சிகளை மேற்கொள்வோம்’ என்றார்.
3 ஆண்டுகளுக்கு முன்பு: இப்போது கொடுத்த அழுத்தத்தைப் போலவே 3 ஆண்டுகளுக்கு முன்பும் மத்திய அரசுக்குக் கொடுத்தோம். ஆனால் அந்தக் கருத்துகள் யார் யாரால் பாழ்படுத்தப்பட்டன என்பது நாடறிந்த உண்மை எனவும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் தமழீழம் உருவாகுவதற்கான சாத்தயிமுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டபோது. தன்னைப்பொறுத்தவரை அதுதான் இலக்கு என்றார். கடந்த காலத்திலும் தஇ தனது நிறைவேறாத கனவு குறித்து கேட்டபோதேல்லாம் தமிழீழம் என பதிலளித்தாக கருணாநிதி கூறினார்.
சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என் கருத்து.
பிரபாகரன் போராட்டம்: ‘புலிகள் நடத்திய சகோதர யுத்தம் தவறானது என்று சொல்கிறீர்கள். தந்தை செல்வா போன்றோர் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போதும் தமிழர்கள் மீது அத்துமீறல்கள் நடந்தன. அதனால்தான் நாங்கள் போராடத் தொடங்கினோம் என்று பிரபாகரன் சொல்லியிருந்தாரே’ என்று செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு கருணாநிதி ‘பிரபாகரன் போராட்டத்தைக் குறை கூறும் அளவுக்கு நான் முட்டாள் அல்ல. புலிகள் நடத்திய சகோதர யுத்தம் என்று நான் குறிப்பிட்டு அவர்களைப் பற்றி மட்டுமே கூறவில்லை.
ஆனால் பிரபாகரனும் முகுந்தனும் பத்நாபாவும் ஸ்ரீசபாரத்தினமும் மோதிக் கொண்டு அதில் ரத்த ஆறு ஓடியதைத்தான் நான் மிகுந்த வேதனையோடு அப்போதும் தடுத்தேன். இப்போதும் அந்த நிலை வரக்கூடாது என்று வேண்டுகிறேன்’ என்றார் கருணாநிதி.
jeudi 22 mars 2012
நிறைவேறியது இலங்கையில் போர்க்காலச் சம்பவங்களின்போது நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரும் அமெரிக்காவின் தீர்மானம் ஐநாவின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது
மனித உரிமை கவுன்சிலில் மொத்தமாக உள்ள 47 உறுப்பினர்களில் அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக 24 நாடுகள் வாக்களித்திருக்கின்றன. எதிராக 15 நாடுகள் இலங்கையை ஆதரித்திக்கின்றன. 8 நாடுகள் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் தவிர்த்திருக்கின்றன.
தொடர்புடைய விடயங்கள்போர், வன்முறை அமெரிக்காவின் பிரேரணையை எப்படியாவது தோற்கடித்துவிட வேண்டுமென்ற பிரச்சாரத்திலும் பேச்சுவார்த்தைகளிலும் இலங்கையின் பிரமுகர்கள் கடந்த பல வாரங்களாகவே தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.
நிறைவேறிய தீர்மானம்- ஒரு பார்வை
இலங்கைக்கு எதிரான ஐநா பிரேரணை நிறைவேறியது
இலங்கைக்கு எதிராக ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சிலில் அமெரிக்காவால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியது
கேட்கmp3
இவற்றை இயக்க உங்கள் உலவியில் ஜாவாஸ்கிரிப்ட் இயங்க அனுமதித்திருக்க வேண்டும் மேலும் பிளாஷ் பிளேயரின் மிகச் சமீபத்திய வடிவம் உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
மிகச் சமீபத்திய வடிவில் பிளாஷ் பிளேயரைத் தரவிறக்கம் செய்யவும்
மாற்று மீடியா வடிவில் இயக்க
இந்த நிலையில், பிரேரணை நிறைவேறத் தேவையான குறைந்தபட்ச எண்ணிக்கையாக 24 நாடுகள் அமெரிக்காவின் நிலைப்பாட்டை ஆதரித்திருக்கின்றன.
யார் எதற்கு ஓட்டுப்போட்டனர்
மனித உரிமைகள் கவுன்சிலில் அங்கம் வகிக்கும் ஆபிரிக்க நாடுகளைப் பொறுத்தவரை பிரேரணைக்கு ஆதரவான, எதிரான மற்றும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாத நாடுகள் என பரவலான நிலைப்பாடுகள் காணப்பட்டன.
ஆனால், ஆசிய நாடுகளைப் பொறுத்தவரை, இந்தியா மட்டுமே இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டில் வாக்களித்திருக்கிறது. சீனா, வங்கதேசம் உள்ளிட்ட மற்ற ஆசிய நாடுகள் இலங்கையை ஆதரித்திருக்கின்றன.
லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பொறுத்தவரை கியூபாவும் ஈக்குவடோரும் பிரேரணையை எதிர்க்க மற்ற நாடுகள் எல்லாமே பிரேரணைக்கு ஆதரவாகத்தான் நின்றுள்ளன.
ஐரோப்பாவைப் பொறுத்தவரை ரஷ்யா மட்டும்தான் இலங்கைக்கு ஆதரவளித்திருக்கிறது. மற்றபடி, மேற்கு ஐரோப்பிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகள் அனைத்துமே போர்க்காலச் சம்பவங்கள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டையே தெரிவித்திருக்கின்றன.
பொதுவாக முஸ்லிம் நாடுகள் என்று எடுத்துக்கொண்டால், அண்மையில் கடாபிக்குப் பின்னர் ஆட்சி மாறிய லிபியாவைத் தவிர மற்ற நாடுகள் எல்லாமே ஒன்றில் அமெரிக்கப் பிரேரணையை எதிர்த்திருக்கின்றன, அல்லது வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் ஒதுங்கிகொண்டிருக்கின்றன.
இவற்றில் அமெரிக்காவுடன் நெருக்கமாக இருக்கின்ற சவூதி,கட்டார் மற்றும் ஜோர்தான் உள்ளிட்ட நாடுகளும் பிரேரணையை ஆதரிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இறுதிக்கட்டத்தில் முஸ்லிம் நாடுகளின் ஆதரவை ஈர்க்கும் முயற்சியில் இலங்கை தனது பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.
பின்னணி
இலங்கையின் இறுதிக்கட்டப் போர்க்காலத்தில் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகவும் போர்க்குற்றங்கள் நடந்துள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், ஐநா நிபுணர்குழு அவற்றை ஆராயும் விதத்தில் அறிக்கை சமர்பித்திருந்தது. அதற்கு இலங்கைத் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பும் கிளம்பியிருந்தது.
அதன் பின்னர் இலங்கை அரசு தானாகவே அமைத்துக்கொண்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவும் பல விடயங்களை ஆராய்ந்து தனது அறிக்கையை சமர்பித்திருந்தது.
இந்த நிலையிலேயே, இலங்கையின் நல்லிணக்க ஆணைக்குழு முன்வைத்த சிபாரிசுகளை நடைமுறைப்படுத்த இலங்கையிடம் முறையான திட்டங்கள் எதுவும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அமெரிக்கா, அந்த பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் கவுன்சில் ஊடாக முன்வைத்திருக்கிறது.
தீர்மானம் கூறுவது என்ன?
இலங்கையில் நிலையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், போர்க்காலச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அந்த சம்பவங்களுக்கான பொறுப்பேற்கும் தன்மையும் உறுதிசெய்யப்பட வேண்டும் என அமெரிக்கா தீர்மானத்தில் சுட்டிக்காட்டுகின்றது.
இலங்கையில் நீண்டகாலம் தொடர்ந்த போர் முடிவுக்கு வந்து மூன்றாண்டுகள் கடந்த நிலையிலும், இலங்கை அரசாங்கம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அதற்கு இருந்த கால அவகாசத்தை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பது அமெரிக்காவின் வாதம். இதற்காக கடந்த காலங்களில் இலங்கையுடன் இணைந்து அமெரிக்கா பல முயற்சிகளை முன்னெடுத்ததாக சுட்டிக்காட்டுகின்றது.
ஆனால், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான 'முறையான அமுலாக்கத் திட்டம்' இலங்கை அரசிடம் இல்லை என்ற அடிப்படையிலும், நல்லிணக்க ஆணைக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருக்காத 'போர்க்காலச் சம்பவங்களுக்கான போறுப்பேற்கும் தன்மை' குறித்த விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டும் என்ற அடிப்படையிலுமே, தாங்கள் இந்த தீர்மானத்தை மனித உரிமைகள் கவுன்சிலுக்குக் கொண்டுவந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அதேநேரம், நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 'ஐநாவின் மனித உரிமைகள் தொடர்பான உயர் ஆணையரின் அலுவலகத்துடன் இணைந்து' பணியாற்றும்படியும் இந்தத் தீர்மானம் மூலம் அமெரிக்கா இலங்கையைக் கோரியுள்ளது.
சமத்துவம், சுயமரியாதை, நீதியை வழங்கக்கூடிய நிலையான அமைதியை இலங்கையில் ஏற்படுத்த இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது அவசியம் என்றும் அமெரிக்க பிரதிநிதி ஜெனீவாவில் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் வாதம்'தவறான புரிதலுடன் கூடிய, அடிப்படையற்ற ஒரு தீர்மானத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு எங்கள் நாடு தள்ளப்பட்டுள்ளது. முக்கிய கோட்பாடுகளை பாதிக்கக்கூடிய பாரதூரமான விளைவுகளைக் கொண்டுவரக்கூடிய இந்த தீர்மானம் எங்கள் நாட்டை மட்டுமன்றி மற்ற நாடுகளையும் எதிர்காலத்தில் பாதிக்கும்' என்று தீர்மானத்துக்கு எதிராக ஜெனீவாவில் பேசிய இலங்கைப் பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறினார்.
மனித உரிமைகள் பேரவையை ஸ்தாபித்த 'எல்லாருக்கும் பொதுவான, பக்கச்சார்பற்ற ,பாரபட்சமற்ற கோட்பாடுகளுக்கு' எதிராக நடத்தப்பட்டுள்ள தாக்குதலாக இந்தத் தீர்மானத்தைக் கருதுவதாகவும் சர்வதேச மட்டத்திலான திட்டங்களைக் கொண்டுவர முன்னதாக உள்நாட்டுத் தீர்வுகளில்தான் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற சர்வதேச சட்ட நியமங்களுக்கும் இது முரணானது என்றும் அமைச்சர் மகிந்த சமரசிங்க வாதிட்டார்.
இதேவேளை, ஐநாவின் மனித உரிமைகள் கவுன்சில் நிறைவேற்றியிருக்கின்ற தீர்மானத்துக்கு இலங்கை கட்டாயம் அடிபணிந்துதான் ஆகவேண்டும் என்ற சட்ட ரீதியான கட்டாய நிர்ப்பந்தங்கள் எதுவும் இங்கு ஏற்படுத்தப்பட வில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டியதும் அவசியம்: இந்தத் தீர்மானம் இலங்கையை வற்புறுத்தக்கூடிய ஒரு நிலையில் இல்லை என்பது தான் இதன் அர்த்தம்.
ஆனால், இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் போர்க்காலக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் எழுப்பப்படும் கவலைகளுக்கு மத்தியில், இலங்கைக்கும் அதன் சர்வதேச ராஜதந்திர காய் நகர்த்தல்களுக்கும் ஏற்பட்டுள்ள சறுக்கலாகவே இதனைப் பலரும் பார்க்கிறார்கள்
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவினை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தால் இந்தியா எப்போதோ தன் முடிவினை அறிவித்திருக்கும்.
ஈழத் தமிழரது இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட நாடு. தமிழர் சார்பாக சிறிலங்காவுடன் கையெழுத்திட்டு, சில குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த நாடு இந்தியா, அன்றைய காலகட்டத்தில் இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட தீர்வொன்றினை முறியடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம், வங்காள தேசத்தைப் போன்று மேலும் ஓர் தனிநாட்டினை உருவாக்க இந்தியாவை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க முயற்சித்த நாடுகளில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதங்களை வழங்கி அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க அமெரிக்கா முன்நின்றது.
மாநில அரசு அமைவதற்கும், வடக்குக்கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கும், கல்வி, நிலம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை என்ற அம்சங்களை இந்தியா ஒப்பந்தம் வழியாக அமுல்படுத்தியது. தமிழ் மக்கள் சார்பாக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும்.
2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அன்பளிப்பு நாடுகள் (DONORS COUNTRIES) என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழர்களை மொத்தமாக அழிக்க இலங்கை அரசுக்கு நிதியுதவிகளைத் தாராளமாய் வழங்கிய நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
2009ல் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்தபோது ஐ.நா.வின் மனித உரிமைக்குழுவையும், மருத்துவக் குழுவையும் வெளியேறும்படி உத்தரவிட்டது சிறிலங்கா அரசு. சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்ற சதிச் செயலுக்கு ஐ.நா. அன்று துணை போனது. மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஐ.நா.குழு வெளியேறியது. இதற்கு ஐ.நா.வின் நிர்வாகத் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். கொலைக் களத்துக்கு இடம் கொடுத்தது ஐக்கிய நாடுகள் சபையே!
யுத்த விதி மீறல், மனித உரிமை மீறல் மட்டும் அங்கு நடைபெறவில்லை, முழுக்க முழுக்க இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பௌத்தத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்குமான 2000 ஆண்டுகாலப் பகையை சந்தர்ப்பம் பார்த்து சிங்களப் பௌத்தத்தின் கொள்கையான தமிழின அழிப்பை நிறைவேற்றிக்கொண்டது சிங்கள அரசு.
தமிழ் மக்களின் அழிவுக்கு ஐ.நா.வும் அமெரிக்காவும் பின்னணியில் செயல்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது சானல்-4 மூலம் ஒளிப்படங்கள் வெளிவந்த நிலையில், நல்லிணக்க ஆணைக் குழு (LLRC)வின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாகாது.
தமிழ் மக்கள் LLRC யின் பரிந்துரையையோ, அதன் விசாரணையையோ கோரிக்கையாக முன்வைக்கவில்லை. இலங்கை அரசின் ஏமாற்றுக் கொமிசன்களின் நடவடிக்கைகளில் ஒன்றுதான் LLRC. 1977 கலவரம், 1983 கலவரம், வெலிக்கடை படுகொலை விசாரணை என்று அனைத்தும் ஏமாற்றுத் தந்திரங்களே தவிர அவர்கள் எதனையும் நடைமுறைப் படுத்தியதாக வரலாறு கிடையாது.
இன அழிப்புக்கான படுகொலை விசாரிக்கபட வேண்டும் என்று அமெரிக்கா பிரேரணை கொண்டு வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கோராத, விரும்பாத இந்த முன் மொழிவைக் கொண்டு வருவதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இது இலங்கை அரசுக்குச் சாதகமான ஓர் நடவடிக்கையா? என்ற ஐயப்பாடும் உள்ளது.
அமெரிக்கா யுத்தக் குற்ற விசாரணையை முன்மொழிந்திருந்தால் அதற்கான ஏற்பாடு எப்படியிருந்திருக்க வேண்டும்?
விசாரணை என்பது ஒளிப்படங்களைப் பார்த்து நடத்தப்படுவதில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்ல வேண்டும், இன்றைய சூழலில் தமிழ் மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்லிவிட்டு வீடு சென்று உயிர் வாழ முடியாது! ஏனெனில் அன்று கொலை செய்த அதே கொலைகாரர்களின் பாதுகாப்பில்தான் இன்றும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அப்படியும் விசாரணை நடைபெறும் என்றால் அது ராஜபக்ச ஏற்பாடு செய்த நபர்கள்தான் சாட்சிகளாக காட்சி தருவர்.
உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் ஐ.நா. வின் படை இலங்கைக்குச் செல்ல வேண்டும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிர்வாகத்தையும் பாதுகாப்பையும் ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்.
இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற அமெரிக்கா முன்மொழிந்தால் அதனைப் பாராட்டி ஆதரிக்கலாம். அப்படி எந்த முன்மொழிவும் இதுவரை இல்லை! இதனைச் செய்யாத அமெரிக்காவின் முயற்சியில் எந்தப் பயனும் தமிழர்களுக்கு இல்லை. பதிலாக தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் என்றால் நிரந்தர பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது சாத்திமில்லாத ஒன்று! சில சமயங்களில் இந்தியாவுக்கு இருக்கும் பிடிமானத்தைத் தளர்த்துவதற்கான முயற்சியாகவும் இந்த முயற்சி இருக்க வாய்ப்புள்ளது.
இலங்கை அரசினால் “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் உள்ள அம்சங்கள் பல தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை அமெரிக்காவின் முன்மொழிவான LLRC யின் கோரிக்கையினை இந்தியா ஆதரித்தால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். இதனைத்தான் இலங்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பாடம் படித்துக்கொண்ட நல்லிணக்கக் குழுவின் எந்தப் பரிந்துரையையும் தமிழ் மக்கள் நாடி நிற்கவில்லை. தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் சிங்களப் படைகள் வடக்குக் கிழக்கிலிருந்து முதலில் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இதனை நிறைவேற்ற முதலில் ஆலோசிக்கவேண்டும், நிறைவேற்ற வழி கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழ் மக்களது நிலையைப் புரிந்து தெரிந்து கொண்ட நாடு இந்தியா, தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை அறிந்த நாடு இந்தியா, இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் கோரிக்கையாகும்.
LLRC பரிந்துரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகாது. பல தரப்பினரும் ஜெனிவாவின் தீர்மானத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். தீர்வு எதனையும் முன்வைக்காத அந்தத் தீர்மானம் தமிழர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றது ஆச்சரியமே! LLRC யின் பரிந்துரையை மட்டும் நிறைவேற்றும்படி கோருவதை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) முற்றாக நிராகரிக்கிறது.
ஆயினும் ஏதோ ஓர் வழியில் சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் உலகின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் திருப்பியதில் மட்டும் இது முக்கியம் பெறுகிறது. தமிழ் மக்கள் மீது மீண்டும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அதனால் மட்டுமே ஈ.ழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ஈ.என்.டி.எல்.எப்.) ஆதரிக்கிறது. நிலையை சரியாக அறிந்திராது விட்டாலும் புலம்பெயர்ந்த மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஜெனிவா நிகழ்வுகளின் மூலம் தமிழ் இன அழிப்பு வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதை வரவேற்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கான சர்வதேச ஒப்பந்தமான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை இந்தியா நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) மீண்டும் முன்வைக்கிறது.
இவ்வண்ணம்,
அரசியல் பிரிவு
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
mercredi 21 mars 2012
உலக அரங்கில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாக சிறிலங்கா
உலக அரங்கில் இனவாத அரசுக்கான வரைவிலக்கணமாகஇ சிறிலங்காவை முன்னுதாரணமாக கொள்ளலாம் என IEDஅமைப்பின் பிரதிநிதி கரன் பார்கர் அம்மையார் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைச் சபையில் இனவாதம் இனத்துவேசம் தொடர்பில் இடம்பெற்ற விவாத அமர்வில் கரன் பார்கர் அம்மையார் உரையாற்றியிருந்தார்.
உலகில் எங்கு இனநெருக்கடி இருக்கின்றதோ அங்கு இனவழிப்பு ஏற்படுத்துவதற்கான வழிநிலையுள்ளது என்ற ஐ.நாவின் முன்னாள் செயலாளர் நாயகம் கோபி அனானின் கூற்றினை மூலதாரணமாக கொண்டு தனது உரையை வழங்கிய கரன் பார்கர் அம்மையார் இனவாத மேலாதிக்க நிலையில், இனவழிப்பு ஏற்படுவதாக சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா ஐ.நா உரிமைகள் சாசனத்தில், இனவாத அரசுக்கான வரைவிலக்கணம் இல்லை என்பதனைச் சுட்டிக்காட்டிய கரன் பார்கர் அம்மையார், இன்றைய உலகில் சிறிலங்காவை ஒரு இனவாத அரசுக்குரிய முன்னுதாரணமாக கொள்ளாம் என் வலியுறுத்தினார்.
இலங்ககைத் தீவின் பெருன்பான்மை இனவாத சிறிலங்கா அரசானது, தமிழ் தேசிய இனத்தின் மீது கட்டவிழ்த்து வரும் இனவழிப்பைஇ அடுக்கிப் பேசிய கரன் பார்கர் அம்மையார் இ 1948ம் ஆண்டு முதல் சிறிலங்கா இனவாத அரசனாது, தமிழர்களின் அரசியல், சமூக இபொருளதார, கலாச்சார உரிமைகளை பறித்தெடுத்து வருகின்றமையை குறித்து கோடிட்டுக்காட்டினார்.
தமிழர்கள் மீது பயங்கரவாத முலாம்பூசிஇ சர்வதேச மனிதச் சட்டங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளும் சிறிலங்கா அரசானதுஇ தமிழர்கள் மீது இனவாதத்தை கட்டவிழ்த்து வருவதாக குறித்துரைத்த கரன் பார்கர் அம்மையார் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர் மீதும் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் சிறிலங்கா பயங்கரவாத முத்திரையை குத்தி வருவனைக் கோடிட்டு, தன்மீதும் இத்தகைய முத்திரையை, சிறிலங்கா இனவாத அரசு குத்தியுள்ளதாக இடித்துரைத்தார்.
மானிடத்துக்கான உரிமைகளும் பாதுகாப்பும் எனும் ஐ.நாவின் உயரிய சாசனக் கோட்பாட்டுக்கு முன்னால் சர்வதேச சமூகத்தால் கைவிடப்பட்ட இனமான தமிழினம் பெரும் அழிவைச் சந்தித்துள்ளமையை ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கையே தெளிவாக எடுத்துரைத்துள்ள நிலையில்இ இனவாத அரசுக்குரிய வரைவிலக்கணத்தை ஐ.நா விரைந்து வரைய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
நியுயோர்க் ரைம்ஸ்‘
இம்முறை சிறிலங்கா வெற்றி பெறுவது கடினம் .ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்த்துறை சிறிலங்கா தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பிரேரணையில் தனக்குச் சார்பாக வெற்றியைப் பெற்றுக் கொள்வது கடந்த தடவையை விடக் கடினமானதாக இருக்கும் என நியுயோர்க் ரைம்ஸ் ஏட்டில், ஜெனீவாவில் இருந்து NICK CUMMING-BRUCE எழுதிய செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றும் யோசனையை அமெரிக்கா கைவிடக்கூடும் ன அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், சுயாதீன காவல்துறை, நீதிமன்ற,தேர்தல் மற்றும் பொதுத்துறை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகல யோசனைத் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையே இன்றைய சூழ்நிலைக்கான பிரதான ஏதுவெனத் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள பல் வேறு சிறைகளில் கைதிகள் மிகவும் மோசமான முறை யில் சித்ரவதை
சண்டையின்போது பிடிபட்ட பலரை மனிதத் தன்மையற்ற முறையில் அமெரிக்க ராணுவத்தினர் நடத்தியுள்ளனர் என்று ஆப்கானிஸ்தானின் சுயேச் சையான மனித உரிமை ஆணையமும், அமெரிக்கா விலிருந்து இயங்கும் ஓபன் சொசைட்டி தொண்டு நிறு வனமும் குற்றம் சாட்டியுள் ளன.
ஆப்கானிஸ்தானில் அமைக்கப்பட்டுள்ள பல் வேறு சிறைகளில் கைதிகள் மிகவும் மோசமான முறை யில் சித்ரவதை செய்யப் பட்டு கொடுமைப்படுத்தப் பட்டுள்ளனர் என்று “சித்ர வதை, மாற்றங்கள் மற்றும் நீதி மறுப்பு” என்ற தலைப் பில் இந்த அமைப்புகள் ஒரு ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. ஏற் கெனவே பல மையங்களில் சித்ரவதைகள் நடத்தப்படு கின்றன என்று ஐக்கிய நாடுகள் சபையின் குழு ஒன்று உறுதிப்படுத்தி யிருந்தது.
இந்த கண்டுபிடிப்புக் குப் பிறகு, இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ள 16 சிறைகளுக்கு யாரையும் அனுப்பப் போவதில்லை என்று அமெரிக்கா தலை மையிலான ராணுவக்கூட் டான நேட்டோ அறிவித் தது. ஆனால், இவ்வாறு அறிவிக்கப்பட்ட பிறகும், சிறைக்கு அனுப்பப்பட்ட கைதிகள் கடும் சித்ரவதைக்கு ஆளாக் கப்பட்டுள்ளனர்.கைதிகள் இந்த சிறைக்கு அழைத்து வரப்படுவதற் கும், அவர்கள் சித்ரவதைக்கு ஆளாக்கப்படுவதற்கும் ஆதாரங்கள் உள்ளன என்று இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அடித்து உதைப்பது, மின் அதிர்ச்சி தருவது, பாலி யல் ரீதியாகத் சித்ரவதை செய்வது உள்ளிட்ட பல் வேறு வகையான சித்ரவதை கள் இருந்தன என்பதைப் பல்வேறு கைதிகள் மூல மாக ஆய்வாளர்கள் உறு திப்படுத்தியிருக்கிறார்கள்.
இதையெல்லாம் நிறுத்திவிட்டோம் என்று வெளிப்படையாக அறி வித்தபிறகும், சித்ரவதைகள் தொடர்ந்துள்ளன என்று இந்த அமைப்புகளின் ஆய்வு அம்பலப்படுத்தி யுள்ளது
யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் பெருமளவில் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக 85000 கணவரை இழந்துள்ளனர்.
மடு பிரதேசத்தைச் சேர்ந்த ஒர் கிராமத்தில் அதிகளவான பெணகள் பாலியல் தொழில்களில் ஈடுபட்டு வருவதாக பெண் உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
சில பெண்கள் தங்களது உடல்களை விற்று குழந்தைகளை பராமரித்து வருகின்றனர் என குறிப்பிடப்படுகிறது.
பெருமளவிலான பெண்கள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட நட்டஈடுகளை இதுவரையில் பெற்றுக்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் பல நாடுகளில் யுத்தக் குற்றச் செயல் விசாரணைகள் நடத்தப்படுவதாக விழுது அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சாந்தி சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் என்னும் நடவடிக்கை நல்லிணக்கத்தை நிலைநாட்டுவதில் மிக முக்கியமான பங்களிப்பை செலுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
mardi 20 mars 2012
எல்லோரும் ஐநா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை ஏன் ஆதரிக்கிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை” என்கிறார் துக்ளக் ஆசிரியர் சோ.
துக்ளக் வார இதழின் மிகப் பிரபலமான ஆசிரியரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான சோ எஸ். ராமசாமி அவர்கள்,மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு, தமிழ்நாட்டில் அழுது ஆர்ப்பாட்டம் செய்து ஆதரவு தெரிவிப்பது தேவையற்ற ஒன்று என ஆர்.பகவான்சிங் அவர்களிடம் தெரிவித்தார்.
கேள்வி: இங்குள்ள மற்றும் உலகெங்கும் உள்ள தமிழ்கட்சிகள், ஐநா மனித உரிமைச் சபையில் ஸ்ரீலங்காவுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுபு;புகின்றன. இதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
பதில்: அமெரிக்காவின் தீர்மானம் இவர்கள் நினைப்பதைப்போல, ஸ்ரீலங்காவை கண்டிக்கவில்லை என்பதை இந்த மனிதர்கள் உணர்ந்திருக்கிறார்களா என்பது எனக்குச் சந்தேகமே. அந்த தீர்மானம் கூறுவது, தென்னாபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினைப் போல, கொழும்பினால் அமைக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு (எல்.எல்.ஆர்.சி) என்கிற ஆணைக்குழு தனது அறிக்கையில் கூறியுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று. அமெரிக்காவின் தீர்மானம் மேலும் வலியுறுத்துவது, தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை ஏற்படுத்த வேண்டும் என்பதையும். ஈழக் காரணங்களுக்காக பரிந்து வேண்டுவோர் அதில் எதைக் காண்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
கேள்வி: ஸ்ரீலங்கா நடத்திய போர்க்குற்றங்களுக்காக அவர்கள் ஒரு சர்வதேச விசாரணையை கோருகிறார்கள் இல்லையா?
பதில்: அமெரிக்காவின் தீர்மானம் போர்க்குற்றங்களைப்பற்றி எதுவும் பேசவில்லை. அது மனித உரிமைகள் மீறல்களைப் பற்றித்தான் பேசுகிறது. ஸ்ரீலங்காவிலுள்ள மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் கூட அதைப்பற்றி தங்களது விரக்தியை வெளியிட்டிருந்தன. இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அதை வாசித்தார்களா என்பது எனக்குத் தெரியவில்லை, ஆனால் இங்கு அத்தகைய ஆக்ரோசமான ஆதரவைக் கோருவதில் ஒன்றுமேயில்லை.
இஸ்ரேலின் அத்தகைய மீறல்கள் பற்றி ஐநா மனித உரிமைச் சபை பேசியதற்கு என்ன நடந்தது? அதை எதிர்த்து பேசிய அமெரிக்கா, அது அரசியலாக மாறுகிறது என்று சொன்னது. உலகம் முழுவதும் மீறல்கள் நடக்கும்போது இஸ்ரேலை மட்டும் குறி வைப்பது ஏன்? இந்த நாட்டுக்கு மட்டும் நீங்கள் தனியான ஒன்றைச் செய்கிறீர்கள், அது நடக்காது என்று அமெரிக்கா சொன்னது. மற்றும் அதைத்தான் இந்தியாவும் சொல்கிறது. ஒருவேளை இஸ்ரேலின் மீதுள்ள உலகத்தின் கவனத்தை திசை திருப்பும் நோக்கோடு. மற்ற இடங்களில் கூட மனித உரிமை மீறல்கள் இடம்பெறுகின்றன என்பதை சாதாரணமாக எடுத்துக் காட்டுவதற்காக வேண்டி அமெரிக்கா இந்த தீர்மானத்தை கொண்டு வந்திருக்கலாம். இந்தியா அதன்மீது ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்? பரிவு காட்டும் தமிழர்கள் அதில் ஏன் ஆர்வம் காட்ட வேண்டும்.
கேள்வி: போர்க்குற்றங்களைப் புரிந்தவர்களைத் தண்டிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: அங்கு போரே நடக்கவில்லை. இந்திய அரசாங்கத்துக்கும் நக்சலைட்டுகளுக்கும் இடையே போரா நடக்கிறது? இந்திய அரசாங்கத்துக்கும் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கும் இடையே நடப்பது போரா? அங்கு போர் இல்லை, அங்கிருப்பது பயங்கரவாதம், அங்கு நடப்பது உள்நாட்டு கிளர்ச்சி, அரசாங்கம் அதை உறுதியான கரத்தைக் கொண்டு அடக்குகிறது, தேவைப்பட்டால் இராணுவத்தை பயன்படுத்துகிறது. பிந்தரன்வாலா சுட்டுக் கொல்லப்பட்டபோது பொற்கோவிலில் போரா இடம்பெற்றது? இராணுவம் அங்கிருந்தபடியால் அதை ஒரு யுத்தம் என நீங்கள் அழைப்பீர்களா?
கேள்வி: ஆனால் ஸ்ரீலங்காவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்தப் போரின்போது அல்லது அதை நீங்கள் எப்படி அழைக்க விரும்புகிறீர்களோ அதன்போது கொல்லப் பட்டிருக்கிறார்களே?
பதில்: ஏனெனில் தமிழீழ விடுதலைப் புலிகள்(எல்.ரீ.ரீ.ஈ) பொதுமக்களை கேடயங்களாகப் பயன்படுத்தினார்கள். இப்போது அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. அவர்கள் பொதுமக்களை பயன்படுத்த முடியும், அவர்கள் சிறுவர்களை மனிதக் கேடயங்களாகவும் மற்றும் தற்கொலைக் குண்டுதாரிகளாகவும் பயன்படுத்த முடியும்.
கேள்வி: தமிழ் தேசியவாதம் அளவுக்கு மீறிப் போகிறது என நீங்கள் எண்ணுகிறீர்களா?
பதில்: அதில் சந்தேகமே இல்லை. பல வருடங்களாக அப்படி நடைபெற்று வருகிறது. கிளர்ச்சியாளர்கள் எந்த விதி முறைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் அரசாங்கம் மட்டும் எப்போதும் யுத்தங்களுக்கான சர்வதேச சட்டம் அல்லது விதிகளைப் பின்பற்ற வேண்டியிருக்கிறது. இது எப்படி சாத்தியமாகும்? அப்படியானால் எந்த அரசாங்கத்தாலும் பயங்கரவாதத்தை அடக்க முடியாது. அது அப்படி என்றால் நாங்கள் அரசாங்கத்தை பயங்கரவாதத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றா கேட்கிறோம்.
கேள்வி: நாங்கள் இதை பின்னோக்கிப் பார்த்தால். இந்தப் பயங்கரவாதம், ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக பாகுபாடுகாட்டியதால்தானே உருவானது?
பதில்: நீங்கள் சொல்வதை நான் முற்றாக ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அந்த ஒன்று மட்டும் எல்.ரீ.ரீ.ஈ செய்ததை எல்லாம் நியாயப் படுத்திவிட முடியாது. ஸ்ரீலங்கா அரசாங்கம் செய்தததைக் காட்டிலும் மிக மோசமானதை அவர்கள் செய்தார்கள். அமிர்தலிங்கம் தொடங்கி அதன் பின்னான முழுத் தமிழ் தலைவர்களையுமே அவர்கள் துடைத்தழித்தார்கள். ஸ்ரீலங்கா அரசாங்கம் அப்படிச் செய்யவில்லை. எல்.ரீ.ரீ.ஈ முஸ்லிம்களை அவர்களின் மசூதியில் வைத்தே கொலை செய்து அவர்களை முற்றாக ஒழித்துக்கட்டினார்கள். அவர்கள் ஏனைய தமிழ் போராளிக் குழுக்களையும் கூட அழித்தொழித்தார்கள் .ஒரு கட்டத்தில், சிங்களவர்களும் நாங்களும்( ஸ்ரீலங்காத் தமிழர்களும்) சகோதரர்கள், இந்தியா ஒரு அந்நிய நாடு எங்கள் விவகாரங்களில் தலையிட அவர்களுக்கு உரிமையில்லை, என்று கூடச் சொன்னார்கள். எல்.ரீ.ரீ.ஈ அந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது. ஆனால் இங்கேயுள்ள எங்களுக்கோ அதன் பிறகுகூட வெட்க உணர்வு தோன்றவில்லை.
கேள்வி: எனவே எல்.ரீ.ரீ.ஈ இந்திய எதிர்ப்பு உணர்வு கொண்டதா?
பதில்: நிச்சயமாக அவர்கள் இந்திய எதிர்ப்பாளர்களே,மற்றும் அதனால்தான் அவர்கள் இந்திய அமைதி காக்கும் படையினருக்கு (ஐ.பி.கே.எப்) அங்கு களங்கம் ஏற்படுத்தி அந்த நடவடிக்கை முழுதான தோல்வி அடையும்படி செய்தார்கள். நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன், ஸ்ரீலங்காவிலுள்ள அனைத்து தமிழர்களுமே ஒற்றுமையாக இருக்கிறார்களா? கொழும்பில் உள்ள தமிழர்களும் வடக்கில் உள்ள தமிழர்களும் ஒற்றுமையாக இருக்கிறார்களா? கிழக்கில் உள்ள தமிழர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்களும் ஒற்றுமையாக உள்ளார்களா? தமிழ் புலம் பெயர் சமூகம் கூட ஒற்றுமையின்றித்தான் உள்ளது.
உண்மையில் ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்களிடம் நீதியற்ற முறையில்தான் நடந்து கொள்கிறது, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன, அவர்கள் அங்கு சமத்துவமான பிரஜைகளாக நடத்தப்படவில்லை. இது ஸ்ரீலங்காவால் தீர்க்கப்பட வேண்டியது, போர்க்குணம் அதற்கான தீர்வு அல்ல
ஒருவேளை அமெரிக்காவோ அல்லது வேறு எந்த நாடோ, நாளை காஷ்மீர் விடயத்திலும் இதேபோன்ற ஒரு பிரேரணைக்கு அனுசரணை வழங்குகிறது என வைத்துக்கொண்டால், நாங்கள் அதை மதிக்கப் போகிறோமா? இதைச் செய்ய அமெரிக்காவுக்கு அதிகாரம் கிடையாது என்றுதான் சொல்லப்போகிறோம். எல்.ரீ.ரீ.ஈ இரக்கமற்ற, மிகவும் கொடூரமான, ஒரு சக்தி மிக்க, பயங்கரவாத அமைப்பு. அவர்கள் ராக்கெட் ஏவுகணைகளைத் தவிர நீர்மூழ்கி கப்பல்கள், யுத்த விமானங்கள், என்பனவற்றையும் தம்வசம் வைத்திருந்தார்கள். எல்.ரீ.ரீ.ஈ ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்றது, மற்றும் அவர்களை துரோகிகள் என்று குற்றம் சுமத்தி அவர்களைக் கழுவியேற்றியது. அதுமட்டுமல்லாது தங்களைத் தவிர தமிழர்களுக்கு வேறு பிரதிநிதிகள் இருக்கக் கூடாது என்பதற்காக அவர்கள் முழு தமிழ் தலைவர்களையுமே கொன்றொழித்தனர்.
இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கக்கூடாது - இந்திய வம்சாவளி வியாபாரிகள் கோரிக்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த பிரேரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் வர்த்தக சங்கத்தினரால் இன்று மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், இலங்கை ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதற்காகவும், அமெரிக்கப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் மகஜரினைக் கையளித்துள்ளனர்.
இதன் போது அமெரிக்க தூதரகத்திற்கு சென்று மகஜரைக் கையளித்த அவர்கள் பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்றுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரரியொருவர், இலங்கையினை சர்வதேச சக்திகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், இலங்கையை சூறையாடுவதற்கும் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு சூழ்ச்சியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பற்றவும், ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதற்கும் தாம் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் இந்திய அரசிடம் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
lundi 19 mars 2012
சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவினை ஈ.என்.டி.எல்.எப். வரவேற்கிறது.
அமெரிக்காவினால் முன்மொழியப்பட்ட பிரேரணையை வரவேற்பதில் இந்தியாவுக்கு தயக்கம் இருந்தது உண்மையே, கூடியவரையில் நடுநிலை வகிப்பது என்ற முடிவிலிருந்து விலகி அப்பிரேரணையை இந்தியா ஆதரிப்பது என்ற முடிவை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) வரவேற்பதுடன் விடுதலைப் புலிகளால் ஏற்படுத்தப்பட்ட கசப்புணர்வை மறப்பதற்கான அறிகுறியைத் தெரியப்படுத்தியதற்காகவும் வாழ்த்து தெரிவிக்கிறது. யுத்தக்குற்றம் விசாரிக்கப்பட வேண்டும், குறைந்த பட்ச உரிமையான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை அமெரிக்கா முன்வைத்திருந்தால் இந்தியா எப்போதோ தன் முடிவினை அறிவித்திருக்கும்.
ஈழத் தமிழரது இனப் பிரச்சினையில் இந்தியா நேரடியாகத் தலையிட்ட நாடு. தமிழர் சார்பாக சிறிலங்காவுடன் கையெழுத்திட்டு, சில குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெற்றுக் கொடுத்த நாடு இந்தியா, அன்றைய காலகட்டத்தில் இந்தியாவினால் ஏற்படுத்தப்பட்ட தீர்வொன்றினை முறியடிக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. காரணம், வங்காள தேசத்தைப் போன்று மேலும் ஓர் தனிநாட்டினை உருவாக்க இந்தியாவை அனுமதிக்கக் கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க முயற்சித்த நாடுகளில் அமெரிக்கா முக்கிய பங்கு வகித்தது. பிரேமதாசாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் ஆயுதங்களை வழங்கி அந்த ஒப்பந்தத்தினை முறியடிக்க அமெரிக்கா முன்நின்றது.
மாநில அரசு அமைவதற்கும், வடக்குக்கிழக்கு மாநிலங்களை இணைப்பதற்கும், கல்வி, நிலம், பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படை என்ற அம்சங்களை இந்தியா ஒப்பந்தம் வழியாக அமுல்படுத்தியது. தமிழ் மக்கள் சார்பாக ஏற்படுத்தப்பட்ட சர்வதேச ஒப்பந்தம் இதுவாகும்.
2006ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கில் அன்பளிப்பு நாடுகள் (DONORS COUNTRIES) என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழர்களை மொத்தமாக அழிக்க இலங்கை அரசுக்கு நிதியுதவிகளைத் தாராளமாய் வழங்கிய நாடுகளில் முதன்மையானது அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.
2009ல் தமிழ் மக்களை இன அழிப்புச் செய்தபோது ஐ.நா.வின் மனித உரிமைக்குழுவையும், மருத்துவக் குழுவையும் வெளியேறும்படி உத்தரவிட்டது சிறிலங்கா அரசு. சாட்சியங்கள் எதுவும் இல்லாமல் தமிழர்களைக் கொல்ல வேண்டும் என்ற சதிச் செயலுக்கு ஐ.நா. அன்று துணை போனது. மக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் போதே ஐ.நா.குழு வெளியேறியது. இதற்கு ஐ.நா.வின் நிர்வாகத் தலைமையே பொறுப்பேற்க வேண்டும். கொலைக் களத்துக்கு இடம் கொடுத்தது ஐக்கிய நாடுகள் சபையே!
யுத்த விதி மீறல், மனித உரிமை மீறல் மட்டும் அங்கு நடைபெறவில்லை, முழுக்க முழுக்க இன அழிப்பு நடவடிக்கைதான் அங்கு நடைபெற்றது. பௌத்தத்துக்கும் ஈழத் தமிழ் மக்களுக்குமான 2000 ஆண்டுகாலப் பகையை சந்தர்ப்பம் பார்த்து சிங்களப் பௌத்தத்தின் கொள்கையான தமிழின அழிப்பை நிறைவேற்றிக்கொண்டது சிங்கள அரசு.
தமிழ் மக்களின் அழிவுக்கு ஐ.நா.வும் அமெரிக்காவும் பின்னணியில் செயல்பட்டன என்பது மறுக்க முடியாத உண்மை. இப்போது சானல்-4 மூலம் ஒளிப்படங்கள் வெளிவந்த நிலையில், நல்லிணக்க ஆணைக் குழு (LLRC)வின் பரிந்துரையை நிறைவேற்ற வேண்டும் என்ற பிரேரணையை முன்மொழிந்திருப்பது தமிழ் மக்களுக்கான தீர்வாகாது.
தமிழ் மக்கள் LLRC யின் பரிந்துரையையோ, அதன் விசாரணையையோ கோரிக்கையாக முன்வைக்கவில்லை. இலங்கை அரசின் ஏமாற்றுக் கொமிசன்களின் நடவடிக்கைகளில் ஒன்றுதான் LLRC. 1977 கலவரம், 1983 கலவரம், வெலிக்கடை படுகொலை விசாரணை என்று அனைத்தும் ஏமாற்றுத் தந்திரங்களே தவிர அவர்கள் எதனையும் நடைமுறைப் படுத்தியதாக வரலாறு கிடையாது.
இன அழிப்புக்கான படுகொலை விசாரிக்கபட வேண்டும் என்று அமெரிக்கா பிரேரணை கொண்டு வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள் கோராத, விரும்பாத இந்த முன் மொழிவைக் கொண்டு வருவதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. இது இலங்கை அரசுக்குச் சாதகமான ஓர் நடவடிக்கையா? என்ற ஐயப்பாடும் உள்ளது.
அமெரிக்கா யுத்தக் குற்ற விசாரணையை முன்மொழிந்திருந்தால் அதற்கான ஏற்பாடு எப்படியிருந்திருக்க வேண்டும்?
விசாரணை என்பது ஒளிப்படங்களைப் பார்த்து நடத்தப்படுவதில்லை, பாதிக்கப்பட்ட மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்ல வேண்டும், இன்றைய சூழலில் தமிழ் மக்கள் முன்வந்து சாட்சியம் சொல்லிவிட்டு வீடு சென்று உயிர் வாழ முடியாது! ஏனெனில் அன்று கொலை செய்த அதே கொலைகாரர்களின் பாதுகாப்பில்தான் இன்றும் தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். அப்படியும் விசாரணை நடைபெறும் என்றால் அது ராஜபக்ச ஏற்பாடு செய்த நபர்கள்தான் சாட்சிகளாக காட்சி தருவர்.
உண்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்றால் ஐ.நா. வின் படை இலங்கைக்குச் செல்ல வேண்டும். தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் நிர்வாகத்தையும் பாதுகாப்பையும் ஐ.நா. மேற்கொள்ள வேண்டும்.
இப்படி ஓர் ஏற்பாடு நடைபெற அமெரிக்கா முன்மொழிந்தால் அதனைப் பாராட்டி ஆதரிக்கலாம். அப்படி எந்த முன்மொழிவும் இதுவரை இல்லை! இதனைச் செய்யாத அமெரிக்காவின் முயற்சியில் எந்தப் பயனும் தமிழர்களுக்கு இல்லை. பதிலாக தமிழ் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
ஐ.நா. படையை அனுப்ப வேண்டும் என்றால் நிரந்தர பாதுகாப்பு கவுன்சிலுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இது சாத்திமில்லாத ஒன்று! சில சமயங்களில் இந்தியாவுக்கு இருக்கும் பிடிமானத்தைத் தளர்த்துவதற்கான முயற்சியாகவும் இந்த முயற்சி இருக்க வாய்ப்புள்ளது.
இலங்கை அரசினால் “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதில் உள்ள அம்சங்கள் பல தமிழ் மக்களுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது. ஒருவேளை அமெரிக்காவின் முன்மொழிவான LLRC யின் கோரிக்கையினை இந்தியா ஆதரித்தால் இந்திய-இலங்கை ஒப்பந்தம் நிராகரிக்கப்பட்டதாகிவிடும். இதனைத்தான் இலங்கை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
பாடம் படித்துக்கொண்ட நல்லிணக்கக் குழுவின் எந்தப் பரிந்துரையையும் தமிழ் மக்கள் நாடி நிற்கவில்லை. தமிழ் மக்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்றால் சிங்களப் படைகள் வடக்குக் கிழக்கிலிருந்து முதலில் வெளியேற வேண்டும் அல்லது வெளியேற்றப்பட வேண்டும். இதனை நிறைவேற்ற முதலில் ஆலோசிக்கவேண்டும், நிறைவேற்ற வழி கண்டுபிடிக்க வேண்டும்.
தமிழ் மக்களது நிலையைப் புரிந்து தெரிந்து கொண்ட நாடு இந்தியா, தமிழ் மக்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை அறிந்த நாடு இந்தியா, இந்தியா ஏற்படுத்திய ஒப்பந்தத்தினை முழுமையாக நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்பது ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.)யின் கோரிக்கையாகும்.
LLRC பரிந்துரை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாகாது. பல தரப்பினரும் ஜெனிவாவின் தீர்மானத்தை எதிர்பார்த்திருக்கின்றனர். தீர்வு எதனையும் முன்வைக்காத அந்தத் தீர்மானம் தமிழர் மத்தியில் முக்கியத்துவம் பெற்றது ஆச்சரியமே! LLRC யின் பரிந்துரையை மட்டும் நிறைவேற்றும்படி கோருவதை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) முற்றாக நிராகரிக்கிறது.
ஆயினும் ஏதோ ஓர் வழியில் சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கை வெளியுலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டதன் மூலம் உலகின் கவனத்தை ஈழத் தமிழர் பக்கம் திருப்பியதில் மட்டும் இது முக்கியம் பெறுகிறது. தமிழ் மக்கள் மீது மீண்டும் அனுதாபம் ஏற்பட்டுள்ளது. அதனால் மட்டுமே ஈ.ழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி(ஈ.என்.டி.எல்.எப்.) ஆதரிக்கிறது. நிலையை சரியாக அறிந்திராது விட்டாலும் புலம்பெயர்ந்த மக்களின் முயற்சி பாராட்டுக்குரியது.
ஜெனிவா நிகழ்வுகளின் மூலம் தமிழ் இன அழிப்பு வெளி உலகுக்கு எடுத்துச் சொல்லப்பட்டதை வரவேற்கும் அதேவேளை தமிழ் மக்களுக்கான சர்வதேச ஒப்பந்தமான “இந்திய-இலங்கை” ஒப்பந்தத்தினை இந்தியா நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈ.என்.டி.எல்.எப்.) மீண்டும் முன்வைக்கிறது.
இவ்வண்ணம்,
அரசியல் பிரிவு
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
19-03-2012
13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம்?
13ம் திருத்தச் சட்ட மூலத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இந்தியா, இலங்கைக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்கத் தொடங்கியுள்ளதாக ராஜதந்திரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தியா இவ்வாறு அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களை மாகாணசபைகளுக்கு பகிர்வது தொடர்பிலான நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை. இலங்கைக்கு ஆதரவளிக்க வேண்டுமாயின் திருத்தச் சட்ட மூலத்தை அமுல்படுத்த வேண்டுமென இந்தியா மறைமுகமாக கோரி வருவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்கனவே பேச்சுவார்ததைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின்படி, இப்பேச்சுவார்ததையில் தமது கட்சி உட்பட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கையில் 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு முழுமையாக வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுகின்ற அனைத்து விதமான முயற்சிகளையும் எதிர்ப்பதாகவும் இம்மாநாட்டில் மேலுமோர் தீர்மாணம் நிறைவேற்றப்டப்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த மாநாட்டில் விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
dimanche 18 mars 2012
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டு நிகழ்வுகள் 18 ம் திகதி காலை 09.00 மணிமுதல் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் இணையத்தளங்கள்
http://www.livestream.com www.meenmagal.net www.chandrakanthan.comwww.puthiyavidiyal.comwww.shanthru.comwww.battinews.comwww.unmaikal.comwww.makkalinkural.comwww.mahaveli.comwww.aayul.com ...
இலங்கையில் நடந்த இறுதிகட்ட போரின் போது அப்பாவி தமிழ் மக்கள் மீது இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொலை வெறியாட்ட வீடியோ காட்சிகள் ஐ.நா. சபையில் திங்கட்கிழமை ஒளிபரப்பரப்பட உள்ளது.
போர்க் குற்றம் செய்துள்ள இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தின் மீது உலக நாடுகள் வாக்களிக்க உள்ள நிலையில், சேனல் 4 தொலைக்காட்சி நேரடியாக இலங்கையில் எடுத்த வீடியோ காட்சிகளை ஐ.நா. சபையில் ஒளிபரப்ப உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது
samedi 17 mars 2012
தமிழ் மக்கள் விடுதலை புலிகளின் முதலாவது மாநாடு - மட்டக்களப்பு நகரம் களைகட்டுகின்றது
தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முதலாவது தேசியமாநாட்டு ஏற்பாடுகளை ஒட்டி மட்டக்களப்பு நகரமும் மட்டக்களப்பு மாவட்டமும் மிகவூம் பரபரப்பாக முன்னேற்பாடுகள் இடம்பெற்று வருகின்றது.
மாநாடு இடம்பெறவிருக்கும் கல்லடி சிவானந்தா விளையாட்டரங்குஇ மாநாட்டு மண்டப அரங்கு சோடனைகள் என்று களைகட்டி வருகின்றது. கட்கித் தலைவா; சந்திரகாந்தன்இ மாகாணசபை உறுப்பினர்கள்இ கட்சி முக்கியஸ்தர்கள்; என்பலரும் இரவூ பகல் பாராது மாநாட்டு வேலைகளில் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.
கிழக்கு மாகாண வரலாற்றில் ஒருபோதும் இல்லாதவாறு மிகபிரமாண்டமான முறையில் இடம்பெறவூள்ள இத்தேசிய மாநாட்டுக்கு சுமார் 10000ற்கும் அதிகமானோர் பங்கெடுப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், "சிறந்த சர்வதேச இளைஞன்" என்ற விருது
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவுக்கு இந்திய அரசாங்கம், "சிறந்த சர்வதேச இளைஞன்" என்ற விருது வழங்கி கௌரவிக்கவுள்ளது.
இந்த விருதானது புதுடில்லியில் நடைபெறவுள்ள ஒரு பத்திரிக்கை விழாவில் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிகழ்விற்காக டெல்லிக்கு வரும் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்தி விடக்கூடாது என்பதற்காக அவருக்கு இசட் (Z ) பிரிவு பாதுகாப்பை இந்திய அரசு வழங்கியிருக்கிறது.
அதேவேளை, போர் குற்றங்களுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டுமென உலகம் முழுக்க தமிழர்கள் கண்ணீர் வடித்து வேண்டுகோள் விடுத்துக்கொண்டிருக்கும் சூழலில் போர்க்குற்றவாளியான மகிந்தவின் மகனான நாமலுக்கு இந்திய அரசாங்கம் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது
விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை
மட்டக்களப்பு நகரின் கூழாவடி பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.20 மணியளவில் விஞ்ஞான ஆசிரியர் ஒருவர் ரயிலில் மோதி தற்கொலை செய்து கொண்டுள்ளார். மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நடைபெற்ற இத் தற்கொலை குறித்து மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயில் வண்டியில் மோதி நடராஜா ராஜு (45) என்பவரே உயிரிழந்துள்ளார். அம்பாறை மாவட்டத்தின் தம்பிலுவில் அரசடி பிரதேசத்தைச் சோர்ந்த இவர் மட்டக்களப்பு பாடசாலை ஒன்றின் விஞ்ஞான பாட ஆசிரியர் என தெரிவிக்கப்படுகிறது. 4 பிள்ளைகளின் தந்தையான இவரது மரணம் தொடர்பான விசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.வி.பெர்ணான்டோ மரண விசாரணையை மேற்கொண்டார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.
jeudi 15 mars 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியா ஆதரிக்க தவறினால் மத்திய அரசுக்கான ஆதரவு வாபஸ்: மு.கருணாநிதி!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்காவிடின், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலிருந்து விலகுவது தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி முடிவெடுப்போம் என்று தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்திய மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு செய்யும் துரோகமாகவே அமையும் என்றும் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
இது குறித்து தி.மு.க. தலைவர் கருணாநிதி மேலும் கூறியுள்ளதாவது,
இலங்கையில் உச்சகட்டப் போர் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, தான் ஆற்ற வேண்டிய கடமையிலிருந்து முழுமையாக தவறிவிட்டது திமுக என்ற குற்றச்சாட்டு இந்த நிமிடம் வரை வலுவாகவே உள்ளது. இந்த நிலையில் தற்போது அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று திமுக உரத்த குரல் எழுப்பி வருகிறது.
நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட தமிழக எம்.பிக்கள் தொடர்ந்தும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். ஆனால் இலங்கைக்கு எதிராக செயற்பட மாட்டோம், நட்பு உள்ளது, வரலாற்று ரீதியான உறவு உள்ளது. அது பாதிக்கப்படக் கூடாது என்று இந்திய மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
இந்த நிலையில் நாங்கள் மத்திய அரசுக்கு வழங்கி வரும் ஆதரவை வாபஸ் பெறுவது குறித்தோ அல்லது அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்வது குறித்தோ நானாக மட்டும் முடிவு செய்ய முடியாது. எங்களது செயற்குழு கூடித்தான் முடிவெடுக்கும்.
இருப்பினும் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை மத்திய அரசு ஆதரிக்காவிட்டால் அது தமிழ் இனத்திற்கு இந்தியா செய்த துரோகமாகவே திமுக கருதும். எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் தீர்க்கமானதொரு முடிவை எடுப்போம்’ என்று கூறியுள்ளார் கருணாநிதி.
மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர் தமிழர் எதிர்க்க வேண்டும் என்கிறார் ராஜேஸ்வரி சுப்பிரமணியம்!
அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமை கூட்டத் தொடரில் மேற்கொண்டு வரும் மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டை புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்று திரண்டு எதிர்க்க வேண்டுமென லண்டனில் உள்ள டயஸ் போரா டயலொக் அமைப்பின் அங்கத்தவர் ராஜேஸ்வரி சுப்ரமணியம் கோரிக்கை விடுத்தார்.
இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இலங்கையில் இருந்து சென்ற புலம்பெயர்ந்த தமிழர்கள் வடபகுதி மக்களுக்கு எந்தவிதமான உதவிகளையும் செய்வதற்கு முன்வரவில்லை. புலம்பெயர்ந்த சமூகத்தினரால் திரட்டப்பட்ட மில்லியன் கணக்கான டொலர்களை சுருட்டிக் கொண்டு ஆடம்பரமாக வாழ்ந்து வருகின்றனர்.
யுத்தத்தினால் வடபகுதி மக்கள் வீடுகளையும், சொத்துக்களையும் இழந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கையில் அவர்களுக்காக அமெரிக்க அரசாங்கமோ, புலம்பெயர்ந்தவர்களோ உதவிகளை செய்வதற்கு முன்வரவில்லை. இவர்கள் தற்போது தமிழினத்திற்காக குரல் கொடுக்கிறோம் என்று முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அரசாங்கம் தனது அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது. அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும்.
அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.அரசியல் செல்வாக்கை நிலை நிறுத்திக் கொள்வதற்காகவே இலங்கை அரசாங்கத்தின் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளது.
அமெரிக்காவின் அரசியல் விளையாட்டில் நாம் அகப்பட்டுவிடக் கூடாது. இலங்கையின் ஐக்கியத்தையும், ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் ஒன்றுபட வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. சர்வதேச அழுத்தத்தில் இருந்து இலங்கையை விடுவிப்பதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு அமெரிக்காவுக்கு எதிராக செயற்பட வேண்டும்.
அமெரிக்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களை வைத்துக் கொண்டு இலங்கையில் உள்ள தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி வரு கின்றது. அமெரிக்கா எங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவமாவது செய்யாமல் இருக்க வேண்டுமென ராஜேஸ்வரி சுப்ரமணியம் கேட்டுக் கொண்டார்.
mercredi 14 mars 2012
ஜெனீவாவிலோ வெள்ளை அறிக்கை – கொழும்பிலோ வெள்ளை வான் வித்தை! இதுதானா அரசாங்கத்தின் இலட்சணம் என்கிறார் மனோ கணேசன்
ஜெனீவா ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் வெள்ளை அறிக்கை சமர்பித்து தம்மை மனித உரிமை காவலனாக காட்டிக்கொள்ள, இந்த அரசாங்கம் படாத பாடுபடுகிறது. அதேவேளையில் அதே அரசாங்கம் கொழும்பில் வெள்ளை வேனை அனுப்பி ஆட்களை கடத்துகின்றது. கடந்த காலங்களில் நாம் வெள்ளை வேன் கலாச்சாரத்தை சுட்டி காட்டி உலகத்தை தட்டி எழுப்பிய போது, மறுப்பு அறிக்கை விட்டு வந்த இந்த அரசு இன்று கையும், மெய்யுமாக அகப்பட்டு கொண்டுள்ளது. இதுதான் நான் நம்பும் இயற்கை நீதி இந்த அரசாங்கத்திற்கு தந்துள்ள தண்டனை என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இரண்டு தினங்களுக்கு முன் நடைபெற்ற, கொழும்பு மாவட்டத்தின் கொலோன்னாவை நகரசபை தலைவர் ரவீந்திர உதயசாந்தவை கடத்தும் முயற்சி தொடர்பில் கருத்து தெரிவித்த மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
இந்த நகரசபை தலைவர் ஆளும்கட்சியை சேர்ந்தவர். தமது கட்சியின் உட்பிரச்சினையில் அகப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர் தற்சமயம் தம்மை கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சி தொடர்பில் எமது மக்கள் கண்காணிப்பு குழுவிற்கு புகார் செய்துள்ளார். இவரது அரசியல் எமக்கு ஏற்புடையதல்ல. ஆனால் இவரை சட்ட விரோதமாக வெள்ளை வேனை அனுப்பி கடத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சியை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
கடத்த முயற்சி செய்த நபர்கள் பொதுமக்களால் சுற்றி வளைக்கப்பட்டு வெல்லம்பிட்டிய போலீசில் ஒப்படைக்கப்பட்டார்கள். தற்சமயம் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. அத்துடன் அப்போது இந்த போலிஸ் நிலையத்தில் பணியாற்றிய வெல்லம்பிட்டிய போலிஸ் பொறுப்பதிகாரியும் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடத்தல்காரர்களது வெள்ளை வேன் வாகனமும் மக்களால் அடித்து நொறுக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்கள் வசம் இருந்த ஆயுதங்களை பார்க்கும் போது இவர்கள் சீருடைக்காரர்கள் என்பது தெளிவாக புரிகிறது.
பகிரங்கமாக அறியப்பட்ட ஒரு நகரசபையின் தலைவரை பட்ட பகலில் ஆயுதம் தரித்த நபர்கள் பலவந்தமாக கடத்துவதற்கு, தலைநகர் கொழும்பில் முயற்சி செய்துள்ளார்கள் என்பதுதான் நடந்த சம்பவம். இது தொடர்பில் அரசாங்கம் இதுவரை முழுமையான விளக்க அறிக்கை சமர்பிக்கவில்லை.
ஆனால் இந்த அரசாங்கம் இன்று, ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் வரிசையாக அறிக்கை சமர்பித்து கொண்டிருக்கின்றது. மனித உரிமைக்கான இலங்கையின் விசேட பிரதிநிதி அமைச்சர் மகிந்த சமரசிங்க, வெளிவிவகார அமைச்சர் ஜி எல் பீரிஸ், முன்னாள் சட்ட மாஅதிபர் மொஹான் பீரிஸ், ஐநா நிரந்தர பிரதிநிதி பாலித கோஹன, ஜெனீவா நிரந்தர பிரதிநிதி தமரா குணநாயகம் ஆகியோர் தமது அரசாங்கம் மனித உரிமைகளை கடைபிடிப்பதிலும், அவற்றின் நடைமுறைகளை கண்காணிப்பதிலும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது என ஒவ்வொரு நாளும் தொடர் வெள்ளை அறிக்கைகளை ஜெனீவாவில் சமர்பித்து கொண்டு இருக்கிறார்கள்.
இவர்களது அனைத்து அறிக்கைகளையும் இன்று இந்த கொலொன்னாவை சம்பவம் தோல்வி அடைய செய்துள்ளது.
கடந்த காலங்களில் வெள்ளை வேன்களில் துடிக்க, துடிக்க கடத்தப்பட்ட எமது உடன்பிறப்புகள் பற்றி நமது மக்கள் கண்காணிப்பு குழு குரல் எழுப்பி உலகை தட்டி எழுப்பியது. இன்று இந்த விடயங்கள்தான் ஐநா மனித உரிமை ஆணைக்குழுவில் பேசப்படுகின்றன. இன்று தமது சொந்த கட்சிகாரர்களையே கடத்துபவர்கள்தான், அன்று எம்மவர்களை கொழும்பில் கடத்தினார்கள். இதை நான் அன்றும் சொன்னேன். இன்றும் சொல்கிறேன். நான் சொல்வது இன்று நிருபிக்கப்பட்டுவிட்ட உண்மை. உண்மையை சொல்வதில் நான் எவருக்கும் எப்போதும் அஞ்ச மாட்டேன். அரசாங்கம் முடியுமானால் பதில் சொல்லட்டும்
இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் அஜய்குமார் சிங், நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவையும், லெப். ஜெனரல் அஜய்குமார் சிங் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் இந்திய இராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் ராகுல் பரத்வாஜ், கேணல் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை லெப்.ஜெனரல் அஜய் குமார் சிங் தலைமையிலான குழுவினருக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை குறித்து விபரித்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும், யாழ்.படைத் தலைமையகத்துக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரபாகரன் பாலச்சந்திரன் படுகொலை - சனல் 4 வீடியோவை ஏற்க முடியாது - மறுக்கும் அமெரிக்கா!
இலங்கையில் போர்க் குற்றங்கள் இடம்பெற்றன என்று குற்றச்சாட்டி பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சியால் ஆக்கப்பட்டு உள்ள இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டனைக்கு உட்படுத்தப்படாத போர்க் குற்றங்கள் என்கிற ஆவண வீடியோவை அங்கீகரிக்க அமெரிக்கா மறுத்து உள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் Victoria Nuland ஊடகவியலாளர்கள் முன்னிலையில் இலங்கை விவகாரம் தொடர்பாக அமெரிக்காவின் நிலைப்பாட்டை விளக்கினார்.
அப்போதே இவ்வீடியோவை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்றார்.
குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் பாலச்சந்திரன் இலங்கை அரச படையினரால் படுகொலை செய்யப்பட்டார் என்று வீடியோவில் காட்டப்பட்டு இருக்கின்றமையை அங்கீகரிக்க முடியாது உள்ளது என்றார்.
mardi 13 mars 2012
சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு (Interpol) பிடியாணை
சிறீலங்காவைச் சேர்ந்த 93 பேருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் (Interpol) பிடியாணையைப் பிறப்பித்துள்ளனர்.இவர்களில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் வெளிவிவகாரப் பொறுப்பாளர் கே.பி. என அழைக்கப்படும் குமரன் பத்மநாதன், லலித் கொத்தலாவலவின் பாரியார் சிசிலி கொத்தலாவ, முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் மருமகன் தனுனு திலகரத்ன ஆகியோரும் அடங்குவர்.
பயங்கரவாத நடவடிக்கை, நிதி மோசடி, போலியான ஆவணங்கள் போன்றவை தொடர்பிலே இந்த இலங்கையர்கள் மீது சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளனர்.
இலங்கை சீனாவை நோக்கி நகரும் ஜனாதிபதி சட்டத்தரணி
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்காவினால் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையை எதிர்த்து இந்தியா வாக்களிக்காவிடின் அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாவிட்டால் இலங்கை சீனாவை நோக்கி நகரும் என்பதனை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி சட்டத்தரணி கோமின் தயாசிறி தெரிவித்தார்.
எனினும் தென்னிந்தியாவின் அழுத்தம் காரணமாக இந்தியா இம்முறை ஜெனீவாவில் எவ்வாறான முடிவை எடுக்கும் என்று தெரியாமல் உள்ளது. ஆனால் தன்னைச் சுற்றி எதிரி நாடுகளை வைத்துக்கொண்டுள்ள இந்தியாவுக்கு இலங்கை மட்டுமே எவ்விதத் தொல்லையும் கொடுக்காமல் மிக நெருக்கமான நட்பு நாடாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் தமிழக எம்பிக்கள் முழக்கமிட்டனர். இதனால் ராஜ்யசபா முடக்கப்பட்டது. இருப்பினும் லோக்சபா தொடர்ந்து செயல்பட்டது.
lundi 12 mars 2012
சனல்-4 ஆவணப்பட இயக்குனர்
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படைகளின் போர்க்குற்றங்களைத் தடுக்க ஐ.நாவோ மேற்குலகமுமோ காத்திரமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என்று “சிறிலங்காவின் கொலைக்களங்கள்“ ஆவணப்பட இயக்குனர் கல்லம் மக்ரே குற்றம்சாட்டியுள்ளார்.
பிபிசி சிங்களசேவைக்கு அளித்துள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்கா அரசுக்கு எதிரான பல குற்றச்சாட்டுகளை ஐ.நா ஆவணங்களும், விக்கிலீக்சில் வெளியான அமெரிக்காவின் தொடர்பாடல் குறிப்புகளும், ஐ.நாவின் முன்னாள் மூத்த அதிகாரி ஜோன் ஹோம்ஸ்சின் செவ்வியும் உறுதி செய்துள்ளன.
அனைத்துலக சட்டங்களின் கீழ் பொதுமக்களை பாதுகாக்க வேண்டியது முதன்மையான கடமை.
அந்தக் கடமை நிறைவேற்றப்படவில்லை. அதில் அனைத்துலக சமூகம் தவறிழைத்து விட்டது.
அனைத்துலக சமூகம் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் இடம்பெறுவதைத் தடுக்கத் தவறியதற்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன.
அப்போதைய சூழலில் தீவிரவாதத்துக்கு எதிராக மேற்குலகம் நடத்திய உலகளாவிய போர் என்ற மேற்குலக நிகழ்ச்சி நிரலை ராஜபக்ச அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டு தமது செயற்பாட்டை நியாயப்படுத்தியது.
சனல் 4 தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள புதிய ஆவணப்படம், விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் திட்டமிட்ட அடிப்படையில் படுகொலை செய்யப்பட்டுள்ளதை தெளிவாக உறுதி செய்கிறது.
சிறிலங்காப் படையைச் சேர்ந்த ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த ஒளிப்படங்கள் காணொலி நிபுணர்களால் கவனமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அது உண்மையானதே என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
காயத்தின் தன்மையின் மூலம் அந்த இறப்பு ஒரு மோசமான படுகொலை என்பதை உறுதி செய்கிறது.
விடுதலைப் புலிகளின் முன்னணி தலைவர்களும், போராளிகளும் முறைப்படியாகத் திட்டமிட்ட அடிப்படையில் சிறிலங்காப் படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை இந்தக் கொலை உறுதிப்படுத்துகிறது.
பொதுமக்கள் வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டதற்கு சிறிலங்கா அதிபர் மகந்த ராஜபக்ச, பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட உயர்மட்ட தளபதிகளின் உத்தரவே காரணம் என்று இந்த ஆவணப்படம் குற்றம்சாட்டுகிறது.
சிறிலங்கா இராணுவம் மிகமிக ஒழுக்கமானது, நன்கு ஒருங்கிணைக்கப்பட்டது, என்றும் போரைத் தாமே வழிநடத்தியதாகவும் சிறிலங்கா அதிபரும், பாதுகாப்புச் செயலரும் தொடர்ச்சியாக உரிமை கோரி வந்துள்ளனர்.
ஐ.நா பதுங்குகுழிகள் மீதும் அதனைச் சுற்றியும் முறைப்படி திட்டமிட்ட எறிகணைத் தாக்குதல்களை சிறிலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர்.
அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததும், கோத்தாபய ராஜபக்சவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் அது நேரடியாக தெரியப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் சற்று விலகி தாக்குதல்கள் தொடர்ந்தன.
இது போர் தவிர்ப்பு வலயம் மீதான தாக்குதல்களை சிறிலங்காவின் உயர்மட்டக் கட்டளை படம் நன்றாகவே அறிந்திருந்தது என்பதை உறுதிசெய்கிறது.
மனிதகுலத்துக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட போர்க்குற்றங்களுக்கு நேரடியான பொறுப்பை இவர்களே வகித்துள்ளனர்.
பொதுமக்களை கேடயமாக பாவித்தது உள்ளிட்ட விடுதலைப் புலிகளின் போர்க்குற்றங்களை எவரும் நிராகரிக்கவில்லை.
விடுதலைப் புலிகள் மீதான போர்க்குற்றங்கள் தெளிவானவை, ஆவணப்படுத்தப்பட்டவை, அவற்றுக்குச் சவால்விட முடியாது." என்றும் அவர் கூறியுள்ளார்.
ஐ.நா.வின் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிப்பது இந்தியாவுக்கு தீங்கானது :- சுவாமி
விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்தத்தின்போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்காக இலங்கையை கண்டிக்கும் ஒருதலைப்பட்சமான தீர்மானத்தை ஐ.நா.வின் கூட்டத்தில் நிறைவேற்றும் முயற்சிக்கு இந்தியா ஆதரவளிக்க கூடாதென ஜனதா கட்சியின் தலைவர் இன்று கூறியுள்ளார்.
இத்தீர்மானத்துக்கு இந்தியா ஆதவளிப்பது, காஷ்மீர், மணிப்பூர் தொடர்பில் இதுபோன்ற தீர்மானங்கள் கொண்டுவரப்படும் நிலைமையை தோற்றுவிக்கும். இலங்கை தமிழர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் வகையில் இலங்கை அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள இந்தியா தூண்ட வேண்டுமென சுவாமி கூறினார்.
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையகத்திலுள்ள மனித உரிமைக் குழுக்களின் தந்திர வலையில் இந்தியா வீழ்ந்து விடக்கூடாது என சுவாமி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள தீர்மானம் தமிழீழ புலிகளின் உரிமை மீறல்களை பூரணமாக கவனிக்காது விட்டுள்ளது எனவும் அவர் கூறியிருக்கிறார்.
இவ்வாறான பக்கச்சார்பான தீர்மானத்துக்கு இந்தியா அளிக்கும் ஆதரவு காஷ்மீர், மணிப்பூர் தொடர்பாக இந்தியாவுக்கு எதிரான தீர்மானங்களை கொண்டுவர வழிவகுப்பதாக அமையும். இந்தியாவுக்கு கெட்ட பெயரை கொண்டுவரத் துடிக்கும் தீவிரவாத சக்திகளுக்கு இது நல்லதொரு வாய்ப்பாக அமையும் என சுவாமி கூறினார்.
அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகளுடன் கலந்தாலோசித்த பின் விட்டுக்கொடுப்பு தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து இலங்கையின் தமிழ் பிரஜைகளின் நியாயமான அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடிய யாப்பு திருத்தங்களை கொண்டு வந்து அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு தூண்டுதலளிக்க வேண்டும் என சுவாமி கூறினார்.
2 ஆயிரத்து 87 சிறார்கள் தமது தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில்
வட மாகாணத்தில் 2 ஆயிரத்து 87 சிறார்கள் தமது தாய், தந்தை இருவரையும் இழந்த நிலையில் உள்ளனர். 10 ஆயிரத்து 404 சிறார்கள் தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் ஒருவரை இழந்த நிலையில் உள்ளனர்.
இந்தச் சிறார்களில் சிறுவர் இல்லங்களில் இருப்பவர்களை விட அதற்கு வெளியே உறவினர்களுடன் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கையே அதிகமாக உள்ளது. இவ்வாறு 10 ஆயிரத்து 878 சிறார்கள் தங்கியுள்ளனர். அரச மற்றும் தனியார் சிறுவர் இல்லங்களில் ஆயிரத்து 613 சிறார்கள் தங்கியுள்ளனர்.
வடமாகாண நன்னடத்தைச் சிறுவர் பராமரிப்புத் திணைக்களத்தில் பதியப்பட்டுள்ள எண்ணிக்கையே இவை என அதன் ஆணையாளர் ரி.விஸ்வரூபன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது:
உள்நாட்டுச் சண்டை காரணமாகவே அதிகமான சிறார்கள் தமது பெற்றோரை இழந்துள்ளனர். தவிர வறுமை விபத்து மரணங்கள், இயற்கை மரணங்களும் இதற்குக் காரணமாக உள்ளன.
இவை பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் யாழ்ப்பாணச் சிறுவர் இல்லங்களில் 127 பேரும், வவுனியா சிறுவர் இல்லங்களில் 120 பேரும், மன்னார் சிறுவர் இல்லங்களில் 99 பேரும், கிளிநொச்சி சிறுவர் இல்லங்களில் 41 பேரும், முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களில் 31 பேரும் தங்கியுள்ளனர்.
பெற்றோர் இருவரையும் இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் 413 பேரும், வவுனியாவில் 360 பேரும், முல்லைத்தீவில் 357 பேரும், கிளிநொச்சியில் 334 பேரும், மன்னாரில் 205 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையில் யாழ்ப்பாண சிறுவர் இல்லங்களில் 563 பேரும், கிளிநொச்சி சிறுவர் இல்லங்களில் 232 பேரும், வவுனியா சிறுவர் இல்லங்களில் 223 பேரும், மன்னார் சிறுவர் இல்லங்களில் 120 பேரும், முல்லைத்தீவு சிறுவர் இல்லங்களில் 57 பேரும் தங்கியுள்ளனர்.
பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையில் சிறுவர் இல்லங்களுக்கு வெளியே யாழ்ப்பாணத்தில் 439 பேரும், மன்னாரில் இரண்டாயிரத்து 387 பேரும், முல்லைத்தீவில் இரண்டாயிரத்து 61 பேரும், கிளிநொச்சியில் இரண்டாயிரத்து 61 பேரும், வவுனியாவில் 261 பேரும் உறவினர்களுடன் தங்கியுள்ளனர்.
சிறுவர் இல்லங்களுக்கு வெளியே உள்ள இந்தச் சிறார்களில் பெற்றோரில் ஒருவரை மட்டும் இழந்த நிலையிலேயே அதிக சிறுவர்கள் உள்ளனர். இவ்வாறு 9 ஆயிரத்து 209 சிறார்கள் தங்கியிருக்கின்றனர். இவ்வாறு பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் ஆணையாளர் தெரிவித்தார்
ஐக்கிய நாடுகள் அதிகாரிகள் இலங்கைக்கு திடீர் விஜயம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையைச் சேர்ந்த நான்கு அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு மர்மமான முறையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
அதிகாரிகள் திடீர் இலங்கை விஜயம் ஐக்கிய நாடுகள் பிரகடனங்களையும், இராஜதந்திர நியதிகளையும் மீறும் வகையில் அமைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த அதிகாரிகளுடன் அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகக் தெரியவருகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் முனைப்புக்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகளின் விஜயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலாப் பயணிகளைப் போன்று குறித்த அதிகாரிகள் நாட்டிற்குள் பிரவேசித்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
Inscription à :
Articles (Atom)