mercredi 21 mars 2012
இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியம்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் குழுக் கூட்டத்தின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றும் திட்டம் தொடர்பில் அமெரிக்காவுடன் தொடர்ந்தும் இலங்கை பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
சில வேளைகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படாமல் விடப்படக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது ன அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றும் யோசனையை அமெரிக்கா கைவிடக்கூடும் ன அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும், சுயாதீன காவல்துறை, நீதிமன்ற,தேர்தல் மற்றும் பொதுத்துறை ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட வேண்டும் போன்ற கடுமையான நிபந்தனைகளை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விதிக்கக் கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் சகல யோசனைத் திட்டங்களையும் இலங்கை அரசாங்கம் நிராகரித்தமையே இன்றைய சூழ்நிலைக்கான பிரதான ஏதுவெனத் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire