mercredi 14 mars 2012
இந்திய இராணுவத்தின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் அஜய்குமார் சிங், நேற்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்றுக்காலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பின் போது இருதரப்பு இராணுவ ஒத்துழைப்புகள் தொடர்பாக ஆராயப்பட்டதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்றுக்காலை சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவையும், லெப். ஜெனரல் அஜய்குமார் சிங் சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்புகளில் இந்திய இராணுவ அதிகாரிகளான பிரிகேடியர் ராகுல் பரத்வாஜ், கேணல் நடராஜன் சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அதேவேளை லெப்.ஜெனரல் அஜய் குமார் சிங் தலைமையிலான குழுவினருக்கு சிறிலங்கா இராணுவத் தலைமையகத்தில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் நடவடிக்கை குறித்து விபரித்துக் கூறப்பட்டுள்ளது.
மேலும் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும், யாழ்.படைத் தலைமையகத்துக்கும் அவர் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire