mardi 20 mars 2012
இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கக்கூடாது - இந்திய வம்சாவளி வியாபாரிகள் கோரிக்கை
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஐ.நா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், குறித்த பிரேரணைக்கு இந்திய மத்திய அரசாங்கம் ஆதரவு வழங்கக்கூடாது எனவும் வர்த்தக சங்கத்தினரால் இன்று மகஜர் ஒன்று இந்திய உயர்ஸ்தானிராலயத்தில் கையளிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு புறக்கோட்டை வர்த்தக சங்கத்தினர் இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவாகவும், இலங்கை ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதற்காகவும், அமெரிக்கப் பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலம் மற்றும் மகஜரினைக் கையளித்துள்ளனர்.
இதன் போது அமெரிக்க தூதரகத்திற்கு சென்று மகஜரைக் கையளித்த அவர்கள் பிரித்தானிய தூதரகத்திற்கும் சென்றுள்ளனர்.
இதன்போது கருத்து தெரிவித்த வியாபாரரியொருவர், இலங்கையினை சர்வதேச சக்திகள் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்கும், இலங்கையை சூறையாடுவதற்கும் முயற்சிப்பதாக குறிப்பிட்டார்.
இவ்வாறான ஒரு சூழ்ச்சியில் இருந்து இலங்கை அரசாங்கத்தை காப்பற்றவும், ஜனாதிபதியின் கைகளைப் பலப்படுத்துவதற்கும் தாம் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவித்தார்.
அத்துடன் இந்திய வம்சாவளி மக்களின் சார்பில் இந்திய அரசிடம் இந்த பிரேரணைக்கு ஆதரவளிக்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கேட்டுக்கொண்டனர்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire