dimanche 4 mars 2012
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாக மஹிந்த ராஜபக்ஸ
மட்டக்களப்பில் நடைபெறவுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாட்டின் பிரதம அதிதியாக மஹிந்த ராஜபக்ஸ கலந்து கொள்ளவுள்ளதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் (ரி.எம்.வி.பி) கட்சியின் முதலாவது தேசிய மாநாடு நடைபெறவுள்ளது.
இத்தேசிய மாநாடு கிழக்கு மாகாண முதலமைச்சர் (பிள்ளையான்) சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது. சர்வதேச ரீதியில் உள்ள தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் உறுப்பினர்கள் உட்பட கிழக்கு மாகாணத்தில் உள்ள உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire