samedi 10 mars 2012
பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாகவேகொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் என மக்கள் தெரிவித்துள்ளனர்
கொலன்னாவை நகரசபைத் தலைவரான ரவீந்திர உதயசாந்தவை வெள்ளை வானில் சென்றோர் கடத்திச் செல்ல மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்துள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். இன்றிரவு இலங்கை நேரம் பத்து மணியளவில் வெள்ளை வானில் சென்றோர் கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்ல முயற்சித்த போது நகர சபைத் தலைவரின் அதரவாளர்களுக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் வெள்ளை வானில் சென்றோர் தப்பிச் செல்ல முயற்சித்தனர். இருப்பினும் அவர்களை கொலன்னாவைச் சந்தியில் வைத்து நகர சபைத் தலைவரின் ஆதரவாளர்கள் சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
கொலன்னாவை நகர சபைத் தலைவரைக் கடத்திச் செல்வதற்காக WP CC 8649 என்ற இலக்கத்தைக் கொண்ட வெள்ளை வானில் சென்றோர் இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் என மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து இலங்கை நேரம் இரவு 11.23 மணிக்கும் வெல்லம்பிட்டிய காவல்; நிலையத்துக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது என குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பில் இருந்து தெரிவித்துள்ளார். கடத்தல் முயற்சிக்குப் பயன்படுத்தப்பட்ட வான் சேதமாக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் இணைப்பு;- இன்று கடத்த முற்பட்ட உதய சாந்தவின் சகோதரர் ஏற்கனவே கடத்தப்பட்டு காணாமல் போன நிலையில் இன்றுவரை கண்டு பிடிக்கவில்லை. இந்த நிலையில் இன்று இவரைக் கடத்த முற்பட்டவர்கள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஸவின் உத்தரவுக்கு அமைவாகவே செயற்பட்டதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
கொலன்னாவத் தொகுதியின் முன்னாள் அமைப்பாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச் சந்திரவை பதவி இறக்கம் செய்து நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவை அமைப்பாளராக மாற்றியதன் பின் ஆரம்பித்த அரசாங்க உட்;தரப்பு மோதல் பின்னர் பாரதவின் கொலையில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொலன்னாவவில் இரண்டாக பிளவுபட்டதன் பின் கொலன்னாவ நகரசபைத் தலைவர் உதயசாந்த அரசாங்கத்துடன் முரண்பட்ட நிலையிலேயே அரச புலனாய்வுப் பிரிவினர் அவரைக் கடத்திக் கொலை செய்வதற்கான முயற்சியை தொடர்வதாக தெரிகிறது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire