vendredi 2 mars 2012
இலங்கையின் இறைமையை பாதுகாக்க சீனா ஒத்துழைப்பு
இலங்கையின் சுதந்திரத்தையும், இறைமையையும், ஆட்புல ஒருமைப் பாட்டையும் பாதுகாப்பதற்கு சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி ரீதியான உதவிகள் இலங்கைக்கு வழங்கப்படும் என சீனா உறுதிமொழி வழங்கியுள்ளது.
சீனா சென்றிருக்கும் இலங்கைப் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை, பீஜிங்கில் சந்தித்த பாதுகாப்பு அமைச்சர் லியாங் குவாங்கிலி லியாங் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார் என Xinhua செய்தி சேவை தகவல் வெளி யிட்டுள்ளது. இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் நட்புறவு மேலும் தொடரும் எனத் தெரிவித்திருக்கும் அவர், இரு நாட்டு இராணுவத்தினரும் நன்மைய டையும் வகையில் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கும் தயாரெனக் கூறியுள்ளார்.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை யொன்றைக் கொண்டுவருவதற்கான பிரயத்தனங்களில் சில சர்வதேச நாடுகள் முனைப்புக்காட்டிவரும் நிலையில், இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் இறைமையைப் பாதுகாப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என சீனா அறிவித்துள்ளது.
கடந்த 55 வருடங்களாக இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகள் காணப்படும் நிலையில் இலங்கைக்குத் தொடர்ந்தும் உதவி வழங்கப்படும் என சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire