lundi 12 mars 2012
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு 17,18 மார்ச் 2012 ஆகிய திகதிகளில் மட்டக்களப்பில்
கட்சியின் தலைமையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய புதிய தலைவர் பீட பணியக மற்றும் செயற்குழு தெரிவிற்கான முக்கிய கூட்டம் 17 மார்ச் 2012 அன்று காலை 10.00 மணிக்கு மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் நடைபெற உள்ளதனால் கட்சியின் உறுப்புரிமை பெற்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்களது பங்களிப்பினை நல்குமாறு வேண்டப்படுவதுடன் 18 மார்ச் 2012 அன்று காலை 09.00 மணிக்கு மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் நடைபெற உள்ள தேசிய மாநாட்டு கொள்கைப் பிரகடன மாபெரும் பொதுக் கூட்டத்திலும் கலந்து கொள்ளுமாறு கட்சித் தொண்டர்கள் ஆதரவாளர்கள், கிழக்குப் பற்றாளர்கள், மற்றும் பொது மக்கள் ஆகியோர் தலைவர் பணியகம் மற்றும் செயற்குழு சார்பாக அழைக்கப்படுகின்றீர்கள்
ஆஷாத் மெளலானா
கொள்கை பரப்பு செயலாளர்
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்
தொலைபேசி – 0652227683
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire