jeudi 29 mars 2012
பகிஷ்கரிப்போமானால் முதலில் புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டிவரும் -
இந்தியப் பொருட்களை பகிஷ்கரிப்போமானால் முதலில் இங்குள்ள புத்தர் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டிவரும். ஏனெனில், புத்த தர்மம் எமக்கு இந்தியாவிலிருந்தே வந்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். அரசாங்கம் வெளிநாட்டுக் கொள்கையை கையாள்வதில் தோல்வி கண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஐ.நா. எமக்கெதிராக நிபுணர்குழு அமைக்காது. அமெரிக்கா ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவராது என வெளிநாட்டமைச்சர் ஜீ. எல். பீரிஸ் உறுதிமொழிகளை வழங்கினார்.
ஆனால், இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்டது. அரசாங்கத்திற்கு இராஜதந்திர ரீதியான எதிர்காலத் திட்டம் கிடையாது. இதுவே இன்றைய நிலைமைக்கு காரணமாகும். இது நாட்டுக்கு எதிரான பிரச்சினையல்ல. அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் அரசுக்கு எதிராகவே இப்பிரச்சினை எழுந்துள்ளது.
எனவே, அரசாங்கமே இதற்குத் தீர்வு காணவேண்டும். ஆனால் அரசாங்கத்திடம் இராஜதந்திரம் கிடையாது. சுதந்திரம் கிடைத்தது தொடக்கம் இந்தியாவுடன் நட்புறவை பேணி வந்துள்ளோம். அந்நாட்டின் உதவி எமக்கு அவசியம் தேவையாகும். ஆனால் இன்றைய அரசாங்கத்தால் இந்தியாவின் நட்புறவை பெற முடியவில்லை. இது எமது வெளிவிவகாரக் கொள்கையின் தோல்வியையே வெளிப்படுத்துகிறது.
இவ்வாறானதோர் தருணத்தில் அமெரிக்கா, இந்தியப் பொருட்களை பகிஷ்கரிக்குமாறும் இந்நாடுகளுக்கு எதிரான மன நிலையை மக்கள் மத்தியில் ஏற்படுத்துமாறும் சில அமைச்சர்கள் கூறுகின்றார்கள்.
இவ்வாறு நாம் இந்தியப் பொருட்களை பகிஷ்கக்கும் பட்சத்தில் முதலில் புத்தர் சிலைகளையும் அப்புறப்படுத்த வேண்டி வரும். ஏனென்றால் புத்த தர்மம் இந்தியாவிலிருந்தே எமக்கு கிடைத்தது. எனவே அரசாங்கத்தின் இருப்புக்காக மக்களை ஏமாற்றுவதற்கு இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்வது கைவிடப்பட வேண்டும். ஆட்சியதிகாரத்தை பற்றி நினைக்காது நாட்டைப் பற்றி சிந்தித்து இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க வேண்டும் என கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire