samedi 24 mars 2012
என்றாவது ஒருநாள் நாட்டைக் காப்பாற்றுவேன் என்கிறார் பொன்சேகா
குண்டர்களாலும் செயற்திறனற்றவர்களாலும் நாட்டில் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியுமா என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா கேள்வி எழுப்பியுள்ளார். மருத்துவ சிகிச்சைகளுக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு வியாழக்கிழமை அழைத்துச் செல்லப்பட்டிருந்த போதே அவர் இந்தக் கருத்தினை வெளியிட்டார்.
ஏழாயிரத்து 500 ரூபா பணத்தை கொண்டு மூன்று பேர் கொண்ட குடும்பம் ஒரு மாதம் வாழ்க்கை நடத்த முடியும் என அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் பஸ் கட்டண அதிகரிப்பினால் பிரச்சினை இல்லை என மற்றுமொரு அமைச்சர் கூறியுள்ளதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் பெண் ஒருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு பொறுப்பற்ற கருத்துக்களை வெளியிடுபவர்களாலும் குண்டர்களாலும் நாட்டை முன்னேற்ற முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
என்றாவது ஒருநாள் நாட்டைக் காப்பாற்றுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire