samedi 31 mars 2012
தமிழர்களின் நிலையை ஆய்வு செய்வதற்கென அனைத்துக் கட்சி எம்.பிக்கள் குழு அடுத்த மாதம் இலங்கை
இலங்கையில் தமிழர் நிலையைக் கண்டறிய எம்.பிக்கள் குழு ஒன்றை அனுப்பும் யோசனையை கடந்த குளிர்கால கூட்டத்தொடரின் போது பா.ஜ.க. மூத்த தலைவர் எஸ்.எஸ்.அலுவாலியா நாடாளுமன்றத்தில் முன்வைத்தார்.
இதனை ஏற்று மத்திய அரசு, கடந்த பெப்ரவரி 11ஆம் திகதி அனைத்துக்கட்சிக் குழுவை இலங்கை அனுப்புவதாக இருந்தது. 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணத்தால் ஒத்திவைக்கப்பட்டிருந்த அந்த பயணம், அடுத்த மாதம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையிலான இக்குழு அடுத்த மாதம் 16ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இலங்கையில் தமிழர் வாழும் இடங்களில் ஆய்வு செய்கிறது.
போருக்குப் பின் வடகிழக்குப் பகுதியில் தமிழர்களின் வாழ்க்கை நிலை, மறு குடியேற்றப் பணிகள் ஆகியவை குறித்து தமிழர்களிடம் எம்பிக்கள் குழு நேரில் கேட்டறியும் எனவும் இந்திய அரசின் நிதியுதவியுடன் அங்கு நடைபெறும் வீடு கட்டும் பணிகள் உள்ளிட்ட வளர்ச்சிப் பணிகளையும் எம் பிக்கள் குழு ஆய்வு செய்யவுள்ளது எனவும் கூறப்படுகிறது.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire