lundi 19 mars 2012
வடக்கு கிழக்கு இணைப்புக்கு எதிராக தீர்மானம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி
இலங்கையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி இனப் பிரச்சினைக்கு தீர்வாக ஏனைய தமிழ் கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுவரும் வடக்கு கிழக்கு மாகாணங்களின் இணைப்பை முற்றாக நிராகரிப்பதமாக அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கல்லடியில் நடைபெற்ற அக்கட்சியின் முதலாவது தேசிய மாநாட்டில் இது தொடர்பான தீர்மானமொன்று நிறைவேற்றப்டப்டுள்ளது.
வடக்கு கிழக்கு இணைப்பு என்பது கிழக்கு மக்களின் சுய விருப்பதிற்கும் அரசியல் அபிலாஷை மற்றும் இறைமைக்கும் எதிரானது என்றும் இந்த தீர்மாணத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் ஏற்கனவே பேச்சுவார்ததைகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின்படி, இப்பேச்சுவார்ததையில் தமது கட்சி உட்பட சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
அக்கோரிக்கையில் 13 வது அரசியல் யாப்பு திருத்தத்தின்படி அதிகாரப் பகிர்வு முழுமையாக வழங்கப்பட வேண்டியதன் அவசியமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் ஆட்புல ஒருமைப்பாட்டிற்கு சவால் விடுகின்ற அனைத்து விதமான முயற்சிகளையும் எதிர்ப்பதாகவும் இம்மாநாட்டில் மேலுமோர் தீர்மாணம் நிறைவேற்றப்டப்டுள்ளது.
இலங்கை ஜனாதிபதியின் சகோதரரும் மத்திய பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ இந்த மாநாட்டில் விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire