samedi 10 mars 2012
இலங்கைத் தமிழர்களுக்காக அரைமணிநேர உண்ணாவிரதம்
இலங்கையில் போரின் போது இனப்படுகொலை நடந்து கொண்டிருந்த போது அவர்களுக்காக ஏதும் செய்யாமல் அரைமணி நேரம் உண்ணாவிரதம் மட்டுமே மேற்கொண்டவர் திமுகத் தலைவர் கருணாநிதி என அன்புமணி ராமதாஸ் சாடினார்.
நாமக்கல்லில் சனிக்கிழமை அந்த கட்சியின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியது:
முல்லைப்பெரியாறு அணை உள்ளிட்ட பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமைகளை விட்டுக் கொடுத்தது திமுக, அதிமுக கட்சிகள்தான். இலங்கையில் போரின் போது சிங்கள ராணுவனத்தினர், தமிழர்களை இனப்படுப்படுகொலை செய்து கொண்டிருந்த போது, மத்திய அரசில் பங்கு வகித்தும் ஒன்றுமே செய்யாமல் அரை மணி நேரம் மட்டும் உண்ணாவிரதம் மேற்கொண்டவர் கருணாநிதி.
அவர், தற்போது இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையைக் கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும். மனித உரிமைகளை மீறும் வகையில் இலங்கை ராணுவம் செயல்பட்டுள்ளது. அதற்கு போர்க்காட்சிகளே சான்று என்று கூறுகிறார். அவர் எப்போதெல்லாம் ஆட்சியை விட்டு இறக்கப்படுகிறாரோ அப்பொதெல்லாம் அவருக்கு திராவிடம், மொழிபற்று அதிகரித்து விடுகிறது என்றார் அவர்
Inscription à :
Publier les commentaires (Atom)
Aucun commentaire:
Enregistrer un commentaire