அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் இன்று இந்தியா வருகிறார். ஆசிய கண்டத்தை சேர்ந்த மூன்று நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர் சீனா மற்றும் வங்கதேசத்தி்ல தனது பயணத்தை முடித்து விட்டு இன்று இந்தியா வருகிறார். மூன்றுநாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் அவர் நாளை மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை சந்திக்க உள்ளார்.
அவரது சந்திப்பின் போது மாநில நிதியமைச்சர் அமித்மித்ரா மற்றும் தலைமை செயலாளர் சமர் கோஷ் ஆகியோர் உடனிருப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து கிளிண்டன் தலைநகர் புதுடில்லியில் ஈரானிய வர்த்தகர்களை சந்தித்துபேச உள்ளார்.செவ்வாய்கிழமை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்., கிருஷ்ணாவை சந்தித்து பேச உள்ளார்.

Aucun commentaire:
Enregistrer un commentaire