மதுரை ஆதின மடத்தில் சனிக்கிழமை (05.05.2012) வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தின நேரத்தில், மாலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் திருவண்ணாமலைக்கு புறப்பட்டுவிட்டார். மாலையில் அங்கு நித்தியானந்தாவுக்கு நடக்கும் பட்டாபிஷேகத்தில் பங்கேற்றார்.
உதவியாளர் வைஷ்ணவியை ஆதின மடத்திலேயே தங்க வைத்த ஆதினம் அருணகிரிநாதர், பாதுகாப்புக்கு நித்தியானந்தா ஆட்களை நிறுத்திவிட்டுச் சென்றார்.
இந்த நிலையில் இன்று (06.05.2012) மாலை 5 மணி அளவில், நித்தியானந்தாவின் ஆட்கள் மற்றும் அவருடைய உதவியாளர் உள்பட சிலர் தன்னை மடத்தை விட்டு வெளியேற சொல்லி அடித்து காயப்படுத்தி, தனி அறையில் பூட்டி விட்டனர் என்று மதுரை போலீசுக்கும், ஆதின முன்னாள் உதவியாளர் ராமராஜீக்கும், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜீன் சம்பத்துக்கும் தனது செல்போன் மூலம் கதறியபடி கூறியுள்ளார் வைஷ்ணவி.
இதையடுத்து ஆதின மடத்தின் இரண்டு பக்க கதவுகளை மூடிவிட்டு போலீசார் சோதனை நடத்தினர். மடத்துக்குள் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆதின மடத்தின் 292வது ஆதினமாக அருணகிரிநாதர் இருந்தார். அவருடைய நெருக்கமான உதவியாளராக வைஷ்ணவி இருந்தார். அருணகிரிநாதர் ஆதினத்தின் தனி அறையின் சாவியை (பணம் மற்றும் தங்க நகைகள் உள்ள அறை) வைஷ்ணவியிடம் ஒப்படைத்துவிட்டு திருவண்ணாமலைக்கு சென்றார்.
இந்த நிலையில் வைஷ்ணவியிடம், நித்தியானந்தாவின் சீடர் ரிஷி மற்றும் அவரது மனைவி, நித்தியானந்தா ஆட்கள் தனி அறையின் சாவியை கேட்டுள்ளனர். இதற்கு வைஷ்ணவி மறுத்துள்ளார். இதனால் வைஷ்ணவியை அவர்கள் தாக்கியுள்ளனர். இதில் வைஷ்ணவியின் சுடிதார் கிழிந்துவிட்டது.
Aucun commentaire:
Enregistrer un commentaire