ஜப்பானின் இரு கடற்படை கப்பல்களும் பாகிஸ்தானின் ஒரு கடற்படை கப்பலும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது. இந்த கப்பல்கள் இன்று (28) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
ஜப்பானின் “ IKAZUCHI” என்ற கப்பல் 151 மீற்றர் நீலமும் 4,550 தொன் நிறை உடைய, 180 படையினரை தாங்கியதாகும். ஜப்பானின் “SAWAGIRI” என்ற மற்றைய கப்பல் 137 மீற்றர் நீலமுடையதுடன் 3,550 தொன் நிறையுடைய 190 படையினரை கொண்டதாகும்.
சீனாவில் இருந்து திரும்பும் வழியில் கொழும்பு வந்துள்ள “Azmat” என்ற பாகிஸ்தானில் கடற்படை கப்பல் 63 மீற்றர் நீலமுடையதுடன், 631 தொன் நிறை கொண்டதும், 77 படையினரை தாங்கியதுமாகும்.
இந்த இரு நாட்டு கடற்படை அதிகாரிகளுடனும் மேல் மாகாண கடற்படை தளபதி ரியர் அத்மிரால் டி.எஸ்.உடவத்த சந்திப்பு நடத்தியுள்ளார்.
ஜப்பானிய கப்பல்கள் நாளை 29ம் திகதியும் பாகிஸ்தான் கப்பல் எதிர்வரும் 31ம் திகதியும் கொழும்பு துறைமுகத்தில் இருந்து தங்களது நாடுகளை நோக்கிப் பயணிக்கவுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire