கிழக்கு மாகாணசபை முதலமைச்சர் சந்திரகாந்தன், மத்திய அரசின் துணையமைச்சர் ஹிஸ்புல்லா மற்றும் சில கிழக்கு மாகாண தலைவர்களும் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடந்துள்ளது
கிழக்கு மாகாண சபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டின் நடுப்பகுதியில் தான் முடிவடைகின்ற நிலையில், அப்போதே தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்று முன்னதாக கிழக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது தேர்தல் நடத்தப்பட வேண்டிய தேவைக்காக அந்த தீர்மானத்தை மீண்டும் மாற்றியமைக்கும் அதிகார பலம் தம்மிடம் இருப்பதாகவும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் அடுத்த முதலைமைச்சராக வர வேண்டியவர் தமிழ் சமூகத்தை சேர்ந்தவரா அல்லது முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவரா என்பதை அவர்கள் பெறும் வாக்குபலம் தான் தீர்மானிக்கும் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire