mardi 29 mai 2012

மக்கள் ஆர்ப்பாட்டம் ..... அரசிகள் வாதிகள் ஆர்ப்பாட்டம்.தமிழ் கைதிகள் விடுதலை கோரி கொழும்பில்

சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றி நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் எனக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் ஜேவிபியினர் மேகொண்ட கிளர்ச்சியையடுத்து, கைது செய்யப்பட்டு பொது மன்னிப்பின் மூலம் சிங்கள அரசியல் கைதிகள் விடுதலை செய்தது போல இவர்களும் விடுதலைச் செய்யப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது.
தமிழ் சிங்கள் அரசியல் கட்சிகளும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், நவசமசமாஜ கட்சியின் தலைவர் கருணாரட்ன விக்கிரமபாகு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சி;வாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், ஐக்கிய சோஷலிசக் கட்சியின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பல அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இங்கு உரையாற்றிய பலரும் அரசியல் கைதிகளாக இருந்த சிங்கள இளைஞர்கள், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா ஆகியோரைப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்துள்ள அரசு தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாத்திரம் பொது மன்னிப்பு வழங்குவதற்கு முன்வராமலிருப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பினார்கள்."http://www.youtube.com/embed/LrFj1S-1pFI"
தெரிந்த சிறைச்சாலைகளிலும், தகவல் எதுவும் தெரியாத வகையில் இரகசிய தடுப்பு முகாம்களிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளாகிய தமிழ் இளைஞர்களைப் பயங்கரவாதிகள் என குறிப்பிடாமல் அவர்களைத் தமிழ் அரசியல் கைதிகளாகவே குறிப்பிட வேண்டும் என்றும் அவ்வாறே அவர்களை நடத்த வேண்டும் என்றும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire