dimanche 20 mai 2012

குடும்பிமலைப் பிரதேசத்திற்கு கிழக்கு முதல்வர் விஜயம்

கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசி தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் இன்று குடும்பிமலைப் பிரதேசத்திற்கு சென்று அங்குள்ள ஆலயத்தில் பூஜை வழிபாட்டிலும் ஈடுபட்டார். கிழக்கிலங்கையிலே மிகவும் புராதனமானதும் வரலாற்றுச் சிறப்பு வாய்ததுமான குடும்பிலை ஆலயத்திற்கு முதல்வர் சந்திரகாந்தன் நேரில் சென்று ஆலயத்தின் நிருவாகசபை உறுப்பினர்களோடு கலந்துரையாடி எதிர் காலத்தில் ஆலயத்தின் அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வதாவும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு அங்குள்ள மக்களின் தேவைகள் மற்றும் அபிவிருத்தி விடயங்கள், தொழில் முயற்சிகள் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடினார். பின்னர் இங்குள்ள நன்னீர் மீன்பிடியாளர்களுக்கு மீன்பிடிப்பதற்கான தோணிகள் மற்றும் வலைகள் என்பவற்றையும் இந்த விஜயத்தின் போது இன்று வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் குடும்பி மலைப் பிரதேசத்தின் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் ஆலய நிருவாக சபை உறுப்பினர்கள், விவசாய அமபை;புக்களின் பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டார்கள்.

Aucun commentaire:

Enregistrer un commentaire