வவுனியா புனர்வாழ்வு முகாம்களில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளின் சுற்றுலாப் பயணம் இன்று முடிவடைகிறது.
புனர்வாழ்வு பெற்ற ஒருதொகுதி முன்னாள் போராளிகள் கடந்த 11ஆம் திகதி தெற்கிற்காக சுற்றுலாப் பயணத்தை ஆரம்பித்திருந்தனர்.
இவர்கள் கொழும்பில் பல இடங்களை சுற்றிப் பார்த்ததோடு நேற்றைய தினம் காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய இடங்களிற்கும் பயணம் செய்தனர்.
இவர்கள் தமது சுற்றுலாப் பயணத்தை முடித்துக் கொண்டு இன்றைய தினம் மீண்டும் தத்தமது முகாம்களிற்கு திரும்புகின்றனர்.
ஒரு வருட கால புனர்வாழ்விற்குப் பின்னர் இவர்களை சமூகத்துடன் இணைக்கும் செயற்பாட்டினை சிறைச்சாளைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire