மத்திய வெளியுறவு துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை அமெரிக்க வெளியுறவு துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் இன்று காலை சந்தித்து பேசினார். இது, வாஷிங்டனில் ஜூன் 13ம் தேதி நடைபெற போகும் இந்தியா அமெரிக்கா இடையிலான பேச்சுவார்த்தைக்கு முன்னோட்டமாக அமைந்தது.
ஈரான் எண்ணெய் இறக்குமதியை நிறுத்துவது, அணு ஆயுத ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடுவது, இந்தியாவின் அணு சக்தி கொள்கை மற்றும் பல்வேறு விஷயங்களில் அமெரிக்காவின் தரப்பை வலியுறுத்துவதாக இந்த பேச்சுவார்த்தை அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஈரான் மற்றும் மியான்மர் நாட்டின் நிலைமை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Aucun commentaire:
Enregistrer un commentaire