ஒடிசாவில் மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட போலீஸ் அதிகாரி கிருபா ராம் மஜ்ஹி இன்று சுட்டுக் கொல்லப்பட்டார். அவரது உடல் நுவாபடாவில் போலீசாரால் கைப்பற்றப்பட்டது.
மார்க்கெட்டுக்கு சென்ற உதவி சப் இன்ஸ்பெக்டரை 10 பேர் கொண்ட மாவோயிஸ்டு குழு ஒன்று கடத்திச் சென்றது. அவரடுன் சென்ற கான்ஸ்டபிளை மட்டும் அவர்கள் விட்டுவிட்டனர்.
ஒடிசாவில் கடந்த 2 மாதங்களில் இதுபோன்ற கடத்தல் சம்பவம் நடப்பது இது 3வது முறையாகும். முன்னதாக பிஜு ஜனதாதள எம்எல்ஏ ஒருவரை கடத்திச் சென்ற மாவோயிஸ்டுகள் ஒருமாதத்துக்குப் பின்னர் ஏப்ரல் 26 ம் தேதி அவரை விடுதலை செய்தனர்.
அதற்கு முன்னதாக இத்தாலி சுற்றுலாப் பயணி ஒருவரை கடத்திச் சென்று 29 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்தனர்.
ஆனால் தற்போது கடத்திச் சென்ற போலீஸ் அதிகாரியை மட்டும் உடனடியாக சுட்டுக் கொன்றுவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aucun commentaire:
Enregistrer un commentaire