
இதையடுத்து, கடந்த 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமரச மனுவை ஏற்றுக்கொண்டு, வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரி துணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்த விவரம்: அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் கடந்த 1993-1994-ஆம் ஆண்டுக்குரிய வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
இதேபோல், இருவரும் பங்குதாரர்களாக இருந்த சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம், கடந்த 1991-1992, 1992-1993 ஆகிய நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யவில்லை என்றும் புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக, முதல்வர் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் மீதும், சசி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் மீதும் வருமான வரித் துறை 1996, 1997-ஆம் ஆண்டுகளில் வழக்குத் தொடர்ந்தது.

அந்த மனுவை வருமான வரித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வந்தனர். பின்னர், அந்த மனுவை ஏற்றுக்கொண்டு வரி செலுத்தாத காலத்துக்கு அபராதத் தொகை செலுத்துமாறு வருமான வரித் துறை உத்தரவிட்டது. மேலும், சமரச மனுவை ஏற்றுக்கொண்டது குறித்து எழும்பூர் நீதிமன்றத்தில் வருமான வரித் துறை சார்பாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 18 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது....18 வருட வழக்கு பாமரரை பாப்பனம் பழிவாங்கிவிட்டது
Aucun commentaire:
Enregistrer un commentaire