dimanche 9 novembre 2014

வெற்றிகரமாக பரிசோதனை அணு ஆயுதங்களை எடுத்துச் செல்லக் கூடிய அக்னி 2- ஏவுகணை

பாலசோர்: எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்ட அக்னி -2 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக இன்று சோதித்தது.ஒரிசா மாநிலம் பாலசோர் கடற்கரையில் இருந்து நடத்தப்பட்ட இந்த சோதனை உலக அளவில் இந்தியாவுக்கு கூடுதல் மதிப்பை உயர்த்தும் என்றால் மிகையாக இருக்க முடியாது. தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் இந்த ஏவுகணையை ரயிலில் இருந்தும் சாலைபோக்குவரத்து வாகனங்களில் இருந்தும் ஏவிட முடியும் தகுதி கொண்டது.

ஏனெனில் கடந்த மார்ச் மாம் விண்ணில் ஏவப்பட்ட அக்னி -1 ஏவுகணை 700 கி.மீட்டர் தூரம் சென்று தாக்கும் வல்லமை கொண்டது. தற்போது இது ( அக்னி -2 ) செல்லும் தூரம் இரண்டரை மடங்கு அதிகரித்திருக்கிறது. கடந்த 2009 ம் ஆண்டில் கடலில் உள்ள எதிரிகளின் இலக்கை கப்பலில் இருந்து தாக்கும் வல்லமை கொண்ட பிரிதிவி- 2 சிறியரக ஏவுகணை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இதனையடுத்து இன்று மேலும் ஒரு சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டிருக்கிறது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த அக்னி- 2 ஏவுகணை அணுகுண்டை சுமந்து சென்று சுமார் 2 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் வல்லமை கொண்டது. 17 டன் கொண்ட இந்த ஏவுகணை ஆயிரம் டன் எடையை சுமக்கும் வல்லமை கொண்டது. நமது இந்திய ராணுவ தொழில்படையினர் இந்த தயாரிப்பில் முழுக்கவனம் செலுத்தினர்.

காரியத்தை கச்சிதமாக முடிக்கும் : சொன்னதை செய்யும் கிளிப்புள்ள போல இந்த இடத்தை அழித்து விட்டு வா என்று அதற்கு கட்டளையிட்டால் காரியத்தை கச்சிதமாக முடித்து விடும். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடத்தப்பட்ட இந்த சோதனை தோல்வியில் முடிந்தது. இந்த முறை இன்று ( 17 ம் தேதி ) வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது. பதிலுக்கு ஒரு ஏவுகணையை . பாகிஸ்தான் இப்போதே வண்ணம் பூச துவங்கியிருக்கும் என்பது சம்பிரதாயம்.

Aucun commentaire:

Enregistrer un commentaire