ஆயுததாரிகள் சாலை ஓரமாகப் பேருந்தை நிறுத்தி, இஸ்லாமியர் அல்லாதவர் என தங்கள் நினைத்தவர்களை பிரித்து சுட்டுக்கொன்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கென்யத் தலைநகர் நைரோபியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த அந்தப் பேருந்து, சோமாலிய எல்லைக்கு அருகில் உள்ள மந்தேரா கவுன்டிக்கு அருகில் நிறுத்தப்பட்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சோமாலியாவிலிருந்து இயங்கிவரும் அல் - ஷபாப் இயக்கம் 2011 ஆம் ஆண்டிலிருந்து கென்யாவில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் போரிடுவதற்காக 2011 ஆம் ஆண்டில் கென்யா தனது படைகளை சோமாலியாவுக்கு அனுப்பியது.
இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களில் வடகிழக்கில் இருக்கும் மந்தேரா பகுதிதான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த்த் தாக்குதல் சனிக்கிழமை அதிகாலையில் நடைபெற்றது. கூடுதலாகப் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரியும் கென்ய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லையென உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்ததாக கென்ய ஊடகங்கள் கூறியுள்ளன.
பேருந்திலிருந்து இறக்கப்பட்ட பயணிகள் குரானிலிருந்து சில வாசகங்களை படிக்கச் சொல்லி கேட்கப்பட்டதாகவும், அவ்வாறு படிக்க இயலாதவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டதாகவும் ஒரு அதிகாரி தெரிவித்ததாக கென்யாவின் டெய்லி நேஷன் செய்தித்தாள் கூறியுள்ளது.
Aucun commentaire:
Enregistrer un commentaire