dimanche 9 novembre 2014

சிங்கள பத்திரிகை நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது

news
பாப்பரசர் வருகையால் ஜனாதிபதி தேர்தல் பிறப்போடப்படலாம் என கட்டுரை எழுதிய ´எத்த´ (உண்மை) பத்திரிகை நிறுவனம் இழுத்து மூடப்பட்டுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் கலை பீட பீடாதிபதி வைத்திய கலாநிதி மைக்கல் பெர்னாண்டோ ஆசிரியராக கடமையாற்றும் இப் பத்திரிகையின் பிரதிகள் நேற்று அதிகாலை விநியோகம் செய்யத் தடை விதிக்கப்பட்டதோடு பத்திரிகை நிறுவனமும் இழுத்து மூடப்பட்டுள்ளது.

இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உயர் பீடத்தின் அழுத்தம் காரணமாகவே இவ்வாறு நிறுவனம் மூடப்பட்டதாக பத்திரிகையின் ஆசிரியரான  மைக்கல் பெர்னாண்டோ இத்தகவலை தனது முகப்புத்தகப் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் லங்கா சமசமாஜ கட்சி எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் கடுமையான விமர்சனப் பாங்கான கருத்துக்கள் உள்ளடங்கிய செய்திகள் பத்திரிகையில் காணப்பட்டதாகவும் ´பாப்பரசர் விஜயத்தால் ஜனாதிபதித் தேர்தல் மார்ச் மாத்திற்கு பிற்போடப்படுகிறது´ என்ற தலைப்பில் கட்டுரை அச்சிடப்பட்டுள்ளதனாலும் கம்யூனிஸ்ட் கட்சி உயர்பீடம் பத்திரிகையை இழுத்து மூட முடிவு செய்ததாக அதன் ஊடகவியலாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எனினும் பத்திரிகை தடை செய்யப்பட்டமை கட்சியின் அரசியல் குழு அல்லது மத்திய செயற்குழுவின் தீர்மானம் இல்லை என்றும் தலைமையின் தனிப்பட்ட தீர்மானம் என்றும் அந்த ஊடகவியலாளர் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire