ரயில் விபத்துக்காளால் நாளொன்றுக்கு 60 பேர் சாவதாக இந்த புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இதில் மிகக் குறைந்த மரணங்களே, நேரடி ரயில் விபத்துக்கள் மூலமாக ஏற்படுகின்றன. பெரும்பாலான மரணங்கள் ரயில் பாதைகளை கடப்போர் ரயிலில் அடிபடுவதால் ஏற்படுகிறது.
மும்பையில், புறநகர் போக்குவரத்து ரயில் தண்டவாளங்களில் அடிபட்டு ஆண்டுதோரும் 6 ஆயிரம் பேர் சாகின்றனர். புறநகர் ரயில்களை பயன்படுத்துவோர், நடை மேம்பாலங்களை பயன்படுத்துவதுமாறு அறிவுறுத்தப்பட்டும் ஏராளமானோர் ரயில் தண்டவாளத்தை கடப்பதால் பல மரணங்கள் நிகழ்வதாக அதிகாரிகள் சுட்டிக் காட்டுகின்றனர்.
நெரிசலான ரயில்களில் இருந்து கீழே விழுவதால் ஆண்டுக்கு ஆயிரம்பேர்
வரை உயிரிழப்பதாக சில ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ரயில் பாதுகாப்புக் குழு தனது அறிக்கையில் கூறியிருந்தது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் பலர் ஒடும் ரயில் முன் பாய்கின்றனர்.
ஆட்களால் இயக்கப்படாத ரயில் கடவைகளின் எண்ணிக்கை 11,563 இருக்கிறது. இந்தப் பகுதிகளில் வேகமாக சாலையில் வரும் வாகனங்கள் ரயிலில் மோதுவதாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்க ரயில்வே கடவைகள் உள்ள பகுதிகளில் மேம்பாலம் அமைக்கும் பணிகளும், சுரங்கப் பாதைகள் அமைக்கும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது.
ரயில் பாதுகாப்பை மேற்கொள்ள கடந்த சில ஆண்டுகளாக கவனம் செலுத்தப்பட்டும், மரணங்களின் எண்ணிக்கை அதிகமாவது தொடர்கிறது. 2011 ஆம் ஆண்டு ரயில்கள் சம்மந்தப்பட்ட விபத்தில் 14,973 பேர் இறந்தனர். இந்த எண்ணிக்கை இல் 16.336 ஆக உயர்ந்தது 2012. கடந்த ஆண்டு இது 19.997 ஆக இருந்தது.
உலகிலேயே சாலை மரணங்களில் அதிகம் பேர் இறக்கும் நாடாகவும் இந்தியா இருக்கிறது.

Aucun commentaire:
Enregistrer un commentaire