உலக வர்த்தக அமைப்பின் தாராள வணிக ஒப்பந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலையை விட்டுத் தராமல் அமெரிக்காவுடன் தீர்வு ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். உலக வர்த்தக அமைப்பின் சார்பில் நாடுகளிடையே தாராள வணிக ஒப்பந்தம் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன் விதிமுறைகளில், மொத்த தானியக் கொள்முதலில் 10 சதவிகிதத்துக்கு மேல் எந்த நாடும் இருப்பு வைக்க தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இதை ஏற்றால் ஏழைகளுக்கு உணவுப் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் குறைந்த விலையில் தானியங்களை வழங்குவது பாதிக்கப்படும் என்பதால் இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒப்பந்தம் நிறைவேறாமல் இருப்பதற்கு இந்தியாவை குறைகூறிய அமெரிக்காவுடன் மத்திய அரசு தரப்பில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்தது. அதில் இந்தியாவின் நிலையை அமெரிக்கா ஏற்றுள்ளதாக இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து டிசம்பர் மாத வாக்கில் கூடவுள்ள உலக பொருளாதார அமைப்பின் பொதுக்குழு கூட்டத்தில் இதுதொடர்பான முடிவு எடுக்கப்பட உள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தீர்மானத்தின் மீது இந்தியாவை அமெரிக்கா ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire