மார்க்சிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி| கோப்புப் படம்.
தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார்.
திருப்பூர் மாவட்டம், உடு மலைப்பேட்டை, அடுத்துள்ள ஜல்லிபட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய மாநாடு திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் நடைபெற்றது. அதில் கலந்து கொள்வதற் காக வந்த உ.வாசுகி செய்தி யாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான உரிமைகளைக்கூடப் போராட்டம் மூலமாகத்தான் பெற வேண்டி யுள்ளது. அதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து விழிப் புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
நாடு முழுவதும் பெரும்பாலான குடும்பங்களில் பெண்களின் நிலை மிக மோசமாக உள்ளது. பெண்களின் பங்கேற்பு இல்லாத போராட்டங்கள் முழுமை அடை யாது. 1960-களில் மாநில மக்களின் உரிமைகளை திமுக முன் வைத்த போது அதை இடதுசாரிகள் ஆதரித்து, அவர்களுடன் இணைந்து போராட்டம் நடத்தின. காலப்போக்கில் திராவிடக் கட்சி களின் வீரியம் குறைந்துள்ளது.
1990-களுக்குப் பிறகு நவீன தாராளமயமாக்கலால் மாநிலத்தில் உள்ள முதலாளிகளுக்கு, மத்திய ஆட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு அமைந்தது. அதனால் திராவிட இயக்கங்கள் தங்களது அடிப்படை கோட்பாடுகளை கைவிட்டுள்ளன. மாநில அரசுகளின் உரிமைகளை மீட்டெடுப்பதில் திராவிட கட்சி களின் செயல்பாடுகள் பலவீனப் பட்டு, தற்போது எதிர்மறையாக செயல்படத் தொடங்கியுள்ளன. பூதாகரமான விளம்பரங்கள், தனி நபரை துதிபாடுவது போன்றவை அதிகரித்துள்ளன.
தமிழர் பிரச்சினை என்றால் அது இலங்கைத் தமிழர் பிரச்சினை யாக மட்டும்தான் பார்க்கப்படு கிறது. இலங்கைத் தமிழர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத் தில்லை. ஆனால், தமிழகத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை வைத்தே அரசியல் பேசும் சூழல் நிலவுகிறது. இதை மார்க்சிஸ்ட் களால் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை.தாராளமயமாக்கல் மூலம் வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி தான் உள்ளது. படிப்புக்கேற்ற வேலைவாய்ப்புகள் சுருங்கிக் கொண்டே வருகின்றன. அதனால் இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
சமீப காலமாக பெண்கள் மீதான வன்முறை அதிகரித்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்கள் தமிழகத் திலும் நடைபெறுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் இல்லையா?, அவர்களுக்காகப் போராட தமிழ் தேசிய அமைப் புக்கள் ஏன் முன் வருவதில்லை?.
இந்தியாவில் சில கார்ப்பரேட் ஊடகங்கள் இடது சாரிகள் மீது அவதூறு செய்திகளைப் பரப்பி வருகின்றன. பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத்துக்கும், சீத்தாராம்யெச்சூரிக்கும் இடையே பிரச்சினை உள்ளதாக தவறான செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
கம்யூனிஸத்தை விட்டு சமூக ஜனநாயகக் கட்சியாக மாறவேண்டும் என இடதுசாரிகள் மீது அத்தகைய ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இதன் மூலம் ஊழல், சுரண்டலுக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் எதுவும் உருவாகக் கூடாது என அவை விரும்புகின்றன என்றார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire