ஹிசார் நவ.23_ அரியானாவில் கொலை வழக்கில் கைது செய்யப் பட்டுள்ள சாமியார் ராம்பாலின் ஆசிரமத்தில், ஆயுதக் குவியல்கள், குளுகுளு அறைகள், மசாஜ் படுக்கைகள், நீச்சல் குளம், குண்டு துளைக்காத பூஜை அறை நகைப் பெட்டகங்கள் காவல்துறையினரின் சோத னையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் ஆசி ரம குளியல் அறையில் பெண் ஒருவர் மயக்க நிலை யில் மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 2006இ-ல் நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக 43 முறை நீதிமன்றம் நோட் டீஸ் அனுப்பியும் ஆஜரா காமல் 3 முறை பிடிவா ரன்ட் பிறப்பிக்கப்பட்ட பிறகும் முரண்டுபிடித்த அரியானா மாநில சாமி யார் ராம்பாலை அந்த மாநில காவலர் கடந்த புதன்கிழமை கைது செய் தனர். அப்போது காவல ருக்கும் சாமியாரின் ஆதர வாளர்களுக்கும் இடையே நடைபெற்ற போரில் 6 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவரது ஆசிரமத்தில் காவலர் சோதனை நடத்தியபோது அதிர வைக்கும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டம் தானா கிராமத்தில் 1951 செப்டம்பர் 8-ஆம் தேதி நடுத்தர வர்க்க குடும்பத் தில் ராம்பால் பிறந்தார். டிப்ளமோ இன்ஜினீயரிங் படித்த அவர் அந்த மாநில அரசின் நீர்ப்பாசனத் துறையில் சிறிதுகாலம் பணியாற்றினார்.
தீவிர அனுமார் பக்த ரான அவர் அரசுப் பணி யில் இருந்து நீக்கப்பட் டார். பின்னர் ஆன்மிகப் பாதைக்கு திரும்பினார். 1999இ-ல் சட்லக்கில் தனது முதல் ஆசிரமத்தை தொடங்கினார். பின்னர் ரோட்டக், பர்வாலா பகுதி களிலும் ஆசிரமங்களை அமைத்தார். இதில் சட்லக் ஆசிரமம், சண்டிகர்-ஹிசார் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் 12 ஏக்கர் பரப் பளவில் 5 மாடிகளுடன் அரண்மனை போன்று கட்டப்பட்டுள்ளது.
மசாஜ் படுக்கைகள் -நீச்சல் குளம்
ஆசிரம வளாகம் முழு வதும் கிரானைட் கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. இங்கு சாமியார் ராம்பா லுக்காக பல்வேறு தனி அறைகள் உள்ளன. அவற் றில் குளிர்சாதன வசதி, மசாஜ் படுக்கைகள், பிரம் மாண்ட டி.வி. திரைகள் பொருத்தப்பட்டுள்ளன. ஆசிரமத்துக்குள் நவீன கருவிகளுடன் கூடிய உடற்பயிற்சிக் கூடம், 25 மீட்டர் நீளம் கொண்ட நீச்சல் குளம், 24 குளிர் சாதன அறைகள் அமைக் கப்பட்டுள்ளன.
ஆசிரமத்தில் 50,000 பேர் வரை தங்கும் வசதி உள்ளது. ஒரு லட்சம் பேருக்கு சமைக்கக்கூடிய வகையில் மிகப் பெரிய சமையல் அறை உள்ளது. இங்கு ஒரு மாதத்துக்கு தேவையான சமையல் பொருள்கள் இருப்பு வைக் கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 10 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் உணவுக் கூடம் உள்ளது.
ஆசிரமத்துக்கு வரும் பக்தர்கள் தங்களின் செல் போன்களை சார்ஜ் செய்து கொள்ள தனியாக இடங் கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ராம்பாலுக்காக பிரத் யேகமாக பூஜை அறை உள்ளது. இங்கு பெண் பக்தர்களுக்காக தனி வரி சைகள் ஒதுக்கப்பட் டுள்ளன. இந்த பூஜை அறை அருகே நகைப் பெட்டகங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆசிரம வளாகத்தில் பிரம்மாண்ட மைதானம் உள்ளது. இங்குள்ள உயரமான மேடையில் குண்டு துளைக்காத கூண்டில் இருந்து ராம்பால் சொற் பொழிவாற்றுவார். அவரது உரையைக் கேட்க வசதியாக ஆங்காங்கே பிரம்மாண்ட திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.
வெளியில் செல்வதற் காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் கார்களை ராம்பால் பயன்படுத்தியுள் ளார். அவரின் பாதுகாப் புக்காக 400 பேர் கொண்ட சிறப்பு கமாண்டோ படை இருந்துள்ளது. ஆசிரமம் முழுவதும் சிசிடிவி கேம ராக்கள் பொருத்தப்பட் டுள்ளன.
வெளி நபர்கள் ஆசிரமத்துக்குள் நுழைய முடியாத வகையில் 20 அடி உயரத்துக்கு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. அதில் ஆங்காங்கே கண் காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆசிரம வாயிலில் 4 மெட்டல் டிடெக்டர் கதவுகள் உள்ளன. அதன் வழியாகவே பக்தர்கள் உள்ளே நுழைய அனு மதிக்கப்பட்டனர்.
ரகசிய அறைகள் - ஆயுத குவியல்கள்
ஆசிரமத்தின் இரண்டு ரகசிய அறைகளில் ஏராள மான துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், கையெறி குண்டுகள், ஆசிட் குப்பிகள் என சிறிய அளவிலான போரை நடத்துவதற்கு தேவையான ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.
ஹெல்மெட், கைத் தடிகள், கருப்பு நிற சீரு டைகள் அலமாரிகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்குள்ள 2 டேங்க் குகளில் 800 லிட்டர் டீசல் நிரப்பி வைக்கப்பட்டிருந் தது. துப்பாக்கிகள் அனைத் திலும் தோட்டாக்கள் நிரப்பப்பட்டு தயார் நிலை யில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு சாமியாரின் கமாண்டோ படை வீரர்கள் தங்குவதற்காக தனி அறைகளும் உள்ளன.
சிறிய ராணுவத்துக்கு தேவையான வகையில் ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டிருப்பது பேரதிர்ச்சி அளிப்பதாக அரியானா காவல்துறை யினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் மேலும் கூறியபோது, சாமியாரை கைது செய்யவிடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 865 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர், அவர்களிடம் ரகசிய ஆயுதக் கிடங்கு குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம், இதன் மூலம் மேலும் பல்வேறு தகவல்கள் வெளிவரும் என்று தெரிவித்தனர். தற்பேது சட்லக் ஆசிரமம் பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.
கர்ப்ப சோதனை கருவிகள்
சாமியார் ராம்பாலின் ஆசிரமத்துக்கு பெண் பக்தர்கள் ஏராளமாக வந்துள்ளனர். இந்நிலை யில் ஆசிரமத்தில் நடத் தப்பட்ட சோதனையில் கர்ப்ப சோதனை கருவிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரமத்தில் வெளிப் புறமாக பூட்டப் பட்ட குளியல் அறையில் பெண் ஒருவர் மயக்க நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர் மத்தியப் பிரதேசம் அசோக் நகரைச் சேர்ந்த பிஜிலேஜ் என தெரியவந்துள்ளது.
பாலில் குளித்து பாயாசம் தந்த சாமியார்
பாலில் குளித்து பாயாசம் தந்த சாமியார்
அரியானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, தற்போது, 'கம்பி எண்ணி' வரும் சாமியார் ராம்பாலுக்கு, அவரின் ஆசிரமத்தில் பால் குளியல் நடந்ததாகவும், அந்த பாலில் பக்தர்களுக்கு பாயாசம் தயாரித்து வழங் கியதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஆசிரமத்தில் தங்கியிருந்த மனோஜ் என்பவர் கூறியதாவது: சாமியார் ராம்பாலுக்கு, ஆசிரமத்தில் ஒவ்வொரு நாளும், பக்தர்கள் சார்பில் பால் குளியல் நடத்தப்படும். குடம் குடமாக அவர் மீது பால் ஊற்றப்படும்.
பின், அந்த பால் முழுவதையும், பாத்திரத்தில் பிடித்து, பால் பாயாசம் தயாரிக்கப்படும். இந்த பால் பாயாசம், ஆசிரமத்துக்கு வரும் பக்தர் களுக்கு, பிரசாதமாக தரப்படும். சாமியாரின் அருள் வாக்கு வேண்டி வரும் பக்தர்கள், இந்த பிரசாத பாயா சத்தை பய பக்தியுடன் வாங்கிச் செல்வர். இவ்வாறு, அவர் கூறினார்.
Aucun commentaire:
Enregistrer un commentaire