
.திமுகவில் முக்கிய பேச்சாளராக விளங்கிய நடிகை குஷ்பு கடந்த ஜூன் மாதம் அக்கட்சியிலிருந்து விலகினார். திமுகவின் அடுத்த தலைவர் யார்? என்பது பற்றிய சர்ச்சையான கருத்தை அவர் வெளியிட்டதால் ஏற்பட்ட எதிர்ப்பை அடுத்து திமுகவில் இருந்து விலகினார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவர் பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளிவந்தன. இதனை மறுத்த குஷ்பு பாஜகவில் நான் இணைவதாக சொல்லப்படுவதில் எந்த அடிப்படை உண்மையும் இல்லை என்று ட்விட்டரில நேற்று தெரிவித்திருந்தார்.அவர் இன்று மாலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து பேசி தன்னை காங்கிரஸில் இணைத்துக்கொண்டார்.அதன்பின் டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, காங்கிரஸ் இணைவதாக முறைப்படி அறிவித்தார். மேலும் காங்கிரஸில் இணைந்தது மன நிறைவாக உள்ளது என்று கூறினார். அவர் திமுகவை விட்டு வெளியேறியதற்குக் காரணம் கேட்டபோது அதற்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார்.மேலும் கடந்த சில காலமாகவே திமுகவில் இருந்து வெளியேற வேண்டும் என்று எண்ணியதாகவும் அதற்கு முன்பு நடந்த சம்பவங்களே காரணம் என்பதை மறைமுகமாகக் கூறியதுடன் அதுபற்றி பேச முடியாது என்றும் தெரிவித்தார்.இன்று காலை டிவிட்டரில் அவர் வெளியிட்ட செய்தியில், ஒரு முடிவு, உங்கள் வாழ்க்கையையே மாற்றிவிடக் கூடும். எனவே கவனமாக இருங்கள். உங்களுக்குச் சரியென்று தோன்றினால், அதில் இறங்கிவிடுங்கள். அதன் பிறகு திரும்பியே பார்க்காதீர்கள். ஒவ்வொருவரின் பார்வையும் மாறுபடும். எல்லாவற்றின் மீதும் ஒரு கண் வையுங்கள், காலை வணக்கம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Aucun commentaire:
Enregistrer un commentaire