lundi 24 novembre 2014

ஆசியாவில் அதிக அணு ஆயுத திட்டத்தில் பாகிஸ்தான்

ஆசியாவில் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது என்று அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.
 
உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020 ஆம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.
 
உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது என்று கூறியுள்ளது.
 
இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும் சீனா கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட 250 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போர் காலத்தில், ஜப்பான் நாட்டின் மீது அணு குண்டை வீசி பல ஆயிரக்கணக்கான மக்களை கொன்று குவித்த அமெரிக்கா இந்தத் தகவலைக் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire