மேற்கு ஆபிரிக்காவில் பலநூற்றுக்கணக்கானோரை காவு கொண்ட
எபோலா இன்னும் கட்டுக்குள் கொண்டு வரப்படவில்லை.வறுமை ,அறியாமை மற்றும் பின்தங்கல்கள் ஆயுதமேந்திய குழுக்களின் மோதல்கள் சபிக்கப்பட்ட மக்களாக வாழும் மேற்கு ஆபிரிக்க மக்களின்; கூட்டம் கூட்டமான மரணத்தை விளைவித்து வரும் எபோலோவைக் கட்டுப்படுத்த ஐக்கிய அமெரிக்காவுடன் இணைந்து செயற்பட தயாராயிருப்பதாக கியூபாவின் தலைவர் பிடல் கஸ்ட்ரோ அண்மையில் தெரிவித்திருந்தார்.நாம் எபோலாவைத் தோற்கடித்து மேற்கு ஆபிரிக்க மக்களை சாவின் விழிம்பிலிருந்து மீட்க வேண்டும் என்கிறார்.புரட்சியாளர்கள் மனித குலத்தின் மீதான பேரன்பினால் வழி நடத்தப்படுபவர்கள”; என்பார் சேகுவேரா.ஐ.நாவின் உலகளாவிய கோரிக்கைக்கிணங்க பெருந்தொகையான வைத்தியர்கள் தாதியரை உடனடியாகவே மேற்கு ஆபிரிக்க நாடுகளான லைபீரியா ,சிராலியோன் ,கினியா போன்ற நாடுகளுக்கு அனுப்பிவைத்த நாடு கியூபா.கியூபா இன்றளவில் சர்வதேச சகோதரத்துவத்தை ,மாக்சிய அறவிழுமியங்களைப் பேணும் நாடு.காஸ்ட்ரோ எமக்கெல்லாம் பெருமித உணர்வை ஏற்படுத்துகிறார்.சில வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவை “கத்தரினா” புயல் தாக்கிய போது உதவிக்கரத்தை நீட்டியவர்.ந்த உதவியை அமெரிக்கா நிராகரித்தது.சதாம் ஹசேனை பதவியில் இருந்து இறக்கி சுன்னா ,சியா முஸ்லிம் மதப்பிரிவுகளின் முரண்பாட்டைக் கையாண்ட அமெரிக்க ராஜதந்திரத்தின் பிரசவமே இஸ்லாமிய அரசு.-ஐ.எஸ்இன்று ஈராக்கிலும் ,சிரியாவிலும் இது விஸ்வரூபம் எடுத்துள்ளது.கட்டாரிலும் சவுதியிலும் இந்த இஸ்லாமிய அரசு என்ற வன்முறை டைனோசோரின் டி. என். ஏக்கள் உருவாக்கப்பட்டபோது அமெரிக்காவிற்கு இது தெரியாதென்று எடுத்துக் கொள்ள முடியாது.இன்று இது ஐரோப்பிய- அமெரிக்க இளைஞர்கள்; சிலரையும் தொற்றிக் கொண்டது, எபோலா போல.கல்வி சுகாதாரசேவை கட்டணங்களின் உயர்வு, தொழில் இல்லாத அபரிமிதமான இளைஞர் பட்டாளம் உருவாக்கபட்டது எதென்சிலிருந்து வால்ஸ்ரீட் வரை கிளர்ச்சிகள் நிகழ்ந்தன.உலகளாவிய பயங்கரவாதத்திற்கெதிரான போர் இனசமூக மோதல்களுக்கு இட்டுச் சென்றது.இளைய தலைமுறையின் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு பிரிவினர் இந்த இஸ்லாமிய அரசுடன் இணையும் போக்கு காணப்படுகிறது.இந்த ஐ.எஸ் ஈராக்கிய சியா பிரிவு மற்றும் குர்திஸ்- சுதந்திர எண்ணங்கொண்ட மக்கள் மற்றும் அறிவிற்கெதிராகச் செயற்படுகிறது.ஐ.எஸ் தலிபான் போன்றவை எவ்விதத்திலும் சகித்துக் கொள்ளப்படமுடியாதவை.இவை பற்றி நேரடி அனுபவம் இல்லாத கனடியர்கள் ஒட்டோவா பாராளுமன்ற கட்டிடத்திலும், கியுபெக்கிலும் நிகழ்ந்த சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்காசாவிலும், சிரியாவிலும்; நிகழ்பவை நம்மை நோக்கி வராது என்ற மேலைத்தேய வடஅமெரிக்க சிந்தனை வலுலிழந்து வருகிறது.சுற்றி வர எப்படியும் இருக்கட்டும் . புவிக் கோள் எப்படியும் இருக்கட்டும் .நாம் எமது வீட்டை ரம்மியமாக வைத்திருப்போம் என்ற கனவு தகர்ந்து வருகிறது.“எல்லோரும் இன்புற்றிருக்கவே இவ்வுலகு”இந்த உலகின் இருட்டு மூலைகள் எல்லாம் வெளிச்சம் பாய்ச்சப்படவேண்டும்.பட்டினியும், நோயும், யுத்தமும் ஒழிய வேண்டும்.இவ்விடத்தில் தான் காஸ்டரோ மனிதகுலத்தின் இருப்பிற்காக வாழ்விற்காகா பேதங்களுக்கப்பால் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான அவசியத்தை வலியுறுத்துகிறார். சுகு-ஸ்ரீதரன்
Aucun commentaire:
Enregistrer un commentaire