மத பாப்பராசர் பிரான்ஸிஸ் இலங்கை பயணம் குறித்து; மத பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் தலைமையில் 12 மறை மாவட்டங்களின் மத ஆயர்களும் எதிர்வரும் 1ஆம் திகதி திங்கட்கிழமை கொழும்பில் ஒன்று கூடி ஆராயவுள்ளனர் என்றும் அதன் பின்னரே மத பாப்பரசரின் வருகையை உறுதிப்படுத்த முடியும் என்றும் மத பேராயர் இல்லம் கூறியதாக கொழும்புச் செய்தியாளர் குறிப்பிட்டார்.ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி மத பாப்பரசர் இலங்கைக்கு செல்வதை வர்த்திக்கான் மத நிர்வாகம் விரும்பவில்லை என்று சுட்டிக்காட்டிய மத பேராயர் இல்லம் அது தொடர்பாக கலந்துரையாடி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கோரியதாகவும் தெரிவித்துள்ளது.திங்கட்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ள மாநாட்டில் தற்போதைய நிலைமைகள் தொடர்பாக ஆராயப்படும் என்றும் ஜனாதிபதி வேட்பாளர்கள் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிட வேண்டும் என தீர்மானம் ஒன்றை நிறைவேற்றவுள்ளதாகவும் மத பேராயர் இல்ல தகவல்களை மேற்கோள்காட்டி செய்தியாளர் தெரிவித்தார்.இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக வடக்கு கிழக்கில் உள்ள நான்கு தமிழ் மத ஆயர்களும் இன்று சனிக்கிழமை கொழும்புக்கு சென்றுள்ளமை
குறிப்பிடத்தக்கது.அதேவேளை வடக்கு கிழக்கில் குறிப்பாக வடபகுதியில் சிவில் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தலையிடுவது மற்றும் இராணுவ அடக்குமுறைகள் தொடர்பான அறிக்கை ஒன்றை நான்கு தமிழ் மத ஆயர்களும் மாநாட்டில் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது ; .இந்து இஸ்லாம் பவுத்தம் கிருஸ்தவம்.அனைத்திலும் மனதலவில் விழக்கம் இல்லாமல் உறுப்பினர்கள் ஆக்கப்பட அனைத்து அப்பவி மக்களும் மதங்களின் கைகலில் விழாமல் பாதுகாக்குமா இலங்கையின்னுள் அனைவருக்கும் பசியை போக்கும் உளகமகா சட்டம் ...
Aucun commentaire:
Enregistrer un commentaire