
துபாய் : துபாயில் சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் 10 பேர் உட்பட, 15
தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள
துபாயில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள் பல்வேறு தொழில் நிறுவனங்களில்
பணியாற்றி வருகின்றனர். இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த சுமார் 27
தொழிலாளர்கள், கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு, மினி பஸ்சில் சென்ற போது
நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது, பஸ் மோதியதில், தொழிலாளர்கள் 15 பேர்
சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில், 10 பேர் பீகார்
மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது. துபாயில் இந்தாண்டு நடந்த
விபத்துகளில் இந்த விபத்தில் தான் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக செய்தி
வெளியாகியுள்ளன.
Aucun commentaire:
Enregistrer un commentaire