இரு வெளியுறவு அமைச்சர்கள், ஒரு ஜனாதிபதி (சுஷ்மாவுக்கு பின்னால் நிற்பவர் இலங்கை வெளியுறவு அமைச்சர் பீரீஸ்): “நீங்க அடிக்கடி நம்மூருக்கும் வந்து போகணுமுங்க”
நேற்று, டில்லியில் நடைபெற்ற பிரதமர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷே, உடனடியாக நாடு திரும்பாமல், இன்று பிரதமர் மோடியை சந்திப்பதற்காக டில்லியில் தங்கியுள்ளார்.
இன்று காலை 10.30-க்கு ராஜபக்ஷே, பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்தப் பட்டியலில், பிரதமர் மோடி மற்றும் ராஜ்நாத் சிங் (உட்துறை அமைச்சகம்), ஆகியோருக்கு அடுத்தபடியாக ‘சுஷ்மா ஸ்வராஜ் – வெளியுறவுத் துறை, மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுஷ்மாவுக்கு வெளியுறவு அமைச்சு ஒதுக்கப்படலாம் என முன்பே ஊகிக்கப்பட்டதுதான்.
ஆனால், சுஷ்மா இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷேவின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு வெளியுறவுத்துறை கொடுக்க கூடாது என ஒரு லாபி, டில்லியில் ஸ்ட்ராங்காக நடந்து கொண்டிருந்தது.
அதையடுத்து, அவருக்கு வேறு துறை ஒதுக்கப்படலாம் என்ற ஊகங்களும், மீடியாக்களில் அடிபட்டுக்கொண்டு இருந்தன.
அதே நேரத்தில் இலங்கையில் உள்ள ஆங்கில, மற்றும் சிங்கள மீடியாக்களில், “சுஷ்மாவுக்கு வெளியுறவுத்துறை வழங்கப்பட்டால், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேம்பாடு அடையும்” என ஆய்வுகள் வெளியாகிக்கொண்டு இருந்தன.
இந்த நிலையில், ‘காகம் உட்கார பனம்பழம் விழுந்ததா’ என்று தெரியவில்லை.., இன்று வெளியான பட்டியலில், சுஷ்மாவுக்கு வெளியுறவு துறை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியான அதே நேரத்தில், ராஜபக்ஷேவும் டில்லியில் உள்ளார்!
அடுத்து என்ன?
நேற்று கருப்புக்கொடி காட்ட டில்லி சென்ற வைகோ, இன்னமும் அங்குதானே உள்ளார்? பேசாமல், அடுத்த போராட்டத்தை அறிவித்து விடலாம்! இதோ.. அந்த அறிவிப்பு:சுஷ்மா ஸ்வராஜை வெளியுறவுத்துறையில் இருந்து மாற்றும்வரை, வைகோ டில்லியில் உண்ணாவிரதம்”இந்திய ஜனாதிபதி – மஹிந்த பேச்சு
Aucun commentaire:
Enregistrer un commentaire