இன்று மாலை குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், நரேந்திர மோடியுடன் 23 மத்திய அமைச்சர்களும், 10 இணை அமைச்சர்களும், 11 தனி பொறுப்பு அமைச்சர்களும் பதவியேற்பார்கள் என்று செய்திகள் வெளியாகி உள்ளன. இதற்காக டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகை வளாகத்தில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள வெளிப்புற முற்றத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, நரேந்திர மோடிக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்துவைக்கிறார்.
குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், பாஜக மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களின் ஆளுநர்கள், முதல்வர்கள், வெளிநாட்டு தலைவர்கள், வெளிநாட்டுத் தூதர்கள் உள்ளிட்ட சுமார் 4,000 பேர் இந்த விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இதையடுத்து, இங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விழா நடைபெறும் பகுதியில் அத்துமீறியும், அனுமதியின்றியும் விமானங்கள் பறக்காமல் தடுக்கும் வகையில் இந்திய விமானப் படை வான்வழிக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. மேலும், பாதுகாப்புப் பணியில் 15,000 மத்திய, மாநில காவல் துறைகளின் கமாண்டோ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Aucun commentaire:
Enregistrer un commentaire