தமது ட்விட்டர் பக்கமான "@PresRajapaksa"வில் இன்று இளைஞர்களின் கேள்விகளுக்கு மகிந்த ராஜபக்சே பதில் அளித்தார்.சமூக வலைத்தளங்களைத் தடைசெய்தால் தனது வீட்டில் மகன்களிடமிருந்தே புரட்சியை எதிர்கொள்ள நேரிடும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ருவிட்டர் சமூக வலைத்தளத்தினூடு எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வியாழக்கிழமை மதியம் 11.30 மணியளவில் பதிலளித்தார்.
அதன்போது, சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் ருவிட்டர் ஆகியன இலங்கையில் தடை செய்யப்படுமா? என்று முன்வைக்கப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பேஸ்புக்கில் எனக்கு 300 ஆயிரம் விருப்பங்கள் (Likes) உள்ளன. ருவிட்டரில் நான் 25 ஆயிரம் பின்தொடர்பவர்களைத் தாண்டியுள்ளேன். அப்படியானதொரு நிலையில், நான் எப்படி இந்த சமூக வலைத்தளங்களை தடை செய்வேன் என்று அவர் பதிலளித்துள்ளார்.
அத்தோடு, இலங்கையில் மத விவகாரங்களை அடிப்படையாகக் கொண்ட முரண்பாடுகள் இடம்பெறவில்லை. சிறு சிறு சம்பவங்கள் மாத்திரமே பதிவாகியுள்ளன என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார். Pd. @prabudeepan: போரினால் பாதிக்கப்பட வடக்கு கிழக்கு வாழ் இளைஞர்கள் மேம்பாட்டுக்கான திட்டங்கள் என்ன வைத்திருக்கிறீர்கள்? @PresRajapaksa: இந்த இளைஞர்களிடம் இருந்து பயங்கரவாதம் அகற்றப்பட்டுவிட்டது. அவர்களை நாங்கள் மேம்படுத்தி வருகிறோம்.என்றார்

Aucun commentaire:
Enregistrer un commentaire