jeudi 22 mai 2014

விசாரணையை ஏற்றுக்கொள்ள முடியாது;மஹிந்த ராஜபக்­ச

news
சர்வதேச விசாரணையை இலங்கை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது என்று ஐ.நா செயலாளர் பான் கீ மூனிடம் நேரடியாகத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­ச, பான் கீ மூனை இலங்கைக்கு மீண்டும் வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
சீனாவில் நடைபெறும் இரண்டு நாள் சர்வதேச மாநாட்டுக்காக சென்றுள்ள ஜனாதிபதி அந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்கு வந்திருந்த ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் நேற்றுப் பிற்பகலில் தனிப்பட்ட சந்திப்பு ஒன்றை நடத்தினார். 
அந்தச் சந்திப்பின் போதே இந்த அழைப்பை ஜனாதிபதி மஹிந்த விடுத்தார் என்று ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட சில நாள்களில், ஐ.நா. செயலாளர் நாயகம் பான்கீ மூன் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். 
அதற்குப் பின்னர் இப்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதற்காக இலங்கைக்கு மீண்டும் வருகை தரும்படி ஜ.நா. செயலரை ஜனாதிபதி அழைத்துள்ளார். 
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகளை தமது அரச செயற்படுத்தி வருகின்றது என்று ஐ.நா. செயலாளர் நாயகத்திடம் கூறியுள்ள ஜனாதிபதி ராஜபக்ச­ பரிந்துரைகளில் சுமார் 30 வீதம் ஏற்கனவே நடைமுறைப் படுத்தப்பட்டுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்திப்பின் போது, "போரின் போது இடம்பெற்றவை எனக் கூறப்படும் அத்துமீறல்கள் குறித்து உள்நாட்டுப் பொறி முறை மூலம் முழு அளவில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கத் எனது அரசு திடசங்கற்பம் பூண்டுள்ளது. சர்வதேச விசாரணைப் பொறிமுறை என்பது இலங்கை மக்களின் நோக்கைப் பிரதிபலிக்கவில்லை'' எனவும் ஜனாதிபதி எடுத்துரைத்துள்ளார் என்றும் அலுவலக வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire