தாய் நாடு திரும்பிய மற்றும் நாடு கடத்தப்பட்ட மலையகத் தமிழர்களின் இன்னல்கள் குறித்து மிக சமீபகாலமாக முக்கியமான பதிவுகள் வெளிவந்திருக்கின்றன. இந்த காணொளி புதிய தலைமுறை தொலைக்காட்சியில் வெளியான சிறந்த ஆவணத்தொகுப்பாகும். எங்கள் வரலாற்றை பதிவு செய்ய நிகழ்ந்த, நிகழ்ந்துகொண்டிருக்கும் கொடுமைகள் குறித்து பதிவு செய்யுமளவுக்கு போதிய வளமற்ற பலமற்ற எங்களுக்கு இத்தனை வருடங்கள் பிடித்திருக்கிறது மெல்ல மெல்ல எங்கள் கதை பேச. எப்போதுமே குரலற்ற மக்களாக இருந்துவந்த எங்களுக்கு இதுபோன்ற பதிவுகள் பெரும் த்சுனை புரிகின்றன. புதிய தலைமுறைக்கு எங்கள் நன்றிகள். இது ஒரு சிறு துளி மாத்திரமே... இன்னமும் அகதிகளாக முகாம்களில் கூட பல தசாப்தங்களாக தமிழகத்தில் வாழ்க்கையைத் தொடரும் கதைகளும் பதிவு செய்யப்பட வேண்டியவை. மேலும் சொந்த ரத்த உறவுகள் எப்படி மலையகத்தில் கொஞ்சமும், தமிழகத்துக்கு மிச்சமுமாக பெயர்த்து அனுப்பப்பட்டார்கள் என்கிற கதைகளும் பதியப்பட வேண்டும். அதிகாரம் இழக்க செய்யப்பட்டு எங்களை இரு தேச அதிகார பீடங்களினாலும் பிடுங்கியும் பெயர்த்தும் அலைகழித்து இன்றுவரை நவீன அடிமைக்குடிகளாக மாற்றப்பட்ட வரலாறும் இன்றைய நிலையும் பதிவு செய்யப்பட வேண்டும். நமது மலையகம் அதன் ஒரு பகுதியை செய்துவருகிறது. இந்த கதைகள் பார்த்துவிட்டு கண்ணீரை துடைத்துவிட்டு கடந்து செல்லும் "பரதேசி" திரைப்படம் போன்றதல்ல. இது இரத்தமும் சதையுமான வாழ்வு தோழர்களே. தொடரும் வாழ்வு. எங்கள் கரங்களை பலமாக்க எமக்கு பக்க பலமாக இருங்கள் தோழர்களே
Aucun commentaire:
Enregistrer un commentaire