நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தி திட்டங்களை பூரணப்படுத்துவதற்காக இலங்கை பொது மக்கள் ஊழியர் படை தமது அளப்பரிய ஆதரவை வழங்கி வருகின்றது.
2009ம் ஆண்டு பயங்கரவாதம் நிறைவு பெற்றதன் பின்னர் நாடு அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் நிமித்தம் வேலையில்லாத நபர்களை இராணுவத்தில் இணைத்துள்ளதுடன் அவர்கள் நாட்டின் அபிவிருத்தி திட்டங்களில் பங்களிப்பை வழங்கி வருகின்றனர், அத்துடன் 8500 தொடக்கம் 10000 வரையிலான இராணுவ வீரர்கள் இப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.
இலங்கை திறைசேரியின் வருடாந்த ஒதுக்கீடுகளுக்கு அமைய இவர்கள் இராணுவத்தில் இணைக்கப்பட்டதுடன் இதன் மூலம் இவர்கள் சிறந்த ஊதியம், மருத்துவம் மற்றும் பல துறைகளிலும் பயனடைந்துள்ளனர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் திட்டங்களான அகுரேகொட இராணுவ தலைமையகம், டொரிங்டன் சதுக்கம், கொழும்பு மிதக்கும் சந்தை தொகுதி மற்றும் நகர அபிவிருத்தி திட்டங்களில் இவர்கள் பணி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் தச்சு வேலை, கணக்கெடுப்பு, எழுத்தாளர், உணவு தயாரிப்பு மற்றும் சமையல், பொதுக் கடமைகள், கடை நிர்வாகம், கணினி இயக்குனர், மோட்டார் இயக்குனர், இசை மற்றும் முன் பள்ளி ஆசிரியர் முதலியன உற்பட எழுபது துறைகளில் சேவையாற்றுகின்றனர்.
மருத்துவ பரிசோதனை உற்பட ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன் இராணுவத்தின் தொன்டர் படையணியில் சேவையாற்றுவதற்கு அவர்கள் தகுதி பெருவதுடன் குறித்த அந்த சேவைக்கான வழமையான பெருவனவையும் பெற்றுக் கொள்வர். அத்துடன் தேவைக்கேற்ப சீறுடைகளையும் வேலைக்கு உகந்த ஆடைகளையும் அணிய வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவர்கள் தொழில் சார்ந்த வேலைகளுக்கு மட்டும் மட்டுப் படுத்தப்பட் டுள்ளதுடன் இராணுவ சம்பந்தமான வேலைகளில் இருந்து முற்றாக விலக்களிக் கப்பட்டுள்ளனர், அதுமற்றுமன்றி இவர்கள் மருத்துவ வசதி உள்ளடங்கலாக குறித்த சேவைக்குரிய நலன்புரி, மற்றும் அனைத்து சேவைகளையும் பெற தகுதிபெருவர்.
தேசத்தை கட்டியெழுப்பும் முகமான அபிவிருத்தி திட்டங்களுக்காக இவர்களின் மறைமுகப் பங்களிப்பு வெகுவாக பாராட்டத்தக்கதாகும், போர் வீரர்கள் நாட்டை ஒன்றிணைப்பதற்காக போராடினார்கள், இலங்கை பொது மக்கள் ஊழியர் படையினர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக பல துறைகளில் போராடுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய அமேரிக்காவிலும் இது போன்ற ஒரு பொது மக்கள் ஊழியர் படையானது பொது மக்கள் கண்கானிப்பு படை என்ற பெயரில் 1933-1942 ஜனாதிபதி ப்ரேங்ளின் ரூஸ்வல்டின் எண்ணக்கருவுக்கமைய உருவாக்கப்பட்டது, இதில் வேலையில்லாத மற்றும் திருமணமாகதவர்கள் பங்களிப்பு செய்தனர், இதற்கான ஆட்சேர்ப்பின்போது ஒரு தடவைக்கு ஆகக்கூடியது 300000 பேர் வரை உள்வாங்கப்பட்டதுடன் இதற்கமைய 9 ள் 3 பில்லியன் மரங்களை அமெரிக்காவின் மீள் பசுமை திட்டத்திற்காக நடுகை செய்ததுடன் 800 க்கும் மேற்பட்ட தேசிய பூங்காக்களையும் உருவாக்கியுள்ளனர். மற்றும் பின் தங்கிய பிரதேசங்களில் பாதைகள் மற்றும் இராணுவ கட்டடங்களையும் நிர்வருடங்களில் 2.5 மில்லியன் இளைஞர்கள் இதில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. இவர்கமானித்துள்ளனர்..
புலம்பெயர் நாடுகளில் உள்ள மற்றும் இலங்கையால் தடைசெய்யப்பட்ட அமைப்புகளின் செயல்பாடுகளை, கண்காணிக்க 18 புலனாய்வு அதிகாரிகளை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயளாலர் வெளிநாட்டுகளுக்கு அனுப்பியுள்ளதாக சிங்கள டெய்லி என்ற பத்திரிகை கடந்த 2 நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது. இப்பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு கருத்து வெளியிடுகையில் அது போன்ற ஒரு செயற்பாடு அமைச்சினால் மேற் கொள்ளப் படவில்லை என்றும் வெளி நாடுகளுக்கு அனுப்பப்பட்ட புலனாய்வு அதிகாரிகள் குறித்த நாடுகளில் உள்ள அதிகாரிகளுக்கு சர்வதேச ரீதியான ஒரு செயற்பாட்டுக்கு பயிற்சி வழங்கும் முகமாகவே சென்றுள்ளனர் என்ற கருத்தையும் முற்றாக மறுக்கின்றது.இலங்கை அரசு அன்மையில் எல்ரீரீஈ அமைப்பையும் அதனுடன் தொடர்புபட்ட ஏனைய அமைப்புக்களையும் மக்கள் பாதுகாப்பு சட்டம் பிரிவு 40 மற்றும் ஐ.நாவின் பாதுகாப்பு கழகத்தின் பயங்கரவாத தடுப்பு தீர்மானத்திறகமையவும் பட்டியலிட்டு தடை செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சினால் வெளி நாடுகளுக்கு அனுப்பபட்டிருக்கும் அதிகாரிகள் அரச கடமைகளுக்காக சென்றுள்ளதுடன், அன்மையில் பட்டியலிடப்பட்ட அமைப்புக்களினாலும் நபர்களினாலும் வரக்கூடிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் குறித்த நாடுகளுக்கு வெளிவிவகார அமைச்சு அறிவூட்டியுள்ளதுடன் இலங்கையில் பணி புரியும் குறித்த நாடுகளின் பிரதிநிதிகளுக்கும் இக்குழுக்கள் மற்றும் நபர்கள் தெடர்பில் அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைளையும் விளக்கியுள்ளது.
எல்ரீரீஈ மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட வெளி நாடுகளில் செயற்பட்டு வரும் அமைப்புக்களினால் உத்தியோக பூர்வ ஊடகங்களில் வெளியிடப்பட்ட
Aucun commentaire:
Enregistrer un commentaire