mardi 20 mai 2014

தப்பி செல்கையில் பிடிபட்டால் விசாரணை.என்னடா கேசவா இலங்கையில் என்னதான் நடக்கின்றது.


வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனின் பாதுகாப்புக்கென பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்படி பொலிஸ் பாதுகாப்புடனேயே அனந்தி சசிதரன் இன்று (16)
வடமாகாண சபையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொள்ள வந்திருந்தார். வடமாகாண சபை உறுப்பினர்கள் தங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வேண்டுமென்று விண்ணப்பிக்க முடியும் என வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்திருந்தமையடுத்து, அனந்தி சசிதரன் விண்ணப்பம் செய்து மேற்படி பொலிஸ் பாதுகாப்பினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் புலி உறுப்பினர்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு. அது கேபி இல் ஆரம்பித்து அனந்தி வரை. பொது மக்களுக்கு துப்பாக்கி மிரட்டல். அதுவும் உரிமைகளுக்காக குரல் கொடுத்தால். மேலும் வெளிநாடுகளுக்கு இடம் பெயர் பாஸ்போட் விசா இத்தியாதி. தமிழ் செல்வனின் மனைவியிற்பு சாதாரண பொது மக்கள் வெளிநாட்டிற்கு பிழைப்பிற்கான தப்பி செல்கையில் பிடிபட்டால் விசாரணை தண்டனை இத்தியாதி....? என்னடா கேசவா இலங்கையில் என்னதான் நடக்கின்றது. பிரேமதாஸ காலத்திலிருந்து இன்று வரை புலிகள் அரசின் விருந்தினர்கள்தான் போங்கள் நல்ல தமாசுதான்.

Aucun commentaire:

Enregistrer un commentaire