mardi 13 mai 2014

இந்திய – இலங்கை ‘ரயில்-கப்பல்-ரயில்’ பயணம் (Boat Mail) போக்குவரத்து மீண்டும் ஆரம்பமாகுமா?


IMG_36IMG_360IMG_3607IMG_3607qIMG_36066IMG_36062IMG_36057IMG_36053இலங்கை – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் பல வருடங்களாக தொடர்ந்த ஓர் போக்குவரத்து நடைமுறையே இந்திய – இலங்கை ‘ரயில்-கப்பல்-ரயில்’ பயணம் (Boat Mail) போக்குவரத்து.
இலங்கை – இந்திய நாடுகளை தரை மற்றும் கடல் மார்க்கமாக இணைத்த மன்னார் ரயில் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட பாம்பன் பாலத்தின் ஊடான ரயில் பாதையில் 1914 ஆம் ஆண்டு பெப்ரவரி 24 ஆம் திகதி போக்குவரத்து ஆரம்பமாகியுள்ளது.
இந்தியாவிலிருந்து தனுஷ்கோடி வரை பாம்பன் பாலத்தின் ஊடாகப் பயணித்து, பின்னர் அங்கிருந்து கப்பல் மூலம் தலைமன்னாருக்கு வந்து அங்கிருந்து  மதவாச்சி வரை ரயில் மூலம் பயணிக்கும் போக்குவரத்து பல தசாப்த்தங்களாக நீடித்தது.
எனினும் 1964 ஆம் ஆண்டு வீசிய கடும் புயல் காரணமாக தனுஷ்கோடிப் பகுதி முற்றாக அழிந்தபோது, அங்கிருந்த ரயில் பாதையும் மறைந்து போனது.
பின்னர் இலங்கையில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையும் முற்றாக சேதமடைந்தது.
இதன் காரணமாக ஆங்கிலேயேர்கள் ஆரம்பித்த ரயில்-கடல்-ரயில் பயணம் தடைப்பட்டது.
தற்போது இந்தியாவில் ராமேஸ்வரம் வரையிலான ரயில் சேவைகள் செயல்பட்டு வருகிறன.
இந்நிலையில் தலைமன்னார் முதல் மதவாச்சி வரையிலான ரயில் பாதையை மீண்டும் அமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியா – இலங்கை இடையே பாம்பன் பாலம் வழியாக பல ஆண்டுகள் செயல்பட்ட ரயில்-கடல்-ரயில் சேவை இருநாடுகளுக்கும் பல நன்மைகளை வழங்கியுள்ளது.
வரலாற்றுக் குறிப்பு:-
தமிழகத்தின் சென்னையில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புக்கு, நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரயில் சேவை இருந்தது என்றால் பலர் நம்பமாட்டார்கள்.
கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் என பல வகையிலும், தமிழகத்திற்கும், இலங்கைக்கும் சிறந்த தொடர்புகள் இருந்த காலம் அது.
நூறு ஆண்டுகளுக்கு முன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ‘போட் மெயில்’ என்று அழைக்கப்பட்ட ஒரு ரயில் இரு நாடுகளுக்கு இடையே முக்கிய இணைப்பாக இருந்துள்ளது.
சென்னைக்கும் கொழும்பிற்கும் இடையே போக்குவரத்து தொடர்பை ஏற்படுத்துவதற்காக இந்த திட்டம் 1876இல் உருவாக்கப்பட்டது
இதன் ஒருகட்டமாக பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் கட்டப்பட்ட பாம்பன் பாலத்தின் கட்டுமானப் பணிகள் 1913இல் நிறைவடைந்தன.
இதனை தொடர்ந்து 1914, பெப்ரவரி 24ஆம் திகதி முதல், ‘போட் மெயில்’ ரயில் சேவை ஆரம்பமாகியது.
சென்னையில் இருந்து தனுஷ்கோடி வரை ரயில் பயணம், அதனை தொடர்ந்து தனுஷ்கோடியில் இருந்து இலங்கையின் தலைமன்னார் வரை 36கிலோமீற்றர் தூர கப்பல் பயணம், பின்னர் தலைமன்னாரில் இருந்து கொழும்பு வரை மீண்டும் ரயில் பயணம் என்று இந்த போக்குவரத்து தொடர்பு இருந்துள்ளது.
சென்னை, எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து, ‘போட் மெயில்’ ரயில், தனுஷ்கோடி துறைமுகத்தை சென்றடையும். அங்கிருந்து, கப்பல் மூலம், பயணிகள், தலைமன்னாருக்கு அழைத்து வரப்படுவார்கள்.
பின்னர் மீண்டும், ரயிலில் பயணித்து, கொழும்பை சென்றடைவர்.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே, பல ஆண்டுகளாக, வர்த்தகம் நடப்பதற்கு தனுஷ்கோடி முக்கிய துறைமுகமாக விளங்கியது. 1964 டிசம்பர், 24ஆம் திகதி இந்த பகுதியை தாக்கிய புயல் காரணமாக ஒரே இரவில் தனுஷ்கோடியை அழிவடைந்தது.
இந்த புயலில் சிக்கி 1,800 பேர், உயிரிழந்ததாகவும் இதன் பின்னர் தனுஷ்கோடி வரை நடத்தப்பட்ட ‘போட்மெயில்’ ரயில் ராமேஸ்வரத்துடன் நிறுத்தப்பட்டது.
இலங்கை – இந்திய கடல்வழி ரயில் பயணமும், அன்றோடு முடிவுக்கு வந்தது.
எது எவ்வாறு அமைந்தாலும், இந்த போக்குரவத்து முறைமையை மீண்டும் செயற்படுத்துவதற்கான ஏற்பாடுகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் முதற்கட்டமாக கொழும்பு முதல் தலை மன்னார் வரையான ரயில் தண்டவாள பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்திய – இலங்கை ‘ரயில்-கப்பல்-ரயில்’ பயணம் (Boat Mail) போக்குவரத்து மீண்டும் இந்திய – இலங்கை நாடுகளுக்கு இடையில் தொடர்பினை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை தற்போது எமதுள்ளங்களுக்கு தெளிவாக தெரிகின்றமை, மகிழ்ச்சியளிக்கின்றது

Aucun commentaire:

Enregistrer un commentaire